Posts

Showing posts with the label உண்ணாவிரதம்..

ஈழதமிழனால் சம்பாதிக்கும்....

Image
ஈழதமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடந்து கொண்டுதானிருக்கிறது... ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதை சமீபகாலமாய் மீண்டும் தொலைக்காட்சியின் வாயிலாக மக்களூக்கு தெரியவருகிறது..தமிழர்களுக்கெல்லாம் தாங்கள் தமிழன் என்று உணர்வுபூர்வமாய் உணர்ந்து கொள்ள தமிழின தலைவர்கள் எல்லாம் தமிழ் உணர்வை தூண்டிவிட்டு, ஈழத்தமிழனுக்கு ஆதரவாய் ஆங்காங்கே மீட்டிங்குகளூம், போராட்டங்க்ளும், உண்ணாவிரதங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு மீடியாக்களின் பார்வையில் பரபரப்பாய் தெரிய சரியான தருணத்தை பயன் படுத்திக் கொள்கிறார்கள். தமிழ், தமிழ் என்று கூவிக் கொண்டு அதையே வியாபாரமாய் கொண்டுருப்பவர்கள் எல்லாம் எதையாவது செய்தாக வேண்டிய சூழ்நிலையில் ஆளுக்கொரு அறிக்கை விட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.. தமிழக அரசோ.. ஈழத்தில் அமைதி நிலவுவதற்காக மத்திய அரசு உதவ்வில்லை என்றால் தங்கள் எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிக்கிறார்.. அதற்கு அப்புறம் இலங்கையிலிருந்து ராஜப்க்சே தம்பி வந்தார்..பிரணாப் முகர்ஜி வந்தார்.. இப்படி பலர் வந்தார்கள் போனார்கள்..தமிழக் அரசின் தமிழின தலைவரும் அதையெல்லாம் கேட்டு தங்கள் ர...