Posts

Showing posts with the label சினிமா வியாபாரம் 2

கொத்து பரோட்டா -05/01/15

Image
திருவாதிரை களியும்.. பேலியோ டயட்டும் வாரத்துக்கு ஒரு முறை சீட்டிங்கில் இருக்கும் நிலையில் திங்களன்று மீண்டும் டயட் முருங்கையில் ஏறலாம் என்றால் திருவாதிரை இன்னைக்கு, களி வேண்டாமோ? என்று எகத்தாளமிட்டாள் மனைவி. வெல்லம், நெய்யோடு, அரிசியை ரவையாய் உடைத்த மாவோடு, தேங்காய், எல்லாம் போட்ட களி ஒரு விதமான அசட்டு தித்திப்போடு இருக்கும். வெறும் களியை விட, உடன் வழங்கப்படும் காய்கறிகள் எல்லாம் சேர்த்த கூட்டுக் குழம்பு தான் திருவாதிரை களியின் ஸ்பெஷாலிட்டி. தித்திக்கும் களியோடு, காரம், மணம் நிரம்பிய காய்கறிக்கூட்டு ஒரு மாதிரி தத்தக்கா பித்தக்காவாக இருக்குமென்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் சாரி.. வாவ்..வாவ்.. சூடான களியோடு, கூட்டை குழைத்து வாயில் போட்டால்.. டிவைன். ”இன்னொரு கரண்டி போடேன்”  “டயட்டுன்னு சொன்னீங்க?” “அப்படியா சொன்னேன். அது நாளைலேர்ந்து. சாமி குத்தம் ஆயிரப்பிடாது இல்லை..” வாழ்க திருவாதிரையும், நடராஜரும். @@@@@@@@@@@@@@@@@@@@

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-6

சுமார் நூறு தியேட்டர்களிலாவது வெளியிடப்பட்டு,  டிவி, ரேடியோ,போஸ்டர், பேனர்கள் என வெகு விமரிசையாய் விளம்பரப்படுத்தப்படும் இத்திரைப்படங்களின் வசூல் தான் வெற்றியா? இல்லையா? என்பதை நிர்ணையிக்கும்.

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-5

அதெப்படி விளம்பரத்துக்கு செலவு செய்யப்படும் பணம் தயாரிப்பாளருடயதாகும்? அதுதான் பிரபல விநியோகக் கம்பெனியின் பெயரில் விநியோகிக்க கொடுத்தாயிற்றே? என்று கேட்பீர்களானால் நீங்கள் பாவம். நிஜத்தில் இப்படங்களை பெரிய விநியோகக்U கம்பெனிகள் விலை கொடுத்து வாங்குவதில்லை. அதற்கு ஒர் ப்ராசஸ் இருக்கிறது.

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-4

சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்களின் படங்கள் விநியோக நிறுவனங்கள் மூலமாய் வெளியிட தயாராக முதலில் செய்ய வேண்டிய தியாகம் தங்கள் படத்தின் வியாபாரம் முழுவதும் அந்நிறுவனம் மூலம் செய்து கொள்ள சம்மதித்து ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுதான். இங்கிருந்துதான் அந்நிறுவனங்களின் வேலை ஆரம்பிக்கிறது. எல்லா சின்னப் படங்களையும் அவர்கள் இம்மாதிரியான ஒப்பந்தங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. அப்படங்களையும் பார்த்து ஓரளவுக்கு தப்பிக்கும் என்று நினைக்கும் படங்களை மட்டுமே தெரிவு செய்வார்கள். சரி.. படத்தை விநியோக நிறுவனத்திடம் ஒப்படைத்தாயிற்று அடுத்து என்ன? என்றால் அந்நிறுவனம் தங்கள் படத்தை எப்போது வெளியிடுமோ என்று காத்துக் கிடக்க வேண்டும். நல்ல கேப் பார்த்து பப்ளிசிட்டி பெருசா பண்ணி ஜெயிப்போம். நீங்களும் நாலு காசு பாக்க வேணாமா? என்று செண்டிமெண்டலாய் கேட்டு அசத்துவார்கள். வெறு வழியேயில்லாமல் தயாரிப்பாளர் விநியோகஸ்தரின் கருணைப் பார்வைக்காக காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் சொல்லும் நல்ல தருணம் தயாரிப்பாளரிடம் சொன்னது அல்ல, அப்படத்த்ற்கு விளம்பரம் செய்ய ஆகும் பணத்தை ரெடி செய்வதற்குத்தான். அவர் எ...

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-3

அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்தான்.  இதென்ன கலாட்டா? படத்தைத்தான் பெரிய நிறுவனம் வாங்கி வெளியிடுகிறதே? என்று கேட்பீர்களானால் நீங்கள் அப்பாவி. இம்மாதிரியான சின்ன படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஏதோ இந்நிறுவனங்கள் வெளியிட்டால் மட்டுமே தங்கள் படத்திற்கு மதிப்பு என்று நினைத்துக் கொண்டு, பத்து பைசா கூட வாங்கிக் கொள்ளாமல் தங்கள் படத்தின் எல்லா உரிமைகளையும், அவர்கள் மூலமாய் வியாபாரம் செய்ய எழுதிக் கொடுத்துவிட்டு ஓரமாய் உட்கார்ந்துவிடுகிறார்கள். படத்தை தங்கள் வசம் வாங்கி வைத்துக் கொண்ட நிறுவனம் அதற்கு பிறகு காய் நகர்த்த ஆரம்பிக்கும். முதலில் அப்படத்தின் சாட்டிலைட் உரிமை எவ்வளவு போகும் என்பதற்காக அவர்களுடன் இணைப்பில் இருக்கும் சாட்டிலைட் சேனல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும். பேச்சு வார்த்தைகளுக்கு பின் ஒர் ரேட் பிக்ஸ் ஆகும் வரை இதோ அதோ நல்ல டேட் பார்த்து ரிலீஸ்  பண்ணனும், பெரிசா விளம்பரம் பண்ணாத்தான் ஒர்கவுட் ஆகும் என்றெல்லாம் தயாரிப்பாளரிடம் சொல்லிக் கொண்டிருப்பார். 

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-2

தமிழ்நாட்டுல உள்ள எல்லா தியேட்டரையும் அவங்க கண்ட்ரோல்ல வச்சிருக்காங்க அதனாலத்தான் சின்ன படம் ஓட மாட்டேன்குது என்று காரணம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது என்ன காரணம் சொல்வது என்று புரியாமல் குழம்பிப் போய் நிற்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. நான் என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லும் விஷயம் தான். ஒவ்வொரு கால கட்டத்திலும் யாராவது ஒரு நான்கு பேரிடம் தான் சினிமா இருப்பது போலத் தோன்றும் ஆனால் அது நிஜமல்ல என்பதை அடுத்த நான்கு பேர் வரும் போது தெரியும். சென்ற ஆட்சியில் திமுக குடும்ப நிறுவனங்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது வேறு ஒரு நாலு நிறுவனங்களை  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2

கிட்டத்தட்ட 300 படங்கள் சென்ற வருடம் தயாரிக்கப்பட்டு. சென்ஸார் ஆகி, வெறும் 160 சில்லறை படங்கள் மட்டும் வெளியாகியிருக்கிறது. மீதமிருக்கும் நூற்றிச் சொச்சப் படங்களின் நிலை?. இவையனைத்து சென்சார் செய்யப்பட்டவை. இன்னும் அந்த நிலைக்கு வர முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் படங்கள் நிறையவே இருக்கிறது. தயாரிப்பு நிலை இப்படியிருக்க, சென்ற வருடமாகட்டும், இந்த வருடமாகட்டும் படங்களின் வெற்றி நிலை என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் வசூல் ரீதியாய் வெற்றி பெற்ற படம் “கோலி சோடா” மட்டுமே.. மற்ற படங்கள் எல்லாம் பேப்பர் விளம்பரங்களில் மட்டும் மார் தட்டும் வசூல் என்று போட்டு பெருமை பீற்றிக் கொண்டிருக்கிற நிலையில் தான் தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு என்ன காரணமாய் இருக்க மூடியும்?. சினிமாவின் தரம் குறைந்து விட்டதா? இல்லை மக்களிடம் சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டதா? இல்லை சினிமா மீதான ஆர்வமே குறைந்துவிட்டதா? தியேட்டர்களின் விலையேற்றம் ஒரு காரணமா? டிமாண்டை விட சப்ளை அதிகமாகிவிட்டதாலா? என ஆளாளுக்கு மண்டையை ஒடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஏன் இப்படியான...