Posts

Showing posts with the label captain news

கொத்து பரோட்டா-10/06/13

Image
மாலை நேரங்களில் சாலிக்கிராமத்திலிருந்து வடபழனி பஸ்ஸ்டாண்ட் வருவதற்கு தாவூ தீர்ந்து விடுகிறது. சரி அங்கே வந்த பிறகாவது வடபழனி வரை ஈஸியாய் போய்விட முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. முக்கியமாய் அருணாசலம் சாலையிலிருந்து கே.கே.சாலைக்கு திரும்பும் வண்டிகள், அம்பிகா எம்பயரிலிருந்து ப்ரசாத் லேப் பின் பக்கம் இருக்கும் ஏரியாவிலிருந்து வரும் வண்டிகள், எதிர்புறம் வரும் வண்டிகள் என்று பாட்டில் நெக் இடமாய் அமைந்துவிட்டது. மாலை நேரங்களில் அங்கே போலீஸாரை போட்டு போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தலாம். நேற்று ஆறரை மணிக்கு காரெடுத்து கிளம்பவன் அடுத்த நூறு மீட்டர் போவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆனது. அதுவும் நான் போக வேண்டிய ரோட்டுக்கு போக முடியாமல் மேலும் அரை மணி நேரம் காத்திருந்தும் பிரயோஜனமில்லாமல் கிலோ மீட்டர் சுற்றி போய் அங்கேயும் கொஞ்சம் நேரம் ட்ராபிக்கில் மாட்டி மெயின் ரோடை பிடித்தேன். ஏற்கனவே ஒரு கொத்து பரோட்டாவில் சொல்லியிருந்தது போல, வடபழனியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மாலில் உள்ள தியேட்டர்கள் திறந்தவுடன் தான் தெரிய போவுது வடபழனியின் லட்சணம். கொஞ்சம் கவனிங்க போலீஸ் சார். @@@@@@@@@@@@@@@@@@@

கேப்டன் டீவி பேட்டி

Image