Thottal Thodarum

Dec 20, 2010

கொத்து பரோட்டா-20/12/10

இந்த வார சந்தோஷம்
இந்த வாரம் பூராவும் பதிவர்களின் புத்தகங்கள் வெளியிடப்படவும், விமர்சிக்கப்படவும் போகிற வாரமாய் அமைய இருக்கிறது. வருகிற சனிக்கிழமை நண்பர் பதிவர் சுரேகாவின் “நீங்கதான் சாவி” என்கிற நூலின் வெளியீடும், பரிசல் மற்றும் என்னுடய லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகங்களின் விமர்சனக் கூட்டம், நம் எல்லோருக்கும் தெரிந்த டிஸ்கவரி புக் பேலஸில் 25ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. அடுத்த நாள் 26 ஆன்று நண்பர் நர்சிம், மற்றும் நிலாரசிகன், அகநாழிகை வாசுவின் கவிதை தொகுப்புகள் மவுண்ட் ரோடில் உள்ள எல்.எல்.ஏ. பில்டிங்கில் வெளியாகிறது.  புத்தக விமர்சனக்கூட்டத்தில் ஏற்கனவே படித்த நண்பர்கள் கலந்து கொண்டு புத்தகத்தை பற்றி பேசினால் தன்யநாவேன். நம் பதிவுலக நண்பர்கள், வாசகர்கள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு அவர்கள் சார்பாக அழைக்கிறேன். வருக.. வருக…
#######################################################
இந்த வார ப்ளாஷ் பேக்
இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்.. படம் வெளியான போது முகேஷுக்கும் ராஜ்கபூருக்கு பெரும் பாராட்டை பெற்றுத்தந்த பாடல். கேட்டால் நாமும் கரைந்து போய் அழ ஆரம்பித்துவிடுவோம்.  மேரா நாம் ஜோக்கர். பாடுவது ஜோக்கராக இருந்தாலும் உள்ளுக்குள் அழும் மனதை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார் இயக்குனர். யார்னு சொல்லுங்க பாப்போம்.
########################################################
விஜய் அரசியலுக்கு வருவார், தனிகட்சி ஆரம்பிக்க இருக்கிறார் என்பதெல்லாம் உட்டாலக்கடி என்றே தோன்றுகிறது. சினிமாவில் ரஜினியின் இடத்தை பிடிக்க நினைத்து அவர் செய்யும் அத்துனை விதமான பார்முலாக்களையும் ஃபலோ செய்பவர் விஜய். இப்போது சரிந்திருக்கும் தன் மார்கெட்டை நிறுத்திக் கொள்ள, அரசியல் நாடகம் போடுகிறார். சந்திரசேகரை வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராய் இருப்பது போல ஒரு பில்டப் செய்து வருகிறார். தன்னை ஒழித்து கட்ட பார்க்கிறார்கள் என்று சுய பச்சாதாபத்தை ஏற்படுத்தி சிம்பதியை அள்ள பார்க்கிறார். பத்திரிக்கைகளும் ஒரு காலத்தில் ரஜினி பெயரை வைத்து ஓட்டி நீர்த்து போய்விட்டதால். வேறு ஒரு நடிகர் தேவையெனும் நேரத்தில் விஜய் அவர்களுக்கு அவலாய் இருப்பது ரொம்ப சந்தோஷமே.. விஜய் வெறும் அவல்தான்
###############################################
இந்த வார வீடியோ
டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் வெரி மச்.. இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு அப்படித்தான் தோன்றும்.
#################################################
இந்த வார விளம்பரம்
######################################
நண்பர் கார்த்திகை பாண்டியன் வந்திருந்தார் அத்திரியுடன். இரண்டு பேரையும் ஒரு அருமையான பாருக்கு நானும் பதிவுலக பயில்வான் பெஸ்கியும் அழைத்துச் சென்றோம். க.பாண்டியன் இருந்த வடை ப்ளேட்டுகளை மட்டும் ஒரு கட்டு கட்டினார். ஏற்கனவே மதுரை மண்ணின் மாறாத அன்புக்கு சொந்தக்காரர். வெறும் சைட் டிஷ்சை மட்டும் சாப்பிடும் ஆளாய் இருப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது. அப்புறம் ஒரு ரகசியம் மனுஷன் ரெண்டு போன் வச்சிருக்காரு.. அந்த நம்பரை கேட்டா தர மாட்டேங்குறாரு… சரி.. விடுங்க ஒரு கெட்ட பழக்கமில்லைன்னா.. இன்னொரு கெட்ட பழக்கம் இருக்கும் போல.. அத்திரி வீடு போய் சேர்ந்துவிட்டாரா என்று கேட்க போன் செய்த போது “அய்யோ.. அம்மா” என்று வலிக்காமல் போட்ட சத்தம் கேட்டது.. வாழ்க குடும்பஸ்த்ரீகள்.
####################################################
சமீபகாலமாய் எனக்கு மிகவும் பிடித்த ஜாயிண்ட் என்றால் அது சினி சிட்டி எனும் ஹோட்டல் தான். அதில் இருக்கும் கரோக்கே பாரில் கையில் ஒரு க்ளாஸ் ஓயினையோ, பீரையோ, ப்ரெஷ் ஜூசையோ, மாக்டெயிலையோ, சப்பிக் கொண்டு, நமக்கு பிடித்த பாடல்களை பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருப்பது குடிப்பதை விட ஒரு மடங்கு அதிகமான  போதையே.. ஆம நிஜமாகவே சொல்கிறேன் இசை ஒரு போதை அதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும். சினிமா தொடர்புள்ள, ஆசையுள்ள, இருந்து இல்லாமல் பொட்டி தட்டுபவர்கள் என்று பல பேர் அங்கு வருவார்கள். நிறைய பதிவர்கள், வாசகர்கள் என்று யாராவது ஒருவர் புதிதாய் அறிமுகமாகி என்னிடம் வந்து பேசாமல் இருக்கமாட்டார்கள் ஒவ்வொரு விசிட்டிலும். எனக்கும் அப்துவுக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது. அவரது நூறுவருஷம் பாட்டிற்கும், நானும் அவரும் சேர்ந்து பாடும் வேட்டையாடு விளையாடு படப் பாடலுக்கும், என்னுடய பழைய ராஜா பாடல்களுக்கும். நேரமிருந்தால் சென்னையில் இருப்பவர்கள் ஒரு முறை வந்து உணரலாம் இசையெனும் போதையை.
#####################################################
ஸ்ரீலங்காவிலிருந்து ஜனா, லோஷன், கூல்பாய் கிருத்திகன்,மற்றும் பல பதிவர்கள் முந்தா நாள் மதியம் ஒன்றாய் கூடியிருந்த நேரத்தில் போன் செய்து பேசினார்கள். அவர்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பு மாற்றி, மாற்றி போனை வாங்கி பேசியதில் தெரிந்தது. இலங்கை பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து பதிவர் சந்திப்புக்கு முன் நாள் கிரிக்கெட் போட்டி வைத்து விளையாடியிருக்கிறார்கள். பதிவர் சந்திப்பு இனிதே நடந்திருக்கும் என்று நம்புகிறேன். மதி.சுதாவை பற்றி கூட கேட்டேன். அவர் அங்கு வர இயலவில்லை என்று சொன்னார்கள். நன்றி நண்பர்களே...
###################################################################
இந்த வார கடுப்பு
இம்சைகளில் பல விதமான இம்சைகள் இருக்கிறது அது போன் இம்சை. நண்பர் ஒருவர் இது வரை நான் அவரை பார்த்ததில்லை. எப்படியோ ஒரு முறை என் நம்பர் கிடைத்து என்னிடம் பேச ஆரம்பித்தார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பேசிவிடுவார். எப்போது போன் செய்தாலும் போனவாரம் தான் சென்னைக்கு வந்தேன் அர்ஜெண்டா கிளம்பிட்டேன் என்பார். எடுத்தவுடன் தான் செய்யும் ஏதோ ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் பற்றி சொல்ல ஆரம்பிப்பார். நானும் ஒரு மரியாதைக்காக  கேட்டுவிட்டு ஆர்வமில்லை என்று சொல்லிவிடுவேன். இம்முறை நான் ஷூட்டிங் லேட் நைட் தான் வந்தேன். ஏழு மணிக்கு ஒரு போன். புதிய நம்பர். தூக்க கலக்கத்தில் எடுத்தேன். என் குரலின் தன்மை கேட்டு “என்ன தூங்கறீங்களா? என்று கேட்டார். தூக்கம் என்னை கெஞ்சியது. ‘ஆமாம் என்றேன். அவர் “சரி அதான் எழுப்பியாச்சே.. என்று எதோ ஒரு புதிய மார்க்கெட்டிங்கை கான்செப்டை பற்றி சொல்ல ஆர்ம்பித்துவிட்டார். Dont they have any basic ethics?
###################################################################
இந்த வார தத்துவம்
மற்றவர்கள் முன் நீ திறமையானவனாக இரு. உன் மனைவியிடம் மட்டும் முட்டாளாகவே இரு. வாழ்கையில் சிறக்க அதி புத்திசாலித்தனமான யுக்தி.

எதிர்காலம் என்பது நாம் நாளை பற்றி ப்ளான் செய்தது இல்லை. நான் இன்று செய்த செயல்களுக்கான பதில் தான் அது. எனவே இன்றே செய் அதை நன்றே செய்.
###################################################################
பெண்கள்
இன்னொசெண்ட் பசங்களை ஏமாற்று
அழகான பையன்களுடன் சந்தோஷமாய் இரு
நல்ல பையன்களுடன் நட்பாயிரு.
நம்பிக்கையான பையனுடன் காதலாயிரு.
கல்யாணம் மட்டும் நல்ல பணக்கார அங்கிளாய் பார்துக் கொள்.
##################################################################
ஜோக்
ஒரு ஆட்டோமொபைல் இன்ஞினியரின் மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. உடனே அவன் மனைவி அவனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாள். “உன் புதிய வண்டி வெளிவந்துவிட்டது” என்று.. அதற்கு அவன் பதிலுக்கு அனுப்பினான் “வித் கியரா.. வித் அவுட் கியரா?” என்று.

நானோ காரிலிருக்கும் இரண்டு பிரச்சனைகள் 1)ஒரு கர்பிணிப் பெண்ணை சுலபமாய் உள்ளிருக்க வைக்க முடியாது 2) ஒரு பெண்ணை கர்பிணியாக்கவும் முடியாது.
###################################################################
அடல்ட் கார்னர்
டெல்லியில் ஒரு நியூஸ் பேப்பரில் விளம்பரம் வந்திருந்தது. பெண்களில் முக்கிய இடங்களில் ஷேவ் செய்ய ஆட்கள் தேவை என்று. உடனே தில்காசிங் போன் போட்டார். எதிர்முனை உனக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்று கேட்டார்.
தில்கா: இல்லை
எதிர்முனை: இல்லை இந்த கல்யாணம் ஆன ஆளுங்களோட பொண்டாட்டிக்கு இந்த வேலை பிடிக்கலை, சரி.. உன் கிட்ட பாஸ்போர்ட் இருக்கா? என்றதும் தில்கா சந்தோஷமாய்.
தில்கா: ம்.. இப்பத்தான் வாங்கி வச்சேன்
எ.முனை: இல்லை.. வெளிநாட்டு மாடல்கள் எல்லாம் ஊர் ஊரா சுத்துரவங்க… அதனால அவங்க கூடவே போகணும், ஷேவ் பண்ணனும் அதான். அப்புறம் உலகத்தில சூப்பர் சூப்பரான அழகான பொண்ணுங்களுக்கு ஷேவ் பண்ணனும். நீ டென்ஷன் ஆக மாட்டியே ஏன்னா தொழில் தர்மம்னு ஒண்ணு இருக்கு தெரியுமில்ல. ஆனா அவ இஷ்டபட்டா அவங்களோட ஈவினிங் டின்னர் பார்ட்டின்னு கம்பெனி கொடுக்கணும் ஓகேயா..?
தில்கா: சந்தோஷத்துடன்.. சார் நான் அப்படியெல்லாம் இல்ல சார்.. நான் சரியா தொழில் செய்வேன்
சார்
எ.முனை:அப்ப நீ அவங்களுக்கு அந்த இடத்தில ஷேவ் பண்ணும் போது டெம்ப்ட் ஆக மாட்டே அப்படித்தானே.
தில்கா: அட நான் ரொம்ப நேர்மையான தொழிலாளிசார்.. என்று உறுதியளிக்க
எ.முனை: சரி அப்படின்னா உனக்கு நாளைக்கு கன்யாகுமரிக்கு டிக்கெட் போட்டு தர்றேன் நீ கிளம்பிடு. என்றதும் தில்கா சிங் சந்தோஷமாகி
தில்கா: அப்ப நாளைக்கு அங்கதான் நான் ஜாயின் பண்ணணுமா? என்று ஆர்வத்துடன் கேட்க,
எ.முனை; அங்க தான் இண்டர்வியூக்கான க்யூ லைன்ல உன் நம்பர் வருது என்றார்
###################################################################
கேபிள் சங்கர்

Post a Comment

35 comments:

a said...

விமர்சனக் கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...........

மொத தத்துவம் ஹா ஹா ............ சிப்பு சிப்பா வருது தல.........

a said...

ஹை............ வட என்னக்குத்தான்.........

Truth said...

// டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் வெரி மச்

இது பழசு பாஸ்!

Anonymous said...

//ஒரு கர்பிணி பெண்ணை சுலபமாய் "உள்ளிக்க" வைக்க முடியாது //

"உள்ளிக்க" இன்று புதிதாய் ஒரு வார்த்தை கற்று கொண்டேன். நன்றிக்க..

எஸ்.கே said...

விமர்சனக் கூட்டத்திற்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

இயக்குனரும் ராஜ் கபூர்தானே?

ம.தி.சுதா said...

இம்முறையும் தொய்வில்லை சகோதரம்.. அதிலும் விளம்பரம் அருமை..
இயக்குனரை யாரென்று தெரியல...
விஜய் விசயம் செம ஹொட் நியுஸ் நிஜத்தின் பிரதிபலிப்பு... வாழ்த்துக்கள்...
நண்பர்கள் சொன்னார்கள் சகோதரம்... இம்முறை சமூகம் தர முடியாமல் போய்விட்டது... அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம்... தங்கள் பாசத்திற்கு மிக்க நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10

வினோ said...

அண்ணா இந்த வர தத்துவம் அருமை...

ஷண்முகா said...

joke super boss...

vijay may look like 'aval' right now.....definatly he'll not do the same mistake as rajini( varave illa)
or vijaya kanth( Late-a athum thaniya vanthutaru)...

vijay move konjam different-a irrukku parpom ...but neenga sonnamathiri nadakkathonnu oru thought avlothan.,...

as usual kothu super...

மேவி... said...

LLA பில்டிங் ... முடிந்தால் நிச்சயம் வருகிறேன்

"வெறும் சைட் டிஷ்சை மட்டும் சாப்பிடும் ஆளாய் இருப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது"

அடடா ...நீங்க வரை டி கடைக்கு கூட்டிட்டு போயிருக்கனும் ...அப்ப தெரிஞ்சு இருக்கும்

“அய்யோ.. அம்மா” என்று வலிக்காமல் போட்ட சத்தம் கேட்டது.. வாழ்க குடும்பஸ்த்ரீகள்"

என்னொரு வில்லத்தனம்

இசை போதையை மட்டும் தான் என்னால் அனுபவிக்க முடியும் ...வேறு போதை என்றால் அம்மா அடிப்பாங்க

ஏ ஜோக் ரொம்ப சும்மார் ரகம் :)))))))

= =

தல உங்க சினிமா வியாபாரம் இப்ப தான் படிச்சு முடிச்சேன் ..நல்லாயிருக்கு

செங்கோவி said...

அடடா, இந்த வாரம் நான் சென்னையில் இல்லை..உங்க விழாவிற்கு வரமுடியாமைக்கு வருந்துகிறேன்.
---செங்கோவி
அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரை பயணமும்

Philosophy Prabhakaran said...

// மற்றவர்கள் முன் நீ திறமையானவனாக இரு. உன் மனைவியிடம் மட்டும் முட்டாளாகவே இரு. வாழ்கையில் சிறக்க அதி புத்திசாலித்தனமான யுக்தி. //

இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே....

ஜெயந்த் கிருஷ்ணா said...

விமர்சனக் கூட்டத்திற்கு வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கேட்டால் நாமும் கரைந்து போய் அழ ஆரம்பித்துவிடுவோம். ///

என்னது கரைஞ்சு போயிடுவமா?

R.Gopi said...

கொத்து பரோட்டா வழக்கம் போலவே நன்றாக இருந்தது....

“மேரா நாம் ஜோக்கர்” டைரக்டர் ராஜ்கபூர்....

Jana said...

கொத்து வழமைபோலவே அருமை அண்ணே. ஸ்ரீ லங்கா பதிவர் கிரிக்கட் போட்டிகளும், சந்திப்பும் இனிதே நிறைவடைந்தது. இங்கே தங்கள்மேல் அனைவருமே பாசமும், நன் மதிப்பும் வைத்துள்ளனர். நன்றி அண்ணே.

சுரேகா.. said...

நன்றி ஜி!

தத்துவம் அருமை!

ராஜ்கபூர்.....ஒரு சகாப்தம்!

Unknown said...

சூப்பருங்கோ

Unknown said...

ம்...ஹூம்ம் ...

Anonymous said...

'சினி சிட்டி' அறிமுகத்திற்கு நன்றி.

"நண்பர் கார்த்திகை பாண்டியன் வந்திருந்தார் அத்திரியுடன். இரண்டு பேரையும் ஒரு அருமையான பாருக்கு நானும் பதிவுலக பயில்வான் பெஸ்கியும் அழைத்துச் சென்றோம்."

அதுவும் அதே பாரா ? கேப்போமில்ல detailu ....

அருண் said...

தத்துவம் அருமை,பெண்கள் ஜோக் எல்லாமே அருமை,டெக்னாலாஜியும் சூப்பர்.பாடல் பிடிச்சிருக்கு.

pichaikaaran said...

கமலுடன் ரஜினியை கம்பேர் செய்தது சரியில்லை என உங்களுக்கே தோன்றி விட்டது..

இபோது ரஜினியுடன் விஜயை ஒப்பிட ஆரம்பித்து விட்டீர்கள்.. இதை ரஜினி, விஜய் இருவருமே ஏற்க மாட்டார்கள்..

கமல் காப்பி அடித்தது படம் எடுக்கிறார்.. அவரை மக்கள் ஏற்கவில்லை... என்பதெல்லாம் உண்மை என்றாலும் அவரிடம் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் இருக்க கூடும்...

அதை பற்றி சொல்லுங்கள்...

அதை விட்டுவிட்டு, கமலை மேம்படுத்தி காட்டுவதற்காக , ரஜினியை தேவையில்லாமல் சீண்டுவது நகைப்புக்கு உரியது...

KANA VARO said...

கொத்துபரோட்டா வழமையான சுவையுடன். இலங்கைப் பதிவுலகமும் இவ்வாரம் நன்றாகவே கழிந்தது. உங்களுடன் கதைத்ததும் மகிழ்ச்சி.

Sundar said...

இவ்வளவு வாசகர்கள் கொண்ட நீங்கள், பாருக்கு போவதையும், மது அருந்துவதையும், நாசுக்கு கலந்த பெருமையுடன் குறிப்பிடுவது நல்லதா? நீங்கள் உண்மையை மறைப்பவர் இல்லைதான். நானும் மது அருந்துபவந்தான். இருந்தாலும், இப்பிடி எழுதலாமா? இப்பொழுதெல்லாம், பொது இடங்களிலும், எழுத்திலும் கெட்டவார்த்தை உபயோகிப்பது, இந்த மாதிரி விஷயங்களை நாசுக்காக ஒப்புக்கொள்வது எல்லாம் பெரிய மனுஷத்தன் என்று ஆகிவிட்டதோ???

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Nice :)

Santhosh said...

கலக்கல் ஜோக்ஸ் அண்ணே :)

Santhosh said...

இந்த MLM ஆளுங்களை சமாளிக்க அவங்களை மாதிரியே நாமளும் பேச ஆரம்பிக்க வேண்டும்.. முக்கியமா அவங்களுக்கு நம்ம மிஸ்டுகால் குடுத்து பேசினால் ஜென்மத்துக்கும் உங்க பக்கம் வர மாட்டாங்க..

சிங்கை நாதன்/SingaiNathan said...

//எடுத்தவுடன் தான் செய்யும் ஏதோ ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் பற்றி சொல்ல ஆரம்பிப்பார்.//

சரி விடுங்க விடுங்க , நீங்க "பிரமிட்" நடராஜன் சாருக்கு நெருக்கம்னு தெரிஞ்சு தப்பா புரிஞ்சுகிட்டு இருக்காரு போல,.

இப்ப எழுதிட்டீங்கில்ல இனிமே தொந்தரவு பண்ண மாட்டாரு ;)

அன்புடன்
சிங்கை நாதன்

அத்திரி said...

அண்ணே நல்லா இருக்கீங்களா???

Cable சங்கர் said...

@வழிப்ப்போக்கன்
நன்றி

@ட்ரூத்
எப்பவும் அது புதுசா இம்ப்ரூவ் ஆயிட்டுதானேருக்கு

@டாக்டர் ஒண்டிப்புலி
நன்றி

@எஸ்.கே
நன்றி

@கிருத்திகன்
ஆமாம்

@மதிசுதா
நிச்சயம் சந்திப்போம்

@வினோ
நன்றி

Cable சங்கர் said...

@ஷண்முகா
நன்றி

@டம்பிமேவி
முடிஞ்சா ஒரு புத்தக விமர்சனம் போடுங்க..

@செங்கோவி
ஓகே அடுத்த வாரம் மீட் செய்வோம்

@பிலாசபி பிரபாகரன்.
அப்படியா?

@வெறும்பய
நன்றி

@ரமேஷ் ரொம்ப நல்லவன்

கரைந்து என்பதன் மறுவூ

Cable சங்கர் said...

@ஆர்.கோபி
நன்றி

@ஜனா
நன்றி

@சுரேகா
நன்றி

@விக்கிஉலகம்
நன்றி

@கே.ஆர்.பி
நலலாயில்லையா?

2

Cable சங்கர் said...

@மியூசிக் டுடே
இல்லை..

@அருண்
நன்றி

@பார்வையாளன்

Cable சங்கர் said...

//கமலுடன் ரஜினியை கம்பேர் செய்தது சரியில்லை என உங்களுக்கே தோன்றி விட்டது..//

ஆமாம்.. கமலுடன் ரஜினியைப் போய் கம்பேர் செய்தது சரியில்லைதான்.

//இபோது ரஜினியுடன் விஜயை ஒப்பிட ஆரம்பித்து விட்டீர்கள்.. இதை ரஜினி, விஜய் இருவருமே ஏற்க மாட்டார்கள்..//

அதை சொல்ல நீங்கள் யார்?

//கமல் காப்பி அடித்தது படம் எடுக்கிறார்.. அவரை மக்கள் ஏற்கவில்லை... என்பதெல்லாம் உண்மை என்றாலும் அவரிடம் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் இருக்க கூடும்...//

ஆமா எந்திரம் மட்டும் சொந்தமா மல்லாக்க படுத்து யோசிச்சதாக்கும்

//அதை பற்றி சொல்லுங்கள்...

அதை விட்டுவிட்டு, கமலை மேம்படுத்தி காட்டுவதற்காக , ரஜினியை தேவையில்லாமல் சீண்டுவது நகைப்புக்கு உரியது..//

ரஜினி என்ன விமர்சனத்துக்கு அப்பார்பட்டவரா..?

Cable சங்கர் said...

@கனாவரோ
நன்றி

@சுந்தர்
சுந்தர்.. வாசகர்களுக்கு தெரியும் அவரவர் வாழ்கைய எப்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. வாழ்கையை அதன் போக்கில் வாழ வேண்டும். அதுவும் ஒரு அனுபவ்ம் தான்.. இதை பெரிய மனுஷத்தனமாகவும் பார்கக்லாம். சில்லியாகவும் பார்க்கலாம். எல்லாமே உங்களுடய பர்செப்ஷன் தான்.

@கனா காதலன்
நன்றி

@சந்தோஷ்
நன்றி
அதை பண்ணி நீங்க தான்ணே கூப்பிடீங்கன்னு சொல்லிட்டா..

@சிங்கைநாதன்
ஹா..ஹா..

@அத்திரி
சரி ஓனர்.. நல்லாருக்கேன்