Thottal Thodarum

Jul 3, 2010

அம்பாசமுத்திரம் அம்பானி

ambani திண்டுக்கல் சாரதிக்கு பிறகு கருணாஸ் கதாநாயகனாய் நடித்து வந்திருக்கும் படம். படத்திற்கு ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது என்பதை நிருபிக்கும் வகையில் சந்திரன் தியேட்டர் நேற்று ஹவுஸ்புல்.


amba

அம்பாசமுத்திரத்திலிருந்து அனாதையான தண்டபாணி, எப்பாடு பட்டாவது அம்பானியாக வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறான். தமிழ் படம் சினிமாவில் வருவது போல் ஒரு காபி எடுத்து வருவதற்குள் நடக்கவில்லை. அவனின் முதல் ஆசை வசந்த் அண்ட் கோ போல தண்டபாணி அண்ட் கோ என்று ஒரு ஷாப்பிங் மாலில் கடை வைப்பதுதான். அதற்காக அவனின் காட்பாதரான அண்ணாச்சியிடம் கொஞ்சி, கூத்தாடி கொஞ்சம், கொஞ்சமாய் பணம் கொடுப்பதாய் சொல்லி ஒரு கடையை பிடிக்கிறான். அவன் கடையை பிடித்தானா?, நடுவில் அவன் வாழ்க்கையில் வந்த காதல், நட்பு, துரோகம் எல்லாம் என்ன ஆயிற்று என்பதை முடிந்தவரை நகைச்சுவையாகவே சொல்ல முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

கதாநாயகனாய் இல்லை.. கதை நாயகனாய் கருணாஸ், சரியாக சூட் ஆகிற கேரக்டரை தான் செலக்ட் செய்திருக்கிறார். படம் நெடுக ஒரு குறிக்கோளோடு அலையும், இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். பல இடங்களில் மிக இயல்பாய் ஜோக் அடித்து சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் கண் கலங்கவும் வைக்கிறார். என்ன தலையெல்லாம் ப்ளீச் செய்து கொண்டு பாடும் பாடல் தான் சகிக்கலை..
ambasamudram-ambani-poster நவ்நீத் கவுர்.. நல்ல செக்சியான உடம்பு. முடிந்தவரை உறுத்தாமல் வெளிபடுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது பாதியில் முதல் ராத்திரிக்கு “எல்” போர்ட் மாட்டிக் கொண்டு வரும் இடத்தில், அவருடய ரியாக்‌ஷன் ம்ம்ம். ஆனால் ஆ..ஊவென்றால் சட்சட்டென புடவையை அவிழ்த்துவிட்டு பாவாடை ஜாக்கட்டோடு இருப்பது ஹி..ஹி.. நன்றாக இருந்தாலும்.. ம்ஹும்.
 ambasamuthiram-ambani9 ஹனீபா, டெல்லிகணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், கோட்டா சீனிவாசராவ், மயில் சாமி என்று நடிகர்கள் வரிசை கட்டியிருக்கிறார்கள். டெல்லியும் மயில்சாமி மனதில் நிற்கிறார்கள். அதிலும் ஒரு நம்பர் மாறியதில் இரண்டாயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் ஆகிவிடும் கருணாஸ் போனுக்கு தினமும் கூடுவாஞ்சேரியிலிருந்து வந்து போன் பேசிவிட்டு போகும் மயில் அட்டகாசம்.

கருணாஸின் இசையில் திண்டுக்கல்லு..திண்டுக்கல்லு மாதிரியே ஒரு பாட்டு வருகிறது. பாட்டை விட வரிசைகட்டி கைகால்களை கோர்த்து அப்படியே ஜிம்னாஸ்டிக் செய்யும் நடனம் நன்றாக இருக்கிறது. ஆடுகிற அம்மணியும் அட்டகாசம்.

Ambasamuthiram-Ambani-04-13-Stills-018_940  கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கியிருப்பவர் ராம்நாத். தினமும் காலையில் ஒரு பத்து பேருக்கு டீ வாங்கி கொடுப்பது, செல் போன் ரீசார்ஜ் எக்ஸ்ட்ராவாகி அதனால் அலையும் மயில்சாமி கேரக்டர், ’நான் அம்பானியாவேன்’ என்ற அதிகாலை தவம்,  குல்பி ஐஸ், குள்ளமாய் இருந்து உயரமான இன்ஸ்பெக்டர், ’யூத்’ லிவிங்ஸ்டனின் ஒருதலை காதல்,எம்.ஜி.ஆர்.நகர் வெள்ள நிவாரண சாவை ப்ளாஷ்பேக்குக்கு உபயோகப்படுத்தியது,என்று படம் பூராவும், குட்டி, குட்டியாய் பாஸிட்டிவ்  ஐடியாக்களை தூவி விட்டிருப்பது இண்ட்ரஸ்டிங். ஆனால் அதே நேரத்தில் ஜாலியாய் போகும் முதல்பாதியிலிருந்து, கொஞ்சம் சீரியஸாகும் இரண்டாவது பாதியில் திடீர் திருப்பங்களுக்காக, ஹீரோயின் அப்பா அம்மா சாவு, அடுத்த காட்சியிலேயே காதலனை அடைவதற்கான போராட்டம்,நட்பு துரோகம், செண்டிமென்ட் என்று கொஞ்சம் ஓவராகவே ‘நெஞ்சை நக்கும்’ காட்சிகளும், எதிர்பார்த்த திசையிலேயே படம் பயணிக்கும்  திரைக்கதையும், ஆங்காங்கே தெரியும் மலையாள பட வாசனையையும் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அம்பாசமுத்திரம் அம்பானி – முதலுக்கு மோசமில்லை.

கேபிள் சங்கர்
Post a Comment

16 comments:

கலாநேசன் said...

பாத்துருவோம்...

கே.ஆர்.பி.செந்தில் said...

கருணாஸ் போன்ற நடிகர்களின் படங்கள் வெற்றி பெற வேண்டும்..

சுரேகா.. said...

அப்ப வாங்க...மறுபடியும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துருவோம்!!

பிரவின்குமார் said...

கண்டிப்பா அப்ப படம் பார்த்திட வேண்டியதுதான்.!

பார்வையாளன் said...

"மலையாள பட வாசனையையும் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்"பட வாசனையா, பிட் வாசனையா? ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ? பாக்கியராஜ் முருங்கைக்காயை பிரபலமாக்கியது போல, வாசனை என்ற வார்த்தையை பிரபலமாகி வருகிறீர்கள்... ஸுப்பர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாத்துடலாம்

VSP said...

எப்போ "வெளுத்துகட்ட" போறீங்க....

மங்குனி அமைச்சர் said...

ஒரு டிக்கெட் பார்சல்

அத்திரி said...

//ஆடுகிற அம்மணியும் அட்டகாசம். //

ரைட்டு............

Ŝ₤Ω..™ said...

Raittu.. Pathudalam..

Karthick Chidambaram said...

Paaththuduvom

divyapriya said...

Looking funny

குசும்பன் said...

//அப்ப வாங்க...மறுபடியும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துருவோம்!! //

இதுக்கு எதுக்கு காசு செலவு செஞ்சுக்கிட்டு ஒரு எட்டு பார்க்க போறீங்க

8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 8 இந்தா நல்லா பாத்துக்குங்க சுரேகா எம்புட்டு எட்டு வேண்டும் என்றாலும்:))

வசந்திரன் said...

hi

தமிழ் வெங்கட் said...

தயாரிப்பாளர் கையை கடிக்காதுன்னு சொல்லுங்க..

வசந்திரன் said...

கேவலமான ஒரு ஜோக்கு.
ஒரு சின்ன கேள்வி சங்கர் சார் ?
அந்த ஏ ஜோக்கை 12 வயதான உங்கள் தங்கையை வாசிக்கச் சொல்லுவீர்களா?
என் தங்கை இப்போ தமிழ் மனம் பார்க்கத் தொடங்கி விட்டால் அவள் உங்கள் தளத்திற்கு வந்து விடுவாளோ என்று பயமா இருக்கு சார்