Posts

Showing posts with the label பிண்ணனி

இசையெனும் “ராஜ” வெள்ளம்-3

Image
இளையராஜா, மணிரத்னம் நாயகன் இந்த படம் ராஜா- மணி காம்பினேஷனில் வந்த ஒரு முக்கியமான படம். மணி ராஜாவுக்காகவே எடுத்தார் போல் சில காட்சிகளை எடுத்திருப்பார். படம் முழுவதும் ராஜாவுக்கும் மணிக்கும் யாருடையது பெஸ்ட் என்று ஒரு போட்டி இருந்து கொண்டேயிருக்கும். இப்படத்தின் வெற்றியில் மணி, கமலுக்கு எவ்வளவு பங்கிருக்கிறாதோ, அதே அளவு பங்கு ராஜாவுக்கு உண்டு. தென்பாண்டி சீமையிலே என்கிற பாடலை படம் முழுவதும் ஒரு பின்ணனி இசையாகவே படத்தின் மூட்டுக்கு ஏற்றார் போல் உபயோகபடுத்தியிருப்பார். அதே போல் படத்தில் வ்ரும் டிரான்ஸிசன் காட்சிகளுக்கு எல்லாம் ஒரு வயலின் வைத்து நகர்த்துவார். பிண்ணனி இசை என்பது வெறும் வாத்தியங்களின் ஒசை மட்டுமல்ல, எங்கெங்கே ஓசையில்லாம் இருக்க வேண்டும் என்றும் சொல்லி கொடுத்த படம். நிறைய இடஙக்ளில் எபக்டுகளிலேயே படத்தை நகர்த்தியிருப்பார். இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி. நாயக்கர் ஏ.சியை பார்க்க அவரது ப்ளாட்டுக்கு போய், வேலைக்காரியிடம் போய் ஏசியை கூப்பிடு என்று சொல்லிவிட்டு காத்திருப்பார். அந்த நேரத்தில் வீட்டை சுற்றி பார்வையை ஓட்ட, ஒரு இடத்தில் பார்வை நிலைத்து நிற்கும், அ...