நெல்லை சந்திப்பு
ரத்தத்தை பார்த்தாலே மயங்கி விழும் ஒருவன் மூன்று பேரை கொல்லும் அளவிற்கு மாறுகிறான். அதற்கு காரணம் என்ன? யார் அவனை இந்த நிலைமைக்கு துரத்தியது. நட்ட நடு ரோட்டில் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவனை என்கவுண்டர் செய்வதில் ஆரம்பிக்கிறது படம். இன்னொரு பக்கம் அம்மா, அப்பா, அக்கா, அக்காவுக்கு நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் மாமா, என்று அற்புதமான குடும்பம் கொண்ட ஹீரோ. அஸிஸ்டெண்ட் கமிஷனரின் கீப்புக்கு பிறந்த பெண் தான் ஹீரோவின் காதலி. இப்படியாக போகும் கதையில் என்கவுண்டரினால் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அதை இரண்டு மணி நேரப் படமாய் பரபரப்பாய் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் நவீன். கே.பி.பி.