Posts

Showing posts with the label மந்திரப்புன்னகை

மந்திர புன்னகை

Image
இயக்குனர்கள் நடித்து மூன்று படங்கள் வெளி வந்திருக்கிற வாரமிது. மந்திரபுன்னகையில் கரு.பழனியப்பன், நகரத்தில் சுந்தர்.சி, மகிழ்ச்சியில் வ.கெளதமனும், சீமான் ஆகியோர் நடித்து இந்தவாரம் வெளிவந்திருக்கிறது. இதில் வ. கெளதமனும், கரு.பழனியப்பனும் முதல் முறை. வழக்கமாய் கரு.பழனியப்பன் எடுத்தாளும் குடும்ப கதை களன் இல்லாமல் ஒரு வித்யாசமான களனை எடுத்தாண்டிருக்கிறார். பேசும் பேச்சினால் மற்றவர்களின் நெஞ்சை சாட்டையால் அடித்து காயப்படுத்தும் அரகண்ட் கேரக்டர் பழனியப்பனுக்கு. எந்த ஒரு வரைமுறைக்கும் ஆட்படாத ஒரு கேரக்டராய் ஒரு பெரிய கம்பெனியில் ஆர்கிடெக்காய் வலம் வரும் ஸ்திரிலோலன், குடிகாரன், எப்ப்பப்பார் புகைப்பவன் தன்னருகே யாரையும் நெருங்க விடாதவன் என எல்லா விதமாக நெகட்டிவ் விஷயங்களும் உள்ளவனுக்கும், மிகவும் போல்டான, சுதந்திரமான, தன்னம்பிக்கையான, சுய சிந்தனையுள்ள மீனாட்சியுடனான நட்பு காதலாகி கனியும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட்.  பின்பு அந்த ட்விஸ்டை வைத்து க்ளைமாக்ஸ் வரைக்கும் கொண்டு போயிருக்கிறார்கள். படத்திற்கு மிக முக்கியமான, பலமான  ஒரு விஷயம் வசனங்கள். பாஸ்கர்சக்தியின் பெயரையும் போடு...