Posts

Showing posts with the label நான் வெஜ்

சாப்பாட்டுக்கடை - கோவை சாவித்ரி மெஸ்

Image
சமீப காலமாய் மெஸ் என்று பெயர் வைத்து விட்டாலே ஸ்பெஷல் கவனம் வந்துவிடுகிறது என்பதற்காக எங்கு பார்த்தாலும் மெஸ், மெஸ் என்றே பெயர்கள் தட்டுபடுகின்றது. குறிப்பாய் நான்வெஜ் என்றால் கட்டாயம் மெஸ்ஸில் தான் முடியும். அப்படியான ஒர் தினத்தில் இந்த மெஸ்ஸைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சாலிக்கிராமம் பாஸ்போர்ட் ஆபீஸுக்கு முன் பில்டிங்கில் ஆரம்பித்திருந்தார்கள்.  மிகவும் விசாலமான இடம். டிபிக்கல் கல்யாண வீடு போல வரிசைக்கட்டி டேபிள்கள் போடப்பட்டிருந்தது. நான் போனது இரவு 9 மணிக்கு. கிட்டத்தட்ட மூடும் தருவாயில் இருந்ததால் என்ன இருக்கிறது என்று கேட்டேன். இட்லி, சப்பாத்தி, தோசை இருப்பதாய் சொன்னார்கள். இட்லியும், தோசையும் ஆர்டர் செய்துவிட்டு, சைட்டிஷாய் மட்டன் கேட்ட போது காலியாகிவிட்டது என்றார்கள். பள்ளிப்பாளையம் சிக்கன் இருப்பதாய் சொல்ல, அதை ஆர்டர் செய்தேன். முதற்கட்டமான் ஒரு இட்லி கொடுங்கள் என்று கேட்க, கொஞ்சம் சிக்கன் குழம்பும், சட்னியும், வைத்தார்கள். நல்ல சுர்ரென்ற உறுத்தாத காரம், இட்லியோடு குழைத்து சாப்பிட, அடுத்த இட்லிக்கு சிக்கன் குழம்பு கேட்டால் அதுவும் காலி, மீன் குழம்புதான் என்றார்...