Posts

Showing posts with the label ajithkumar

ஏகன் -விமர்சனம்

Image
வழக்கமாய் ரீமேக் ராஜாவை எல்லோரும் கிண்டல் செய்வார்கள், இவரால் ரீமேக்கை தவிர புதுசாய் எடுக்க தெரியாதென்று.. ஆனால் ரிமேக் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று ஏகனை பார்த்தால் தெரியும்.. ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த “மே ஹூன் நா” என்ற படத்தைதான் தமிழில் கொடுக்க நினைத்து கெடுத்திருக்கிறார்கள்.. ஹிந்தியிலேயே ஷாருக்கின் கிரேஸினால் தப்பிய படம்.. வில்லன் சுமனிடமிருந்து விலகிய தேவன் அப்ரூவராக மாற முடிவெடுக்க, அவரை கொலை செய்ய முயற்சிக்க, போலீசிடமிருந்தும், வில்லன் சுமனிடமிருந்தும் தப்பியோடிக் கொண்டிருக்கிறார் தேவன்.. அவரை பிடிக்க சுமன் ஓரு புற்மும், போலீஸ் ஓரு புறமும் அலைய, அவருடய பெண் ஊட்டியில் ஓரு காலேஜில் படிப்பதாய் போலீஸுக்கு தெரிய, அந்த காலேஜில் ஸ்டூடண்டாய் நம்ம தலைய சேர்த்து, தேவனின் பெண் பியாவிடம் நெருக்கமாய் பழகி தேவனை பற்றி அறிந்து கொள்ள காலேஜில் நுழைகிறார் அஜித். இதற்கு நடுவில் தன்னுடய வளர்ப்பு அம்மா, தம்பி,அப்பா என்று செண்டிமெண்ட் குழப்பம், தம்பி நவ்தீப், பியாவின் காதல் என்று குழப்பியடித்து கும்மியடித்திருக்கிறார்கள்.. கல்லூரி முதல்வர் ஜெயராமும், சத்யனும் நடத்தும் அபத்தங்கள் எல்லாம் ...