Posts

Showing posts with the label காவல் துறை

தற்கொலை செய்து கொள்ளும் தமிழக காவல்துறை

ஆம் நண்பர்களே.. தமிழக காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வழக்கமாய் இவர்கள் இம்சை தாங்காமல் மக்கள் தானே செய்து கொள்வார்கள் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் இந்த விஷயம் ஏதோ  காவல்துறையை கிண்டல் செய்ய சொல்லவில்லை. நிஜமாகவே தமிழக் காவல் துறையில் தற்கொலைகள் பெருக ஆரம்பித்துவிட்டன. நேற்றைய பேப்பரில் மட்டும் சுமார் மூன்று தற்கொலைகள். ஒருவர் இளைஞர். இவர் இத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டதே இவரது குத்துசண்டை சான்றிதழ்களை வைத்துதான். இவர் இத்துறைக்கு தேர்வானதும், பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்குவதை கனவாக கொண்டிருந்த வேளையில் உயரதிகாரிகள் இவரை குத்து சண்டை போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை விதித்ததால்,மனம் நொந்து, மன உளைச்சலால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சுமார் 58 வயதான உதவி சூப்பிரண்ட். இவர் ஒரு ஹோட்டல் ரூமில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னை ஒரு பெண் தொந்தரவு செய்வதால் அந்த மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார். இவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து, அவளிடமிருந்து விலகியிருந்திருக்கிறார். தன்னோடு...