Posts

Showing posts with the label Dabangg

Dabangg

Image
வித்யாசமான படங்கள் இந்தியில் வந்து கொண்டிருக்கும் காலத்தில் கஜினி, ஹிந்தி போக்கிரியான வாண்டட் வந்து மீண்டும் ஒரு மசாலா மார்கெட்டை ஓப்பன் செய்த்து என்றால் அதை இன்னும் ஃபோர்ஸாக அடித்து சொல்லியிருக்கிறது தபங்.. தபங் படத்துக்கு போகும் போது ரெண்டு டிக்கெட் வாங்கி போங்கள் ஒன்று உங்களுக்கு, இன்னொன்று உங்கள் மூளைக்கு என்று நம்ம விஜயை கிண்டல் செய்கிறார் போல தொடர் எஸ்.எம்.எஸுகளால் கிண்டல் செய்யப்பட்ட படம் முதல் வாரத்திலேயே சுமார் நூறு கோடியை தட்டியிருக்கிறது. வழக்கமாய் நல்லவன்/ கெட்டவன், ப்ரச்சனை, நல்லவன் ஜெயிப்பது என்ற வரைமுறைக்குள் வரும் கதை என்றாலும் ஆர்டிஸ்ட் ப்ரெசென்ஸ் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் உணர்த்தும். சும்மா பூந்து விளையாடியிருக்கிறார் சல்மான் கான். ஆரம்ப சண்டைக் காட்சியிலிருந்து, கடைசி க்ளைமாக்ஸ் காட்சிவரை அவர் ராஜ்ஜியம் தான். ஒரு மாதிரியான அரகன்ஸ், நடை, டயலாக் டெலிவரி எல்லாவற்றையும் பார்த்தால் அவர்கள் சீரியஸாகத்தான் படமெடுத்திருக்கிறார்களா? இல்லை தமிழ் படம் போல கிண்டல் செய்திருக்கிறார்களா? என்ற சந்தேகம் நிச்சயம் வரத்தான் செய்யும் அந்தளவுக்கு நிஜமாகவே சீரியஸாய் ஒரு பக்க...