Posts

Showing posts with the label பதிவர்கள்

அனைவரும் வருக….

கொஞ்சம் தேநீர் நிறைய்ய வானம் www. Thadagam.com & www. chikky mukky .com இணைந்து நடத்தும் தமிழ் இணையதளம் குறித்த சிறு கருத்தரங்கு நாள்: 10 -07 -2010 சனிக்கிழமை காலை 10 மணி இடம்: ஹெக்டே ஹால் ,அண்ணா யூனிவர்சிட்டி அலுமணிகிளப் அடையார் கேட் ஒட்டல் சிக்னல் எதிரே ,போட்கிளப் கோவை மாநாட்டில் நிகழ்ந்த இணையதள ஆய்வரங்கத்தின் குறுக்குவெட்டு பார்வை மற்றும் இணையதளங்களின் வரலாறு எதிர்காலம் மற்றும் தமிழ் எதிர்கொள்ளும் புதிய எழுத்துரு ப்ரச்னைகள் குறித்த கலந்துரையாடல் வரவேற்புரை : தாரா கணேசன் சிக்கி முக்கி.காம் துவக்க உரை தமிழ் இணையதளங்களின் வரலாறு ஓசை செல்லா பதிவர் உலகம் இன்று கேபிள் சங்கர் உண்மைத்தமிழன் யுவ கிருஷ்ணா எப்படி உருவாக்கினேன் தான் உருவாக்கிய ஜீவா எழுத்துரு பற்றி சிறுகதை எழுத்தாளர் ஜி.முருகன் சிறப்பு பங்கேற்பு இணையதளங்களின் துவக்கலாம் எதிர்காலம் சிட்னி பாலா (எ) பாலா பிள்ளை தொடர்ந்து பங்கேற்பாளர்கள் பதிவர்கள் கலந்துரையாடல் நன்றியுரை அமுதரசன் தடாகம். காம் -- பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் வந்திருந்து கருத்தரங்கை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கேபிள் சங்கர்

ஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிபரப்பு.

Image
NDTV HINDU   என்கிற சேனலில் செம்மொழி மாநாட்டுக்கு செலவு செய்யப்படும், சுமார் 350 கோடி தேவையா? இவ்வளவு பெரிய மார்கெட்டிங் தேவையா?,தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்களா? தமிழ் மொழியை கடை பெயர் பலகையில் போடச் சொல்லி கட்டாயப்படுத்துதல் நியாயமா..? வழக்குறைஞ்சர்கள் தமிழில் கோர்ட்டில் வாதிடுவது குறித்தான போராட்டம் தேவைதானா? தமிழர்கள் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்களா? தமிழ் தமிழ் என்று பேசி உசுப்பேற்றிவிட்டு தமிழகத்தை இன்னொரு மஹாராஷ்ட்ராவாக உருவாக்க நினைக்கிறார்களா? என்பது போன்ற சூடான கேள்விகளுக்கு தமிழில் பதிவெழுதும் பதிவர்களாகிய, அப்துல்லா, வெண்பூ, நர்சிம், கார்க்கி, ஆதி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆகியோருடன் உங்கள் கேபிள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல்.. இன்று மாலை 5.30 மணிக்கு என்.டி.டி.வி ஹிந்து சேனலில் ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பு நாளை காலை 7.00 மணீக்கும், இரண்டாம் பாகம், நாளை மாலை 5.30 ம்ணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு அடுத்த நாள் காலை 7.00 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். வால்க டமில்.. டிஸ்கி: யாராவது புண்ணியவான் முடிஞ்சா ரெக்கார்ட் செஞ்சு போடு...

வாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 கேள்விகள்?

Image
1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..?. 2 . அப்படியே எழுத ஆரம்பிச்சி ஒரு பத்து பதிவு வரதுக்குள்ளே, தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டு வரலைன்னு கவலைபட ஆரம்பிச்சி, ஓட்டு போடுங்க.. ஓட்டு போடுங்கன்னு விதவிதமா கூவறாங்களே அது ஏன்..? படிச்ச எங்களுக்கு நல்லாயிருந்தா ஓட்டு போட தெரியாதா..? 3 . கொஞ்சம் முகம் தெரிய ஆரம்பிச்ச உடனேயே உங்களுக்குள்ளேயே குருப் சேர்த்துகிட்டு, ஒருத்தரை ஒருத்தர் _______ விட்டுக்கிறீங்களே அது ஏன்..? 4 . அப்புறம் கருத்து சொல்றேன் பேர்விழின்னு A4 பேப்பர்ல முப்பது பக்கம் வர மாதிரியெல்லாம் பதிவை போட்டு, விஷயத்தை மட்டும் எழுதாம, வளவளன்னு எழுதி எங்க உயிரை வாங்குவது ஏன்.? 5 . எழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ..? பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..? 6 . பதிவர் சந்திப்புன்னு மாசா மாசம் எல்லாரும் சேர்ந்து கும்மியடிச்சிட்டு, உங்களுக்குள்ள கட்சி கட்டிகிட்டு, ஆளாளுக்கு அவங்களுக்கு பிடிச்சவ...