Posts

Showing posts with the label போஸ்டர்

குறும்படம்- போஸ்டர்

Image
கலைஞர் டிவியில் நடக்கும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக நண்பர் ரவிக்குமார் இயக்கத்தில் என்னுடய கதை, திரைக்கதை, வசனத்தில் எடுக்கப்பட்ட இப்படம். அவ்வாரத்திய சிறந்த படமாய் அமைந்தது. அது மட்டுமில்லாமல் நான் பின்னணி குரல் கொடுத்த இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு சிறந்த நடிகர் விருதும் கொடுத்தார்கள். உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

கறை நல்லது.

விஜய் டிவியும் சர்ப் எக்ஸலும் சேர்ந்து ஒரு போட்டி வைத்திருந்தது. சர்ப் எக்ஸலின் கறை நல்லது என்கிற விளம்பரத்திற்கு ஏற்ப புது கான்ஸெப்ட் பள்ளி மாணவ மாணவியர்களிடமிருந்து வேண்டும் என்றும், அதில் தெரிந்தெடுக்கப்படும் கான்ஸெப்டுக்கு பரிசளிக்கப்படும் என்றும், மாணவ, மாணவியருக்கு ஆர்வமிருந்தால் அவர்களை வைத்தே நடிக்க வைப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். நான் கூட ஏதாவது யோசிச்சி பையன் பேர்ல அனுப்புவோமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது, சில பல வேளை பளுவால் மறந்துவிட்டேன். ஆறாவது படிக்கும் என் பெரிய மகன என்னிடம் வந்து “அப்பா.. கறை நல்லதுக்கு ஒரு கதை ரெடி பண்ணினேன்” என்றான்.  எங்கே சொல்லு என்று ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தேன். “ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைப் இருக்கிறாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் சண்டை. வைஃப் ஷாப்பிங் போயிருக்காங்க. அவங்க வெளிய போறதுக்கு முன்னாடி ஒரு பேண்ட் சர்ட் அயர்ன் செய்து வைத்திருக்காங்க..  கணவன் கை தவறி காப்பியை அதன் மேல் கொட்டிவிட, பதறிப் போன கணவன், அய்யோ மனைவி வந்தா திட்டுவாளேன்னு உடனடியா அதை தண்ணில போட்டு, அலசி, தோய்ச்சி, ப்ரஷ் பண்ணி, ட்ரையரில் போட்டு காய வைத்து பார்த்தால் ...