Posts

Showing posts with the label உறுத்தல்

உறுத்தல் - விகடன் சிறுகதை.

பாத்ரூமிலிருந்து பாவாடையை மார்பு வரை மேலேற்றிக் கட்டிக் கொண்டாள் தமயந்தி. தலையின் ஈரம் போக துண்டைக் எடுத்து கட்டியபடி, கண்ணாடியில் முகம் பார்த்தாள். ’கருப்பென்னடி கருப்பு. பெருமாள் கூட கருப்புத்தான். ஒலகமே அவன் காலடியில கிடக்கலை. அதும் போல என் தமயந்தி காலடில கிடக்க ஒருத்தன் வராமயா போயிருவான்?” செத்துப் போன லெட்சுமி பாட்டியின் குரல் ஏனோ நியாபகத்துக்கு வந்தது. வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க “சுபா.. யாருன்னு பாரு?” என்று உள்ளிருந்து ஹாலில் டேப்பில் செஸ் ஆடிக்கொண்டிருக்கும் தன் மகளுக்கு குரல் கொடுத்தாள். பரபரவென நெஞ்சிலிருந்த பாவாடையை இடுப்பில் கட்டி, உள்பாடி, ஜாக்கெட்டை போட்டு, சட்டென புடவைக் கட்டி, மீண்டும் ஒரு முறை கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு திரும்பிய போது சுபா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து “யாரோ சுந்தர்னு ஒரு அங்கிள் வந்திருக்காரு” என்றாள். சுந்தர் என்று கேட்ட மாத்திரத்தில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். சுந்தர் மாமாவே தான். நெஞ்சமெல்லாம் படபடவென அடித்தது. @@@@@@@@@@@@@@@ ”நல்ல பையன். அற்புதமான நளபாகக்காரன். நல்ல சம்பாத்தியம...