Posts

Showing posts with the label பொது புத்தியால் அறிமுஅக்ப

தற்கொலைகளும்.. பொதுபுத்தியும்.

சென்ற வாரம் இரண்டு தற்கொலைகள். ஒரு பெண் சக மாணவி வைத்திருந்த பணம் காணாமல் போனதால், சந்தேக லிஸ்டில் இருந்த நான்கு பேரில்  தன்னை மட்டும்  நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்பதற்காக தூக்கு போட்டுக் கொண்டார். இன்னொருவர் பள்ளியில் பரிட்சையில் காப்பி அடித்தற்காக ஆசிரியர் திட்டியதை தாங்க முடியாமல் தூக்கு போட்டுக் கொண்டார். இதற்காக முதல் சம்பவத்தில் நான்கு ஆசிரியர்களை கைது செய்து அப்போதைக்கு பிரச்சனையை முடித்திருக்கிறது போலீஸும், கல்லூரி நிர்வாகமும். கோர்ட்டில் அவர்களை அரெஸ்ட் செய்ததே தவறு என்று கூறி ஜாமீன் கொடுத்துள்ளது.