Posts

Showing posts with the label சதுரங்க வேட்டை

கொத்து பரோட்டா -4/8/14

Image
சதுரங்க வேட்டை திரைப்படத்தைப் பற்றி பனுவல் புத்தக நிலையத்தில் ஒர் கலந்துரையாடல் மற்றும் விமர்சனக் கூட்டம் திருவான்மியூரில் நடந்தது. அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். இயக்குனர் விநோத் எனக்கு ரொம்ப நாளாய் பழக்கம். தொலைபேசியிலும், இணையத்திலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஆனால் அன்று தான் நேரில் சந்தித்தோம். படம் பற்றி நிறைய பேர் நிறைய கருத்துக்களை சொன்னார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒர் அரவாணி தோழி படத்தில் ஒர் காட்சியில் பொட்டையா என்று வரும் வசனத்தை பற்றி கூறி சாடினார். இதே வசனம் நான்கைந்து முறை வேலையில்லா பட்டதாரி படத்தில் வருகிறது. அதை யாரும் கேட்டதாய் தெரியவில்லை. பொட்டை என்றால் அது அரவாணியைக் குறிக்கும் என்பது கூட அன்றைக்கு பல பேருக்கு செய்தியாய்த்தான் இருந்தது. ஏனென்றால் ஒர் பெரியவர் ஒருவர் அதை குறித்து பேச முயன்ற போது முகத்தில் அடித்தாற்ப் போல பதில் சொன்னார் அந்த அரவாணித் தோழி. ஆம்பளைகளை அவமானப் படுத்தும் விதமாய் திட்ட, நீ என்ன பொம்பளையா? என்று கேட்பது தான் பொட்டையா என்பதாய் மருவியிருக்கிறது என்பதுதான் என் கருத்தும். அரவாணிகளை அழைக்கும் சொல்லாய் எனக்கும் தெரியவில்லை. என...

கொத்து பரோட்டா -21/07/14- தொட்டால் தொடரும், Mofa, வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை,

Image
சென்ற வாரம் வளசரவாக்கத்திலிருந்து நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு பிரிசம் அண்ட் பிக்சலுக்கு போய்க் கொண்டிருந்தேன். அது ஒரு குறுகலான தெரு. எதிரே வெகு வேகமாய் ஒர் வண்டி ஹாரனுடன், பாஸ்ட் அண்ட் பியூரியசில் வருவது  போல வந்து கொண்டிருந்தது. நமக்கெதுக்குடா வம்பு என இடது பக்கம் ஓரம் கட்ட, அதே நேரத்தில் என் பின் பக்கத்திலிருந்து ஒரு வண்டி எதிர் வண்டி போலவே வெகு வெகு வேகமாய் வர, இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதவிருக்கும் வேளையில் சட்டென எதிர்புறம் வந்தவனும், என் பக்கம் வந்தவனும் அவரவர் இடது புறம் திருப்ப, என் பக்கம் வந்தவனின் ஹேண்டில் பார் என் வண்டியின் ஹாண்டில் பாரைத் தட்டிவிட, ஷணத்தில் மண்டைக்குள் மின்னல். 5நிமிடம் யாருமில்லாமல் வண்டி என் மேல் விழுந்திருக்க, வலது கால் முழுவதும் வண்டிக்குள் மாட்டிக் கொண்டு எடுக்க முடியாமல் “ஆ”வென அலறினேன். தூரத்தில் ரெண்டு பேர் யோசித்து எதோ சம்பவம் நடந்திருக்கு போல என யோசித்து, சரி போனாப் போட்டும் என்று வந்து எழுப்பினார்கள். இடித்தவனும் சரி, எதிர்பக்கம் ஓட்டி வந்தவனும் சரி அங்கு இல்லவேயில்லை. “யாருக்கும் ஈவுமில்லை இரக்கமில்ல பாஸு பாஸு” பாட்டு சரிதான் என தோன்ற...