Thottal Thodarum

Dec 23, 2008

சூடான இடுகை - லக்கிலுக்கின் தொடர்ச்சி....

அந்த சகோதர கடை ஓனர்கள், நடத்திய விஷயங்கள் ஒன்றும் புதுசில்லை. ஏனென்றால் இதுக்கு முன்னாலே இவர்கள் கடை நடைத்திய போது அவர்களின் பல ஏரியாக்களில் கடை ஆரம்பிக்கும் போது அதை இப்போது எதிர் கடையில் நிர்வாகம் பார்த்து கொண்டிருக்கும், அவரை வைத்துதான் சகோதரர்கள் ஆரம்பிப்பார்கள். அவரும் அங்கு திறமையாய் கடை நடத்தி அந்த கடையை நெ.1 என்று கொண்டு வந்தவுடன் அவரை மீண்டும் வேறு ஊரில் கடை நடத்த அனுப்பி வைப்பார்கள்.

பின்பு அவர்களுக்கு என்ன பிரச்சனையோ.. அவரிடம் எந்த காரணத்தை கொண்டும் திரும்பவும் அவர்களின் கடை நடத்தும் தொழிலுக்கு வரக் கூடாது என்று மிரட்டி எழுதி வாங்கி கொண்டு அவரை விரட்டி விட்டதாகவும் ஒரு விஷயம் உண்டு. இதற்கு அப்போது அந்த குடும்பத்தின் பெரியவரின் ஆசியுடன் தான் நடத்த பட்டது.

அதை வைத்துதான் பெரியவர் தனியாய் கடை ஆரம்பித்ததும், சரியாய் அந்த நிர்வாகியை கூட்டி கொண்டு வந்தது, சகோதர கடைகாரர்களூக்கு பீதீயை கிளப்பிவிட்டது. நிர்வாகிக்கும் சரியான ஆதரவு பெரியவர் தந்ததால் ஒரே வருடத்தில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் புதுக் கடையை கொண்டுவந்துவிட்டார். புதுசாய் எல்லா பெரிய கம்பெனி சரக்கும் பெரியவர் நடத்தும் கடைக்கே போக, வேறு வழியில்லாமல் சகோதர கடைகாரர்கள் டவுசர் அவிழ்க்க வேண்டியாதாய் போயிற்று, இல்லாவிட்டால் இவர்களாவது புது சரக்கை விலை கொடுத்து வாங்கற்தாவது..

என்னதான் கண்கள் பனித்து, இதயம் கனத்து, ரவுண்டாய் பெற வேண்டியதை பெற்று, சேர்ந்தாலும், பெரியவர் இவர்களை மீண்டும் நம்புவதாய் தெரியவில்லை.. பிரிச்சது பிரிச்சதுதான் அவங்க அவங்க கடை, அவங்க அவங்க யாவாரம்னு பெரியவ்ர் தெளிவா இருக்கிறதுனால.. சகோதர கடைக்காரங்க.. ஆடிப் போயிட்டாங்க.. சேர்ந்ததுனால, எல்லாத்தையும் ஒண்ணாக்கிடலாம்னு நினைச்சிகிட்டு இருந்த நினைப்புல மண் விழுந்த மாதிரி ஆயிருச்சு.. பெரியவர் மன்னிப்பு கேட்க வச்ச விஷயம்..

இவங்களுக்கு போட்டியா மதுரையில அவங்க மாமா அரம்பிச்ச சரக்கு போடற் கடையில இவங்க கடை சரக்கு இப்போ கிடைக்கிறதாவும் பேசிக்கிறாங்க.. ஆன மதுரைக்கார மாமா கடைய இருக்கிறபடி நடத்த போறதாதான் பேச்சு..

அதே போல இங்க மாமா ஆதரவோட நடக்குற சரக்கு போடற வியாவாரத்தை திரும்ப எடுக்க பாக்குறாய்ங்க..

இப்போதைக்கு அவ்வளவுதான்
Post a Comment

9 comments:

அக்னி பார்வை said...

நமெக்கெதுக்க் அர்ஹெல்லாம்..நாம் யார் வம்புக்கும் போரதில்ல ..

அத்திரி said...

//இவங்களுக்கு போட்டியா மதுரையில அவங்க மாமா அரம்பிச்ச சரக்கு போடற் கடையில இவங்க கடை சரக்கு இப்போ கிடைக்கிறதாவும் பேசிக்கிறாங்க.. ஆன மதுரைக்கார மாமா கடைய இருக்கிறபடி நடத்த போறதாதான் பேச்சு..//

மதுரையில ரெண்டு பேருமே ஆளுக்கு பாதியாய் பிரித்து வியாபாரம் பண்ணப்போவதாக தகவலுங்க,,,

Cable சங்கர் said...

//நமெக்கெதுக்க் அர்ஹெல்லாம்..நாம் யார் வம்புக்கும் போரதில்ல ..//

அதுக்காக இவ்வளவு பயந்து போய் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடவா அடிக்கிறது.. ஒண்ணுமில்ல பயப்படாதீங்க..

Cable சங்கர் said...

//மதுரையில ரெண்டு பேருமே ஆளுக்கு பாதியாய் பிரித்து வியாபாரம் பண்ணப்போவதாக தகவலுங்க,,,//

பிரிக்கிறது எல்லாம் இல்ல.. இப்ப எப்படி இருக்குதோ அப்படியேன்னு சொல்லிக்கிறாங்க..

அத்திரி said...

//மதுரையில ரெண்டு பேருமே ஆளுக்கு பாதியாய் பிரித்து வியாபாரம் பண்ணப்போவதாக தகவலுங்க,,,//



நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலுங்கோ,,,>>>>>>

Cable சங்கர் said...

//நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலுங்கோ,,,>>>>>>//

அப்படின்னா சரிதான். அத்திரிசார்.

அக்னி பார்வை said...

:)))))))))))))))

Cable சங்கர் said...

//:)))))))))))))))/

வீடு போய் சேர்ந்தாச்சா..?

Ganesan said...

எங்கள் அண்ணனை தேவையில்லாமல் வம்பிலுப்பதை கண்டிகிறேன்.


பி.கு

அ அ அ அ அ அ என்றால் அன்பு, ஆற்றல் , அக‌ர‌ம்.

அன்புடன்
காவேரி க‌ணேஷ்.
ம‌துர‌