Posts

Showing posts with the label vineeth sreenivasan

Thattathin Marayathu

Image
  மலையாளப் படங்களை தியேட்டர்களில் பார்த்து நிரம்ப நாளாகிவிட்டது. அதற்கு காரணம் லாலேட்டனும், மம்முவும்தான். ஒரு காலத்தில் மலையாள படங்களை பார்க்க காரணமாயிருந்தவர்களும் அவர்கள் தான். கடந்த சில வருடங்களாய் அவர்களின் படங்களின் ட்ரைலரைப் பார்த்தாலே தெரித்து ஓடக்கூடிய வகையில் இருந்ததால் மலையாளக் கரையோரத்தில்  டிராபிக், பாஸஞ்சர் போன்ற படங்களைப் பார்த்து  அவ்வப்போது மலையாளக் கரையோரம்கால் நினைத்துக் கொண்டிருந்தேன்.  சால்ட் அண்ட் பெப்பர் வேறு நன்றாய் இருப்பதாய் சொன்னார்கள். மலையாள திரையுலகில் புது வெள்ளமாய் வாரிசுகள் பல பேர் நுழைந்து கொஞ்சம் புதுக் காத்து வீசத் தொடங்கியிருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. அந்த வகையில் எழுத்தாளர், நடிகர், இயக்குனர் ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் சமீபத்திய ஹிட் என்று சொன்னதால் ஆஜரானேன்.