கலைஞர் வாழ்க..
எல்லோரும் கலைஞர் ஒழிக என்று கோஷம் போடும் போது. என்னடா இவன் மட்டும் வாழ்க என்று கோஷம் போடுகிறானே என்று கேட்பவர்களுக்கான பதில். இந்த ஆட்சி ஆரம்பித்த வரை கலைஞரின் தீவிர ஆதரவாளர் என்கிற உரிமை. முத்துக்குமார் தீக்குளித்த போது சன் டிவி அவருடய பாஸ்போர்ட் போட்டோவையெல்லாம் தேடி காட்டி செய்தி வெளியிட்டது. அதன் பிறகுதான் அவருடய அறிக்கையில் கலைஞரை பற்றியும், காங்கிரஸ்காரர்களை பற்றியும் அவருடய இறுதி அறிக்கையில் எழுதியிருப்பது தெரிந்ததும் மொத்தமாகவே முத்துக்குமாரின் செய்திகளை சன், கலைஞர், ஜெயா ஆகியவை இருட்டடிப்பு செய்தது. கலைஞருக்கு என்ன ஒரு சந்தோஷமென்றால் கூடவே ஜெயலலிதாவை பற்றியும் திட்டியிருப்பதால் அவர்களும் பெரிதாய் கவர் செய்யவில்லை. திமுகவை சார்ந்த பாபுவை செருப்பால் அடித்ததை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி ஜெயா டிவிக்காரர்கள் சந்தோஷப்பட்டார்கள். இவர்கள் தேவைக்கென்றால் தங்களுடய சில்லறை விஷயங்களை ஊதி பெரிதாக்குவதும், தேவையில்லையென்று நினைத்தால் அதை அப்படியே அமுக்குவதும் மீடியாவை மொத்தமாய் வைத்திருக்கும் நம் தலைவருக்கு அல்வா மாதிரி. உடனிருக்கும் காங்கிரஸை எதிர்க்க ம்னமில்லை. அதே நேரத்தில் இங்கே இல...