நகரம்
சுந்தர் சி ரொம்ப வருடங்களுக்கு பின் பேக் டு பெவிலியன் நடிப்போடு. சுந்தர் சியை நடிகராக ஏற்றுக் கொண்ட தலைநகரம் படத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த நகரம். தலைநகரம் படத்தில் நான்கைந்து ராம் கோபால் வர்மா படம், இரண்டு மூன்று ஆங்கில படம், என்று கலந்து கட்டி அடித்திருந்த படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை எடுபட்டுவிட எல்லாம் சுபம். ஆனால் அதே பார்முலா இங்கே வேலைக்காகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிறு வயது நணபர்கள் சுந்தர் சியும் போஸ் வெங்கட்டும், ஒருவர் ரவுடியாகிறார், மற்றொருவர் போலீஸ் ஆகிறார். போஸ் கெட்ட போலீஸ். சுந்தர் சி ஒரு பெரிய கள்ளக்கடத்தல் தாதாவிடம் வேலைப் பார்க்கும் போது மாட்டிக் கொண்டுவிட, அவரை கை காட்டாமல் ஜெயிலுக்கு போகிறார். சுந்தர்சியை போஸ் வெங்கட் வெளியே எடுத்து தன்னுடய இரண்டாம் படை வேளைக்கெல்லாம் உபயோகப்படுத்தி சம்பாதிக்கிறார். நடுவில் சுந்தர் சிக்கும், எதிர் வீட்டு அனயாவுக்கும் காதல் மலர்கிறது. இதற்கிடையில் நண்பனுக்கு பிரச்சனை என்றதும் அவரை காப்பாற்ற மீண்டும் ரவுடித்தனத்தை எடுக்க, அதை பார்த்த அனயா சுந்தரிடமிருந்து விலகுகிறார். தன்னை பற்றி விளக்கி மீண்டும் தனக்கொரு சான்ஸ் கொட...