ஆரண்ய காண்டம்.
”தர்மம் எது?” ”எது தேவையோ அதுவே தர்மம்.” இந்த இரண்டு வரிகள்தான் இப்படத்தின் கதை. ஆங்கிலத்தில் வேண்டுமானால் சர்வைவல் த பிட்டஸ்டு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆங்கில ஹாலிவுட் படங்களை பார்த்து அரைகுறையாய் சூடுப் போட்டுக் கொள்பவர்கள் நிறைய பேர். ஆனால் அதே குவாலிட்டியில் ஒரு படத்தை. அதுவும் குவாண்டின் டொரண்டினோவின் பாணியில் அச்சு அசலாய் ஒரு ப்ளாக் படத்தை கொடுக்க முடியுமா? அதுவும் தமிழில். இதோ.. உங்களுக்காக ஆரண்ய காண்டம். கதை என்று பார்த்தால் வழக்கமான கேங்ஸ்டர்களுக்குள்ளான ப்ரச்சனைதான். ஆனால் ஒரு நாளில் இம்மாதிரி மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் தான் சுவாரஸ்யம். லோக்கல் தாதாவான அய்யா ஜாக்கி ஷாராப்பிடம் வேலைப் பார்க்கும் பசுபதி, எதிர்க் கோஷ்டியான கஜேந்திரனிடமிருந்து டபுள் க்ராஸ் செய்து சரக்கை அடிக்க நினைக்க, அதில் மிகச் சாதாரண மனிதர்கள் எல்லாம் மாட்டிக் கொள்வதும், பின்னர் அதில் வரும் சிக்கல்களும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் ஆரம்பக் காட்சியில் வயதான தாதா, சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று கூட்டி வந்து கூத்தியாளாக வைத்துக் கொண்டிருக்கும் ...