Posts

Showing posts with the label chikku..bukku..

சிக்கு.. புக்கு

Image
இந்த வருடத்தில் ஆர்யா நடித்து வரும் மூன்றாவது படம். முதல் இரண்டு படங்களின் வெற்றி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்திற்கும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்யாவும், ஸ்ரேயாவும் லண்டனின் தனித்தனியே இருக்கிறார்கள். ஆர்யாவின் பூர்வீக வீடு கடனில் மூழ்கப்போவதை தடுக்க இந்தியா கிளம்புகிறார். ஸ்ரேயா.. தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஊருக்கு கிளம்புகிறார். லண்டனிலிருந்து பங்களூர் வந்தவர்களுக்கு ஸ்ட்ரைக் காரணமாய் ப்ளைட்டுகள் இல்லாமல் போக.. ப்ளாக் டிக்கெட்டில் கணவன் மனைவியாய் ஒரே ட்ரைனில் பயணிக்க, டி.டி.ஆர். கண்டுபிடித்து இறக்கிவிட, நடராஜா சர்வீஸ், பஸ், சைக்கிள் என்று உலகில் உள்ள எல்லா ஊர்திகளிலும் பயணிக்கிறார்கள், இதற்கு நடுவில் சண்டைப் போட்டு, பிரிந்து, காதலித்து அவரவர் ஊர்களுக்கு போகிறார்கள். இவர்களின் காதல் ஜெயித்ததா? என்பது க்ளைமாக்ஸ். இந்த மெயின் கதைக்கு நடுவே ஒரு ப்ளாஷ் பேக்  இருக்கிறது. அதில் ஆரியாவின் அப்பா ஆர்யா (டபுள் ஆக்‌ஷனுங்கோ) அந்த ஊரில் உள்ள தமிழ் வாத்தியாரின் ப...