Posts

Showing posts with the label புத்தக விமர்சனம்

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1

Image
  நான் ..ஷர்மி ..வைரம்.. ஆண் விபச்சாரம், கிரைம் என்று ஒரு விறுவிறுப்பான திரில்லர். காமத்தயிரை கடைந்து கொடுத்திருக்கிறார் என்றும் சொல்வோம் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா.. மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன் .. நன்றி மணிஜி நான் ஷர்மி வைரம் கிண்டில் வர்ஷன் வாங்க லிங்க் https://amzn.to/2qxcgiF நான் ஷர்மி வைரம் புத்தகம் அமேசானில் வாங்க https://amzn.to/2P3SSUi

தெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்களும்

Image
மெளனமான பெரும் வரவேற்பை புத்தக கண்காட்சியின் இளைய, புதிய தலைமுறை வாசகர்களை வசீகரிக்கும் சங்கர் நாராயணின் next 2 சிறுகதைத் தொகுப்பு தெர்மக்கோல் தேவதைகள். 2012- உ வெளியீடு.

ஜீவாவிடமிருந்து ஒரு கடிதம்.

Image
திரு.சங்கர் நாராயண்,  வணக்கம் உங்களுக்கு...  வாழ்த்துக்கள் பொங்கலுக்கு...

மரியா கேண்ட்டீன்

Image
மரியா கேண்ட்டீன் பத்திரிக்கையாளர் சி.முருகேஷ்பாபு எழுதி வெளிவரும் முதல் சிறுகதை தொகுப்பு. முன்னாள் விகடன் க்ரூப். ஒரு வருடத்திற்கு முன்னால் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வேலைப் பார்க்கும் இணைய இதழுக்காக தொடர் கட்டுரை எழுதக் கேட்டிருந்தார். அந்நேர வேலை பளு காரணமாய் எழுத முடியவில்லை. அதன் பிறகு பல முறை தொலைபேசியிலேயே பேசிக் கொண்டிருந்தோம். கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்பட மார்கெட்டிங் நிகழ்வில்தான் அவரை நேரில் சந்தித்தேன். படு சுவாரஸ்யமான மனிதர். நான் எழுதும் எல்லா பதிவுகளையும் படித்துவிட்டு பின்னூட்டமிட்டிருப்பவர் என்று அறியும் போது சந்தோஷமாயிருந்தது. அவரின் இந்தத் தொகுப்பு பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் புத்தகங்களை மட்டுமே வெளியிடும் பட்டாம்பூச்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வெளியான அன்றே வாங்கி விட்டேன்.

சாமியாட்டம்

Image
மூத்த பதிவரும், பத்திரிக்கையாளருமான யெஸ்.பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு இந்த சாமியாட்டம். இதற்கு முன்னால் இவர் அரவாணிகளைப் பற்றிய நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளை அடங்கிய இந்த தொகுப்பு 2003 –2011 வரை இவர் எழுதிய சிறுகதைகளின் மொத்தமாம்.  உட்காந்து எழுதியிருக்காரு போல. பாலபாரதியுடன் பேசி பழகியவர்களுக்கு, கதை வாசிக்கையில் அவரின் குரலில் கேட்பதை தவிர்க்க முடியாது. அவ்வளவு கம்பீரமான குரல் மனுஷனுக்கு. சிரித்தால் ப்ரம்ம ராட்ஷசன் போலச் சிரிப்பாரு. சரி.. நாம கதைகளுக்கு வருவோம். 1. கோட்டி முத்து. மனநிலை பிழன்றவனோ என்று யோசிக்க வைக்கும் கேரக்டர். இம்மாதிரியான ஆட்கள் ஊருக்கு ஒருத்தர் நிச்சயம் இருப்பார்கள். தனக்கென்று யாருமில்லாமல் ஊருக்காக நேர்ந்து விட்ட ஆளாக சுற்றியலையும் இவனைப் போன்றவர்களின் முடிவு என்னவாக இருக்குமோ அது போலவே தான் இவன் முடிவும் இருக்கிறது.

புத்தகக் கண்காட்சி –நாள் 6- தெர்மக்கோல் தேவதைகள் விமர்சனமும்.

Image

ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.

Image
வெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.

புத்தக விமர்சனங்கள்.

Image
அன்பு நண்பருக்கு வணக்கம், தங்களின் ‘கொத்து பரோட்டா’ “சினிமா வியாபாரம்” “மீண்டும் ஒரு காதல் கதை” ஆகிய முக்கனியை சுவைத்தேன். தெவிட்டாத இன்பம் கண்டேன். சங்கீத விமர்சகர் சுப்புடு போல தங்களின் தைரியமிக்க விமர்சனமும், வீரியமும், என்னை கவர்ந்தது. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது போல, தங்களின் சாட்டையும், சேட்டையும் தூள். காமெடிக்கு பஞ்சம் என சில சினிமாக்களில் தெரியும். அவர்கள் உங்கள் கொத்து பரோட்டாவை சுவைத்தால், ரோட்டுக்கடை சால்னாவோடு சாப்பிடும் சுவை அறிவர். மனம் தெளிவர்.

Revolution 2020

Image
ஏதோ ஆங்கில படத்தின் விமர்சனம் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. டைட்டிலைப் பார்த்ததும் எனக்கு அப்படித்தான் தோன்றியது. ஆனால் எழுதியது சேத்தன் பகத் என்றதும் ஓகே.. இன்னொரு ஹிந்தி ஃபீல் குட் கதை ரெடி என்று தோன்றியது. சேத்தன் பகத்தை பற்றி ஆளாளுக்கு 3 இடியட்ஸ் படம் வந்த போது பேசினார்கள். அவரின் கதையைத்தான் இவர்கள் எடுத்தார்கள் என்று. ஆனால் அவருக்கு க்ரெடிட் கொடுக்கவில்லை என்றெல்லாம் கூட சொன்னார்கள். படத்தின் ஆரம்பத்தில் நன்றி போட்டததோடு சரி. ஆனால் முழுக்க, முழுக்க அவரின் நாவலை அடிப்படையாக வைத்துத்தான் எடுக்கப்பட்டது என்றும் சொல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கு உடனே அவரின் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அந்த படத்தின் மூலமான Five Points to Someone ஐ படிக்க பெரிதாய் ஆர்வமில்லை. அப்போதுதான் 3 idiots படத்தை பார்த்ததினால் வேறு ஏதாவது புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம் என்று One night @ call centre ஐ வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அப்புறம் தான் புரிந்தது இவர் ஏன் இவ்வளவு பிரபலமான எழுத்தாளராக இருக்கிறார் என்று. மிகச் சுலபமான ஆங்கிலத்தில் நம் இந்திய கேரக்டர்களுடனா...

கவிஞரின் பார்வையில்....

Image
rajasundararajan@gmail.com அன்பின் சங்கர், போக்குவரத்தில் வண்டி ஓட்டிச் செல்கிற போது, நமக்கு முந்தி, பிந்தி, அடுத்து ஊர்கிற வண்டியோட்டிகளின் மன-ஓட்டம் இன்னதென்று அறியக் கிட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா? ‘பதேர் பாஞ்சாலி’ பார்த்த போது, அந்தக் கிழவிக் குணவார்ப்பின் மன-ஓட்டங்கள் அப்படி அப்பட்டமாகப் புரியவர - வியந்தேன் என்று சொல்லமாட்டேன் – திகைத்தேன்! ஏனென்றால், அதுவரை நான் பார்த்திருந்த (தமிழ், ஆங்கில, ஹிந்தி) மசாலாக்களில் ஆக்ஷன், பேச்சு, பின்னிசை அளவிலேயே கதை நகர்த்துதலைக் கண்டிருந்தேன். மெய்ப்பாடுகள் வழியாகத்தான் குணவார்ப்புகள் விளக்கம் பெறுகின்றன. உண்மைதான், ஆனால் கதைக்கள விவரணைதான் அதற்கு அர்த்தம் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஆடுகளம்’ படத்தில், நடிகர்கள் ஓரொருவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் கதைக்களம் எடுத்துத் தொடுக்கப்பட்ட வகையினாலேயே அக் குணவார்ப்புகள் தனித்தன்மை பெறுகின்றன. அப்படி, இயக்குநரே கர்த்தாவாகிறார். புத்தக வடிவுக்குட்பட்ட உங்கள் கதைகள் அத்தனையையும் வாசித்துவிட்டேன். உண்மையில், வாங்கி இரண்டு நாட்களில் இரண்டு புத்தகங்களையும் முடித்துவிட்டேன...

ஒரு கவிஞரின் புத்தக விமர்சனம்

ஓரு இலக்கிய விழா கூட்டத்தில் தான் அந்த புத்தகக் கடை அறிமுகம் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸ். ஒரு புராதனமான மாடிப்படிகளுடன் இருந்தாலும் உள்ளே புத்தகக் கடை பெரிதாக, நான் தேடிய சில அரிய புத்தகங்களைக் கொண்டதாக இருந்த்து. அன்று விழா முடிந்து தேடின சில புத்தகங்களுக்கு நடுவே இந்த புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வசிகரித்ததால் (சில்க் ஸ்மிதாவின் படம் போல) எடுத்து பார்த்த புத்தகம் தான் ‘லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” என்ற புத்தகம். எனக்கு குடிப்பழக்கம் கிடையாது என்பது எப்போதும் கிடையாது. என் நண்பர்களுக்கு உண்டென்பதால், பெயர் பார்த்ததும் புரிந்த்து ஏதோ இருக்கின்றது என. ஒரு முறை என் இலக்கிய நண்பர்களூடய வீட்டிலிருந்த புத்தகங்களூல் இருந்த, எனக்கு பிடித்த எழுத்தாளர் ‘சுதேசமித்ரனின் ‘காக்டெயில்’ புத்தகத்தை  எனக்கு படிக்க  தரமாட்டேன் என்று ஒளித்து வைத்து தராத வன்மம் வேறு.(ஆண்கள்?) இருந்தது. ஆனா இன்னிக்கு, அடடா நமக்குன்னு இங்க ஒரு ஆள் எழுதியிருக்கானே!. டாடி, மம்மி வீட்டில் இல்ல’ன்னு மனசுல பாட்டுச் சத்தம் கேட்டது. எடுத்திட்டேன். முதல்ல எழுதினவன் பெயரைப் பாத்தேன். ஆகா சங்கர் நாராயண்....

வெட்டுப்புலி –புத்தக விமர்சனம்

Image
இப்புத்தகத்தை பற்றி நிறைய பேர் சிலாகித்து சொன்னார்கள். எழுதியிருந்தார்கள். ஒரு சினிமாவை பற்றி பதிவெழுதி நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு நாவலை இப்படி விமர்சித்து நிறைய பேர் சொன்னது என்னுள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. சொல்லி வைத்து டிஸ்கவரியிலிருந்து வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன். வெட்டுபுலி படம் போட்ட தீப்பெட்டியில் இருக்கும் தன் மூதாதையரான தாத்தாவின் வரலாறு தேடி போவதாய் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் சினிமாத்தனமான ஆரம்பமாக இருந்தாலும், ஒரு அருமையான் கதை சொல்லிக்கான யுக்தியாய் தான் தெரிந்தது. படிப்பவர்களை மெல்ல கதைக்குள் இழுத்துச் செல்லும் லாவகமான யுக்தி. முப்பதுகளில் ஆரம்பிக்கிறது கதை. லஷ்மணரெட்டி வெள்ளைக்காரனின் குதிரையை உடல் சிராய்த்து, ரத்தம் வழிய ஓட்டப்பழகுவதோடு கதை ஆரம்பிக்கிறது.  முப்பதுகளிலிருந்து இன்றைய காலம் வரை நம் தமிழ் நாட்டு மக்களிடையே, அதுவும் கிராமத்து மக்களிடையே இருந்த கலாச்சாரம், ஜாதி, பள்ளி, பறையன், பாப்பார ஜாதிகளுக்கிடையேயான மதிப்பீடுகள், அரசியல், சினிமா, சுதந்திர தாகம், எதிர்ப்பு, ஆங்கிலேயனுக்கான மறைமுக ஆதரவு, ஆங்கிலேயனை வைத்து பிழைப்பு நடத்தி வசதி வா...