Thottal Thodarum

Jul 20, 2010

ஒரு கவிஞரின் புத்தக விமர்சனம்

ஓரு இலக்கிய விழா கூட்டத்தில் தான் அந்த புத்தகக் கடை அறிமுகம் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸ். ஒரு புராதனமான மாடிப்படிகளுடன் இருந்தாலும் உள்ளே புத்தகக் கடை பெரிதாக, நான் தேடிய சில அரிய புத்தகங்களைக் கொண்டதாக இருந்த்து.

அன்று விழா முடிந்து தேடின சில புத்தகங்களுக்கு நடுவே இந்த புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வசிகரித்ததால் (சில்க் ஸ்மிதாவின் படம் போல) எடுத்து பார்த்த புத்தகம் தான் ‘லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” என்ற புத்தகம்.

எனக்கு குடிப்பழக்கம் கிடையாது என்பது எப்போதும் கிடையாது. என் நண்பர்களுக்கு உண்டென்பதால், பெயர் பார்த்ததும் புரிந்த்து ஏதோ இருக்கின்றது என. ஒரு முறை என் இலக்கிய நண்பர்களூடய வீட்டிலிருந்த புத்தகங்களூல் இருந்த, எனக்கு பிடித்த எழுத்தாளர் ‘சுதேசமித்ரனின் ‘காக்டெயில்’ புத்தகத்தை  எனக்கு படிக்க  தரமாட்டேன் என்று ஒளித்து வைத்து தராத வன்மம் வேறு.(ஆண்கள்?) இருந்தது.

ஆனா இன்னிக்கு, அடடா நமக்குன்னு இங்க ஒரு ஆள் எழுதியிருக்கானே!. டாடி, மம்மி வீட்டில் இல்ல’ன்னு மனசுல பாட்டுச் சத்தம் கேட்டது. எடுத்திட்டேன். முதல்ல எழுதினவன் பெயரைப் பாத்தேன். ஆகா சங்கர் நாராயண். போச்சுடா வம்பு வந்த்து. நம்ம் குரு ஷங்கரநாராயணன் நினைப்பு வந்த்து. அவர் இந்த புக்கெல்லாம் படிக்காதே கீதா மாப்பசான் படின்னு சொல்ற மாதிரியும் இருந்தது.  நாம தினம் மாதா, பிதா, குரு தெய்வம்ன்னு இவங்களை கும்பிடலாம். பேச்சை மீறி அடி வாங்கிட்டு வந்து அப்புறம் கால்ல விழறது  தான் சகஜம். ஷங்கர் சாரை நோக்கி திரும்பி மன்னிசிக்குங்க சார். ஏப்ரல், மேயில பசுமையே இல்லை சார்ன்னு பாடிட்டு புத்தகத்தை வாங்கி வந்தாச்சு. அட்டையில் இருந்த போஸ் வேற கவருது.

“நாந்தாண்டா இங்க பெரிய்யய எழுத்தாளன்”னு மிரட்டற மாதிரி லுக் இருந்த்து. மாம்பழ வாசனை நல்ல வேளை இல்லை. பின்னட்டையில் ஆசிரியர் குறிப்ப திரும்ப திரும்ப படிச்சேன். நமக்கு திருச்சில ஏர்போர்ட் பக்கத்தில செம்பட்டுனு சொல்வாங்க். இங்கே தாதாக்கள் புகழ் அதிகம். கேபிள் சங்கர் பெயரை வச்சிட்டாலும் நல்ல தாதா போலருக்குன்னு நினைச்சிட்டு படிக்கவும், ரசிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்.   இதையெல்லாம் ஏன் நான் இவ்வளவுதூரம் சொல்றேன்னா நான் இப்படித்தான் சார் என் தேடல் எங்க ஆரம்பிக்குது, அது எங்க முடியுதுன்னு எனக்கே தெரியாது. சரி கதைகளுக்கு வருவோம்.

சங்கர் தனது சிறுகதைகளில் ஜெயிக்கும் விதம், கதையை எடுத்தவுடனே நம்பிக்கையோட ஆரம்பிச்சுடறார். அதுலே எனக்கு பிடிச்சது முன்னுரையில வேற இந்த மாதிரி, இந்த மாதிரின்னு எழுதினவர் ஒரு மாதிரி சாக்லெட் தந்துட்டார். ஸோ.., படிக்க ச்சும்மா ரன்வேயில விமானம் மெதுவா வேகமெடுத்து கிளம்புற மாதிரி, அழகா கதையில் ஒரு முன்னேற்றம் (அப்பாடா.. ஏர்போர்டுல வசிக்கிறது நல்லதா போச்சு) வந்துருது.

அப்புறம் எந்த சம்பவத்தையும் எழுத்தில் சொன்னாலும் நம்பறா மாதிரியே எழுதறாரே, அது எப்படின்னு இன்னமும் பிரம்மிப்போட இருக்கேன் நிஜமாலுமே. ஆனாலும் எனக்கென்ன பயம்னா நிச்சயம் முட்டாள்களோட பழகிடலாம், இந்த கேபிள் சங்கரோட பழ்கலாமான்னு பயம் வந்துட்டே இருந்தது நிஜம். இதுதான் நான் மொத்தமா தொகுப்பின் கதைகளுக்கு நான் தர்ற விமர்சனம். ரசிக்க தகுந்த இண்டலிஜெண்ட் பெர்சன். இவை எல்லாமே தமிழ்க் கதைகள் தான், நடப்பதும் நம்ம தமிழ் சூழலில் தான் ஆனா வெளிநாட்டில் ந்டக்கிற மாதிரி ஜாலியா எழுதியிருக்காரு.. இந்த மாதிரி பெண்கள் யாரும் கவிதை எழுதிட்டா விட்டுருவாங்களா..?ங்கிற கேள்வி மனதுள் எழத்தான் செய்த்து.

பெரும்பாலான கதைகளில் சர்வ சாதாரணமாக பெண்கல் குறுக்கே வருகிறார்கள், படுத்துக் கொள்கிறார்கள், கொல்கிறார்கள், காதலன், கணவன், சாமியார் என்று ஏமாறுகிறார்கள். கதாநாயகன் மட்டும் அதிபுத்திசாலியாய் இருக்கிறான் அல்லது சமயத்தில் குழந்தையாக ஏமாற்றிச் செல்கிறான். என்ன கொடுமை சங்கர் இது? கதைகளை பற்றி விமர்சனம் என்று ஜல்லியடித்து, எப்படி எழுதினாலும், திட்டினாலும், நிஜமாகவே சங்கரின் கதைகள் வசீகரிக்கின்றன. நிஜமாய் நம்மோடு  நம்மோடு பேசுகின்றன என்பது நிஜம். பால் பேதம் மறந்து, வயது மறந்து உரையாட தயாராய் எப்போது இருக்கிறோம்.  எனக்குப்பட்டது இதுதான்.

இந்த தொகுப்பு பட்டினப்பாலையான சென்னையில் இருக்கையில் என் மேல் விழுந்த முதல் மழைத்துளியாய் என்னை நினைத்து குளிர்வித்தது எனப்தை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும், வெட்கமும் இல்லை.  நிறைய எழுதுங்கள் சங்கர். என்னைப் போன்றவர்களுக்காகவும், பலருக்காகவும் தமிழில் வாசிக்க நினைத்தால் ஏனோ சட்டதிட்டங்கள், போட்டு குரலால் மிரட்டி, உருட்டி, குருகுல வாசம், அசுர சாதகம் செய்யணும் என்றெல்லாம் பேனர் வைக்காமல் எழுதுங்கள். இப்படி வந்தமா, பாத்தமா படிச்சமா, ரசிச்சமா, விசிலடிச்சமான்னு எழுதினாத்தானே நலலா இருக்கும். திரைத்துறையில் பல அனுபவங்கள் உள்ளதால் களம் பிடிக்க எளிதாக இருக்கிறது. எழுதும் மொழியும் அப்படியே சரளமாய் வருகிறது. சோம்பல் அற்ற பதிவுகள் நிறைய மின்னட்டும் அதிகமாக திரையுலகிலும்.
ப்ரியங்களுடன்
கவிஞர். கீதாஞ்சலி ப்ரியதர்சினி
(திருச்சி) 

Post a Comment

20 comments:

Romeoboy said...

இதுவரை வந்த விமர்சனங்களில் ரொம்ப நேர்த்தியா இருக்கு இந்த விமர்சனம் .. நன்றி கீதாஞ்சலி ப்ரியதர்சினி

Paleo God said...

எதுக்கும் நவீன இலக்கியத்துலயும் ஒரு தொடர் எழுதிடுங்க! :)

Paleo God said...

இதென்ன மாடரேஷன்...!!???

(சங்கர) நாராயணனுக்கே கொசுத்தொல்லையா???????????

Paleo God said...

இதென்ன மாடரேஷன்...!!???

(சங்கர) நாராயணனுக்கே கொசுத்தொல்லையா???????????

Paleo God said...

இதென்ன மாடரேஷன்...!!???

(சங்கர) நாராயணனுக்கே கொசுத்தொல்லையா???????????

Paleo God said...

இதென்ன மாடரேஷன்...!!???

(சங்கர) நாராயணனுக்கே கொசுத்தொல்லையா???????????

Unknown said...

தம்பி ரோமியோவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

இப்படியெலாம் எழுதினா கேபிள் அடுத்த விமர்சனம் எழுதினா எங்களுக்கு பிரியாணி வாங்கி தரமாட்டாரு..

Anonymous said...

நேற்றுதான் களவாணி படத்தை பார்த்தேன் .... அந்த படத்தை போய் நல்லா இல்லை என்று சொல்கிறீர்களே..உங்களை எல்லாம் போய் பெரிய சினிமா அறிவாளி என்று நினைத்தேனே.... சரி நீங்க முதல்ல ஒரு படத்த எடுங்க பாஸ் .... அது இந்த அளவுக்காவது இருக்கானு பாப்போம் ..btw that film is superb.. a complete entertainer...

நேசமித்ரன் said...

மற்றவர்கள் எழுதிய விமர்சனத்தையும் இப்படி போட்டிருக்கலாமே தலைவரே !

குறைந்தபட்சம் எழுத்தாளர்
வாமு. கோமு ...!

:(

Devi said...

Good job.Keep it up.
http://newindianlifestyle.blogspot.com

Cable சங்கர் said...

@நேசமித்ரன்.

தலைவரே.. விமர்சனம் எழுதிய கவிஞருக்கு இணையத்தில் பழக்கமோ, அல்லது ப்ளாக்கோ கிடையாது. அதனால் தான் அவர்களின் விமர்சனத்தை இங்கே தனியே என் பதிவில் போட வேண்டியதாகி போய்விட்டது..

Cable சங்கர் said...

@கே.ஆர்.பி.செந்தில்
வேணுமின்னா தனியே ஒரு ப்ளேட் தர்றேன் தலைவரே..:)

@உண்மைதமிலன்
நீங்களாகவே என்னை அறிவாளி என்று நினைத்தற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் தமிலன். நீங்கள் எப்படி உங்களுக்கான கருத்தாக என்னை பற்றி நினைத்தீர்களோ அது போலத்தான் நான் அந்த படத்தை பற்றி எழுதியது. எலலா நேரமும் ரசனை ஒத்து போவது கிடையாது. நிச்சயம் நான் படமெடுப்பேன். இதை விட சூப்பராகவும் இருக்கலாம் மோசமாகவும் இருக்கலாம்.. ஸோ.. விமர்சனங்களுக்காக எப்பவும் தயாராகவே இருக்க பழகியவன்..

Cable சங்கர் said...

@தேவி.
நன்றி..


@ரோமியோ..
நன்றி

@ஷங்கர்
அப்படின்னா..?

Anonymous said...

முதல் முறை வருகிறேன்..

பதிவுகளை அவசரமாக படித்தேன்..

மெதுவாகப் படித்துவிட்டு கருத்துக்களை சொல்கிறேன்..

Thamira said...

ரொம்ப புகழ்ந்திருக்காங்களே, நிஜமாலுமே அவங்க ஃபேமஸான கவிஞர்தானான்னு விசாரிச்சீங்களா? ஹிஹி..

பரிசல்காரன் said...

ஏறு ஏறு ஏறுய்யா ஜீப்ல...

பரிசல்காரன் said...

அப்பறம், ஆ மூ கி க ர!

சோழவர்மன் said...

எப்படி இத்தன பதிவு எழுதுறீங்க ?

கடைசி ரெண்டு பதிவ படிக்க கூட என்னால முடியல , நேரம் இல்ல , உண்மையில் புரியல.

வலைப்பதிவுகள் எழுதுவது நம் நேரத்தை சுரண்டுவது என்றும் போதை தருவது என்றும் சொல்வார்கள். அதிலும் தமிழ் வலைப்பதிவுகள் மரண மொக்கைகள் என்பது தான் என் எண்ணம்.

இந்த நேரத்தை ஆங்கில வலைப்பதிவு எழுத செலவு செய்யுங்கள். பணமாவது தேறும்.

"தமிழ் ப்ளாக்'கா? அங்க சண்டை
தானே நடக்கும்"

இப்படி தான் பேசிக்கொள்கிறார்கள் மேல்மட்டத்தில்.

உங்கள் நன்மைக்காக சொல்கிறேன் , ஆங்கில வலைப்பதிவு தொடங்குங்கள்.
காசை எண்ணுங்கள்.

vanila said...

@பரிசல்காரன் said...
அப்பறம், ஆ மூ கி "க ர"!


appadeenna ???.

Thamira said...

நல்லதொரு பிளாஸ்டராக எடுத்துக்கொண்டு நம் தளத்துக்கு வரவும்.

http://www.aathi-thamira.com/2010/07/blog-post_856.html