Posts

Showing posts with the label கோடை மழை

கொத்து பரோட்டா - 21/03/16

”இந்த வாட்டி யாரு வருவாங்க சொல்லுங்க?” என்ற அந்த அம்மணியிடம், “நிச்சயம் மாற்றம் வரதுக்கான வாய்ப்பிருக்குன்னேன். அப்ப நீங்க திமுகவா? அப்படின்னாங்க... “அப்படியில்லைங்க.. வெள்ளத்துக்கு முன்னாடி நிச்சயம் அதிமுகவுக்கு 70 சதவிகிதம் வாய்ப்பு இருந்துச்சு. இப்ப அதுக்கு சாத்தியமில்லை. திமுகவுக்கு கூட்டணி வலு இல்லைன்னு சொல்றீங்க? சரி.. அப்படி பார்க்கும் போது அதிமுக, திமுக ரெண்டுத்துக்கு சரி சதவிகித வாய்ப்பு இருக்கு. ஒரு வேளை விஜயகாந்த், பா.ம.க, பா.ஜ.க, ம.ந.கூன்னு ஆளாளுக்கு ரெண்ட்ரொரு சீட் ஜெயிச்சுட்டாலும், காலக் கொடுமை இவங்க உதவியிருந்தாத்தான் ஆட்சி அமைக்க முடியும்னா, நிச்சயம் அவங்களே திமுகவுக்குத்தான் போவாய்ங்க.. என்ன நீங்க மைனாரிட்டி திமுகன்னு அஞ்சு வருஷத்துக்கு புலம்பிட்டிருக்கலாம். அம்பூட்டுத்தான். என்ன நான் சொல்றது? என்று போது “தம்பி உங்களுக்கு உலகம் தெரியலை.. ஏன்னா நேத்து நான் பல பேரை சந்திச்சேன் அங்க அவங்ககிட்ட பேசினப் போது , தெளிவா ஒண்ணு தெரிஞ்சுச்சு, அடுத்தது அம்மாதான்னு. அப்படியா? யாரை சந்திச்சீங்க? எந்த ஏரியாவுல போய் சந்திச்சீங்க? என்றேன் ஆவலுடன். நம்ம மகளிர் அணி கூட்டத்திலதான் என்றா...