விஜய் டிவியும் சர்ப் எக்ஸலும் சேர்ந்து ஒரு போட்டி வைத்திருந்தது. சர்ப் எக்ஸலின் கறை நல்லது என்கிற விளம்பரத்திற்கு ஏற்ப புது கான்ஸெப்ட் பள்ளி மாணவ மாணவியர்களிடமிருந்து வேண்டும் என்றும், அதில் தெரிந்தெடுக்கப்படும் கான்ஸெப்டுக்கு பரிசளிக்கப்படும் என்றும், மாணவ, மாணவியருக்கு ஆர்வமிருந்தால் அவர்களை வைத்தே நடிக்க வைப்பதாகவும் சொல்லியிருந்தார்கள்.
நான் கூட ஏதாவது யோசிச்சி பையன் பேர்ல அனுப்புவோமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது, சில பல வேளை பளுவால் மறந்துவிட்டேன். ஆறாவது படிக்கும் என் பெரிய மகன என்னிடம் வந்து “அப்பா.. கறை நல்லதுக்கு ஒரு கதை ரெடி பண்ணினேன்” என்றான். எங்கே சொல்லு என்று ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தேன்.
“ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைப் இருக்கிறாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் சண்டை. வைஃப் ஷாப்பிங் போயிருக்காங்க. அவங்க வெளிய போறதுக்கு முன்னாடி ஒரு பேண்ட் சர்ட் அயர்ன் செய்து வைத்திருக்காங்க.. கணவன் கை தவறி காப்பியை அதன் மேல் கொட்டிவிட, பதறிப் போன கணவன், அய்யோ மனைவி வந்தா திட்டுவாளேன்னு உடனடியா அதை தண்ணில போட்டு, அலசி, தோய்ச்சி, ப்ரஷ் பண்ணி, ட்ரையரில் போட்டு காய வைத்து பார்த்தால் தண்ணில போட்டு அலசினதுல கறை சர்ட் பூராவும் ஒரு மாதிரி ஸ்பெரெட் ஆகிவிடுகிறது. அதை பார்த்துக் கொண்டேயிருக்கும் போது மனைவி வந்துவிட.. சட்டென அந்த ஷர்ட்டை பார்த்து உற்சாகமாகி.. அதில் இருக்கும் காபி டிசைன் பிடித்து போய் தனக்காக புது ச்ட்டை வாங்கியிருக்கிறான் என்று நினைத்து சந்தோசமாய் அணைத்து கொள்கிறாள். கறை நல்லது
எனக்கு ஆச்சர்யமாகிவிட்டது.. பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் எவ்வளவு யோசிக்கிறார்கள்?. இவர்கள் தான் நாளைய ரசிகர்கள் இவர்கள் இந்த வயதிலேயே இப்படி யோசித்தால் நாம் இவர்களை கட்டிப் போட எவ்வளவு யோசிக்க வேண்டும்..
இவன் கான்செப்ட் இப்படி என்றால்.. அவனுடய நண்பன் விஷ்ராந்த் என்பவன் சொன்ன கான்செப்ட் இன்னும் நன்றாக இருந்த்து. ஒரு பணக்கார பையன் எப்போதும் காரில் தான் போவானாம். ஏழைகள் என்றாலே எளப்பமாகத்தான் பார்ப்பானாம். ஒரு நாள் அவனது கார் ரிப்பேர் ஆகிவிட வேறு வழியில்லாமல் காரிலிருந்து இறங்கி நடக்கையில் மற்றொரு கார் சேரடித்துவிட, என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது அருகே இருக்கும் ஏழை சிறுவர்கள் அவனை அழைத்து தண்ணீர் கொடுத்து, பாத்ரூமை காட்டி அங்கே போய் கறையை கழுவிக் கொள்ளச் சொல்கிறார்கள். கறையை கழுவும் போது உணரும் அவன் வெளியே வரும் போது சிரித்த முகத்துடன் அந்த ஏழை பையன்களை அணைத்துக் கொள்கிறான். கறை நல்லது
எனக்கு ரொம்ப பிடித்துப் போய் உடனடியாய் அதை எழுதி தருகிறேன் போய் கொடுங்கள் என்று சொன்னேன். இல்லப்பா அது ஞாயித்துக் கிழமையோட முடிஞ்சிருச்சுன்னு நேத்து பூரா மழை அதனால சொல்லலைன்னு சொன்னான். யாராவது டேட் எக்ஸ்டண்ட் ஆச்சுன்னா சொல்லுங்க… கொஞ்சம் விஷுவலாக வேலை பார்த்தால் நிச்சயம் நன்றாக வரும் என்று தோன்றுகிறது. நல்லாத்தான் யோசிக்கிறாங்க..
போஸ்டர் குறும்படம் பார்க்காதவர்களூக்கு
படத்தின் இயக்குனர் ஒரு பதிவரும் கூட, படத்தை பற்றி அவரது பதிவில்@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்
Comments
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...
படம் பார்த்தேன் நன்றாக வந்திருக்கிறது.. வாழ்த்துக்கள்..
இந்த கான்செப்ட் அண்ணாமலை ஓபனிங் சீன் மாதிரி இருக்கே? :roll:
உங்க பையன்னா சும்மாவா..
உங்க பையனுக்கும் அவன் நண்பனுக்கும்
நல்ல க்ரியேட்டிவிட்டி இருக்கு, Channelize பண்ண ஏதாவது பண்ணுங்க..
இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//உங்க பையனுக்கும் அவன் நண்பனுக்கும்
நல்ல க்ரியேட்டிவிட்டி இருக்கு, Channelize பண்ண ஏதாவது பண்ணுங்க..//
நானும் அதையே வழிமொழிகிறேன்
உங்க பையன் & அவன் நண்பன் கதை சூப்பர்...
பசங்கள வெச்சு நாளாநாளைய இயக்குனர் நிகழ்ச்சி நடத்தலாம் போல இருக்கே....
போஸ்டர் அருமை...
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...
உங்க குரல் ரொம்ப அருமையா செட் ஆகி இருக்கு...
மன்னிக்கவும்...ஊரில் இருக்கும் பொழுது உங்களுக்கு போன் போட்டு சந்திக்கலாம்னு நினைச்சேன்..
ஊரில் இருந்து சென்னை வர தாமதம் ஆகிடுச்சி. உங்களுக்கே தெரியும் எங்கள மாதிரி ஆட்களுக்கு இருக்குற கொஞ்ச நாள் விடுப்புல எல்லா வேலையும் முடிக்கணும்...கண்டிப்பா அடுத்த முறை சென்னைல சந்திப்போம்.
ரொம்ப அழகா யோசிச்சிருக்காங்க பசங்க... சந்தோஷமா இருக்கு கேட்க...
வாழ்த்துக்கள் கேபிள்ணா...
சினிமா உங்கள் ரத்தத்தில் ஊறியது.... தங்கள் மகனுக்கு ஆர்வம் இல்லாமல் போனால்தான் ஆச்சர்யம்.....
எனக்கு ஒரு கான்செப்ட்....
ஒருவர் இமயமலையோட பரங்கிமலை, ரோட்டோர கல் எல்லாத்தையும் கம்பேர் பண்ணுவாராம்... ஒரு நாள் அந்த ரோட்டோர கல் சகதில உருண்டு சேத்த இவரு மேல வாரியிறச்சிதாம்... (என் படம்லாம் கீழ்தரமானவை... எனக்கு விசிலடிச்சான் ...சுகள் தேவையில்லைன்னு)..... இவரு கறைய தொடச்சிக்கிட்டே சொன்னாராம் "கறை நல்லது... அப்பத்தானே குளிக்க முடியும்னு"..... ஓகே வா தல
குறும்படமும் அருமை..
Nijam Avarkalai Kattippoda neenga romba ulaikanum/room pottu yosikonum...
Pasangalukku Vaalthukkal..
குறும்படமும் அற்புதம்!! ROCK ON, ANNA!
-செங்கோவி
:(
வாழ்த்துகள் கேபிள்ஜி. :-)
இதுக்குன்னே கொலைவெறியோட ஒரு கும்பலே சுத்திட்டு இருக்காங்கய்யா.....:]]]
நன்றி
@லதாமகன்
:))
நன்றி
@வினோ
நன்றி
@எஸ்.கே
நன்றி
நன்றி..நானும் அதைத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
@டுபுக்கு
நன்றி
நன்றி
@மாணவன்
நன்றி
@கலாநேசன்
நன்றி
அடுத்த முறை வரும் போது நிச்சயம் மீட் பண்ணுவோம்
@மோகன் குமார்
நன்றி
@ரமேஷ்
நன்றி
நன்றி
@சிவகாசி மாப்பிள்ளை
படு மொக்கையான கான்செப்ட்..:))
@ஹரிஸ்
நன்றி
நன்றி
@ஆர்.கே நண்பன்
நன்றி
@சசிகுமார்
:))
@சிவகுமார்
நன்றி
நன்றி
@கே.ஆர்.பி.செந்தில்
ஆமா
@கனாக்காதலன்
நன்றி
@தமிழ் மாங்கனி
மிக்க நன்றி
நன்றி
@ஜி.ராஜ்மோகன்
ம்ம்ம்:))
@தருமி
நன்றி ஏன் அண்ணே சோக ஸ்மைலி..:))
@ரோஸ்விக்
நன்றி
@உழவன்
நன்றி
//
சிறுசுக அளவுக்கு பெருசுக வரலைன்னு நான் நினச்சதாலேதான் ...