மதராசபட்டினம்

 madharasapattinam-audio-launch-posters-02 வெள்ளைக்கார பெண், இந்திய ஏழை ஆண் இவர்கள் இருவருக்குமிடையே காதல், சுதந்திர இந்தியா காலத்தின் பின்னணியில் பெரிதாய் என்ன இருந்திருக்க முடியும் என்ற ஒரு எதிர்பார்ப்பும், அவர்களது நிஜமாகவே புத்திசாலித்தனமான டீஸ்ர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருந்தது.

இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டம். ஆரம்ப காட்சிகளில் டைட்டானிக்கை ஞாபகப்படுத்தினாலும், மெல்ல, மெல்ல, பழம் பெரும் சென்னையை கண் முன்னே விரித்து, அதில் வரும் கேரக்டர்களில் ஒருவராய் நம்மை படத்தினுள் நுழைத்துவிடுகிறார்கள். 
  Madharasapattinam-Movie-Stills-001 தற்காலத்தில் லண்டனில் ஏமியிடமிருந்து ஆரம்பிக்கிறது கதை. மெல்ல அன்போல்ட் ஆகி 1947 வாழ்ந்த, காதலித்த பரிதியை தேடி, அவன் கொடுத்த தாலியை அவனிடம்  சேர்ப்பதற்காக, என்றோ ஒரு காலத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவாய் ப்ளட் க்ளாட் ஆகி உயிருக்கு ஆபத்தான ஆபரேஷனுக்கு முன் பரிதியை சந்திப்பதற்காக இந்தியா வருகிறாள் ஏமி. அவளின் தேடலை, முன்னும், பின்னும் போகும் திரைக்கதையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள்.
Madharasapattinam-Movie-Stills-009 படத்தின் முதல் பாகம் சுமார் 1.40 நிமிடங்கள் போகிறது. வெள்ளைக்கார கவர்னர் பெண்ணுக்கும், சலவை தொழிலாளிக்கு இடையே ஏற்படும் காதலை உருவாக்க, மெல்ல,மெல்ல, அதற்கான சினிமா லாஜிக்கோடு, ஏற்படுத்தி, அவன் மீது அவளுக்கு காதல் ஏற்படுவதற்கான காரணத்தை அழுத்தமாக சொல்ல அவ்வளவு நேரம் தேவைதான் படுகிறது. இதற்கிடையில் பழைய மதராசபட்டினத்தையும், ஆளும் வெள்ளைகாரர்களுக்கும், இவர்களுக்குமிடையே எழும் ப்ரச்சனை, அவர்களது வாழ்க்கை, சுதந்திரத்தை பற்றிய அன்றைய மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பு, எதிர்ப்பு, நேதாஜியை பாலோ செய்யும் குஸ்தி வாத்தியார், சுதந்திரம் வந்திட்டா மட்டும் என்ன பெரிசா கிடைச்சிரப் போவுது என்று அங்கலாய்க்கும் நொள்ளைக்கண் தகப்பன், இருக்கிற ஒரே மரத்தடி வாத்தியார், எப்பபார் தூங்கிக் கொண்டேயிருக்கும் ஒருவன், பரிதியின் நண்பர் குழாமிலிருக்கும் ஊமை, தெலுங்கு பேசுபவன், ஏரோப்ளேன் போனால் குண்டு போடப்போறாங்க என்று கத்தியபடி அலைபவன், எதுவும் நடக்காது என்று அம்மா சொன்னதாக சொல்லும் பரிதியின் தங்கை, போட் ஓட்டும் தாத்தா, தீவிரவாதம் செய்யும் ஒரு குழு தலைவன், துபாஷி ஹனிபா என்று பார்த்து, பார்த்து கேரக்டர்களை நுழைத்து, சுதந்திரத்துக்கு முன் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் ஆசாபாசங்கள் என்று மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.

ப்ரிதியாக ஆர்யா, நிறைவான நடிப்பு, கண்களில் குறும்புடன், வாத்யார் வீட்டின் வாசலில் வந்து நின்று நன்றி சொல்வதற்கு என்ன சொல்வது என்று நண்பர்களுடன் கும்பலாய் கேட்பதும், உள்ளேயிருந்து முனகலாய் மனைவி யாருங்க என்பதும், பின்பு மீண்டும் ஒரு முறை பகலில் கதவு தட்ட, அதே முனகலுடன் மனைவி கூப்பிட, பகல்லேயேவா? என்றபடி மீண்டும் கொரஸாய் கேள்வி எழுப்புமிடத்திலும், வாத்யாரிடமே  ஆங்கிலம் தப்பாய் சொல்லித்தருகிறாய் என்று பேசுமிடத்திலும், ஆக்ரோஷமாய் குஸ்தி போடுமிடத்திலும், காணாமல் போன காதலியை தேடி அலைந்து பார்த்தும் ஒரு கணம் கண்களில் ஒரு சந்தோஷ மின்னல் அடிக்கும் காட்சிகளிலும் அடக்கி வாசித்திருந்தாலும் மனதில் நிற்கும் ந்டிப்பு. நிச்சயமாய் ஆர்யாவுக்கு ஒரு மைல் கல் படம் இது.
Madharasapattinam-Movie-Stills-018 என்னதான் ஆர்யா, பழைய மதராஸை திரும்ப காட்டியிருந்தாலும், இது முழுக்க, முழுக்க கதாநாயகியின் படம். பார்த்த மாத்திரத்திலேயே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டு காதலிக்க வைக்கும்  முகமும், நடிப்பும் இல்லாவிட்டால் படமே விழுந்துவிடக்கூடிய அபாயம் உள்ள கதை. எமி ஜாக்ஸனின் அழகும், அவரது நடிப்பும் அவரை காதலிக்க வைக்கிறது. அவரின் முகத்தில் உள்ள ஒரு இன்னொசென்ஸே, நம்மை இன்னும் கவர்கிறது.

படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள். லண்டனில் படம் ஆரம்பத்திலிருந்து சென்னைக்கு வந்து, மதராச பட்டனத்துக்கு போய் வருவது என்று  அட்ட்காசமான விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரும், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாவும். பழைய செண்ட்ரல், அங்கே ஓடும் கூவம் நதி, ட்ராம்கள், கைரிக்‌ஷாக்கள், பின்னணியில் நடமாடும் மனிதர்கள், அந்த டோபிகானா, கார்கள், என்று ஒவ்வொன்றிலும் பார்த்து, பார்த்து செய்திருக்கிற இவர்களின் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும்.  

படத்தில் இன்னொரு முக்கிய பாராட்டுக்குரியவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். மிக அருமையான பின்னணி இசை. வாம்மா துரையம்மா, அந்த எம்.எஸ்.வி பாடல், காதல் துளிர்க்கும் அந்த உதித் நாராயன் பாடல் என்று படத்தோடு இணைந்து ரசிக்க வைக்கும் பாடல்கள். வாழ்த்துக்கள் ஜி.வி.

Madharasapattinam_18_

இவர்கள் எல்லோருக்கும் சிகரமாய் பாராட்டப்படவேண்டியவர் இயக்குனர் விஜய். முந்தைய படங்களான க்ரீடம், பொய் சொல்லப் போறேன் போன்ற படங்களிலிருந்து முழுவதும் வேறு பட்ட கதைகளத்தை எடுத்து கொண்டிருக்கிறார். வழக்கமாய் சுதந்திர போராட்ட காலத்தை எடுத்துக் கொண்டு அதை பற்றி சொல்லாமல் அந்த காலத்தில் ஒரு காதலர்களுடய கதையை எடுத்துக் கொண்டு அருமையாய் சொல்லியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் மனம் நெகிழ்ந்து வெளிவராமல் இருக்க முடியாது. நானெல்லாம் அழுது பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாய் அழுதது மலையாள “தன்மாத்ரா”வுக்குதான். மிக சின்ன கேரக்டர்களுக்கு கூட டீடெயிலிங் கொடுத்து, கடைசி வரை பரிதியை தேடி அலையும் போது அதற்கான சஸ்பென்ஸோடு திரைக்கதையை நகர்த்தி சென்றதும், முதல் பாதியில் காதலுக்கு கொடுத்த வேகத்தை இரட்டிப்பாக ஆக்‌ஷன் ப்ளாக்காக மாற்றி பரபரக்க வைத்து, குப்பென நெகிழ வைத்து மிரட்டியிருக்கிறார். இயக்குனர்.

இப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு பாராட்டுக்கள். ஒரு வித்யாசமான படத்தை கொடுத்ததற்காக. படத்தில் குறையாய் இருக்கிற சில விஷயங்கள் இருந்தாலும் மிக குறைவே. ஆங்காங்கே டைட்டானிக், லகான், படம் போன்ற காட்சிகள், கொஞ்சம் லெந்தான முதல் பாதி, இரண்டாவது பாதியில் வரும் முதல் பாடல் என்பது போன்ற சிறு சிறு குறைகளே.. இப்படத்தின் குழுவினரின் டெடிக்கேஷனுக்கு இதெல்லாம் சாதாரணமே.. கண்டிப்பாக படம் பார்த்துவிட்டு வரும் போது மனதில் நிற்கும் படம்.

மதராசபட்டினம்- A Excellent Journey to the Vintage Love

கேபிள் சங்கர்

Comments

தோழி said…
Thanks CableJi. Kandippa pathudaren.
க ரா said…
நல்ல விமர்சனம்னா. கண்டிப்பா பார்க்கவேண்டிய லிஸ்ட்ல இருக்கு இந்த படம் :-).
Romeoboy said…
விமர்சம் படிக்கும் போதே படத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
பாலா said…
ரொம்ப நாளுக்கப்புறம் ஃப்ரெஷ்ஷா ஒரு மாதிரி தெரியுது. சமீபத்தில் இவ்வளவு பாராட்டை எந்த தமிழ்ப் படத்துக்கும் நீங்க கொடுக்கலை.

திருட்டு டிவிடி வரட்டும். பார்த்துடுவோம்.

எங்கூர்ல நாளைக்குத்தான் சிங்கம் ரிலீஸாகப் போகுது.
டெக்னிக்கலா படத்தை அனுகும் விதம் பிரமிப்பா இருக்கு கேபிள்ஜி! டைரக்ட்டர் இல்லையா?

பார்த்துருவோம் தல.
Unknown said…
This comment has been removed by the author.
கமெண்ட்ஸ்'ஐ மூடி விட்டால் எவனும் கருத்து சொல்ல முடியாது என்று தானே போன பதிவில் அப்படி செய்தீர்கள்?

நான் கடைசியாக இட்ட பின்னூட்டத்தை ஏன் வெளியிடவில்லை ?

உங்கள் ஜால்ராக்கள் நான் பதில் சொல்லாமல் ஓடி விட்டதாக நினைக்க வேண்டும் என்பதற்காக தானே ?
இது போன்ற படங்களை ரசிகர்களும் ஆதரிக்க வேண்டும். பிறகு வெறும் மசாலா படங்கள் மட்டும்வருகிறது என்று புலம்பியும் புண்ணியமில்லை. இந்த படத்துக்கு விளம்பரப்படம் எடுத்திருந்த விதமே ரசிக்க வித்திருந்தது. அதிலும் தயாராகுங்கள், 1947 க்கு. என்று ஒரு குரல் ஒலித்ததே...என்னை மிகவும் ஈர்த்த விஷயம் அது.
தலைவரே,
நீங்களே சொல்லிட்டீங்க. பார்த்திட வேண்டியதுதான்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்
நல்ல விமர்சனம்னா. கண்டிப்பா பார்க்கவேண்டிய லிஸ்ட்ல இருக்கு இந்த படம் :-).

repeattu
நல்ல விமர்சனம்னா. கண்டிப்பா பார்க்கவேண்டிய லிஸ்ட்ல இருக்கு இந்த படம் :-).

repeattu
நல்ல விமர்சனம்னா. கண்டிப்பா பார்க்கவேண்டிய லிஸ்ட்ல இருக்கு இந்த படம் :-).

repeattu
நல்ல விமர்சனம்னா. கண்டிப்பா பார்க்கவேண்டிய லிஸ்ட்ல இருக்கு இந்த படம் :-).

repeattu
நல்ல விமர்சனம்னா. கண்டிப்பா பார்க்கவேண்டிய லிஸ்ட்ல இருக்கு இந்த படம் :-).

repeattu
மேவி... said…
parthachu nne..naanum vimarsanam eluthitten
vijayan said…
படு வேகமான படம்.சில தகவல் பிழைகள் (1947 -இல் தலைவர் சத்யமூர்த்தி காலமாகி இருந்தார்.)இருந்தாலும் தரமான படம்.
Unknown said…
பீரியட் படங்களை எடுக்க துணிச்சல் வேணும்.. படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள்.. அதில் உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் ..
Paleo God said…
//ஹாலிவுட் பாலா said...
ரொம்ப நாளுக்கப்புறம் ஃப்ரெஷ்ஷா ஒரு மாதிரி தெரியுது. சமீபத்தில் இவ்வளவு பாராட்டை எந்த தமிழ்ப் படத்துக்கும் நீங்க கொடுக்கலை.//

ரிப்பீட்ட்டு! :))

திருட்டு டிவிடி வரட்டும். பார்த்துடுவோம்.//

ஹி ஹி (அடப்பாவி(ங்க))

எங்கூர்ல நாளைக்குத்தான் சிங்கம்
ரிலீஸாகப் போகுது/

எங்கூரவிட அரதப் பழசான கிராமம் போல இருக்கே?? :))
Sukumar said…
ஆனந்தபுரத்து வீடு பார்த்து நொந்ததுக்கு இதைப் பார்த்திருக்கலாம்.... ரைட்டு..... நீங்க சொல்லி நாங்க பார்க்காம இருப்போமா....
VISA said…
ticket poataachu
தலைவரே....நேத்து நான் போட்ட கமெண்டையும் பப்ளிஷ் பண்ணலயே :(
Unknown said…
சார் ரொம்ப அருமையா இருக்கு விமர்சனம்.. படத்தை உடனே பாக்கணும். :)
மோகன் said…
Booked tonight show @ Blr PVR.convinced 3 of friends family by quoting your review.so totally 12 tkts...if i get any beating from my frinds,i'll redirect to u ;)))
அப்பாடா.... நீங்கல்லாம் நல்லாருக்குன்னு சொல்லும்போது சந்தோசமா இருக்கு தலைவரே... தமிழ்சினிமாவில் புதுமைகள் வரட்டும
தளபதிகள் திருந்தட்டும்...
Unknown said…
Watched movie in erode Chandika y.day 6pm show .In balcony only 50 seats full out of 330.

SEVEN PEOPLE ESCAPED IN HALF WAY MARK.

ANY WAY..worth a movie...CAN GO LATE PICK UP..

THANKS FOR YR REVIEW.
Unknown said…
hi all

watch amy jackson BBC video chat about madarasipatinam

http://www.youtube.com/watch?v=UsJCTJKepRo&feature=youtube_gdata
விமர்சனம் நல்லாயிருக்குண்ணே.
Thala,

Innaikkuthan Pakka porean...
and ongalooda Vimarasanam Sooooooper.

ANANDHAPURATHU VEEDU eppo..?

Cheers...
Thala,

Innaikkuthan Pakka porean...
and ongalooda Vimarasanam Sooooooper.

ANANDHAPURATHU VEEDU eppo..?

Cheers...
//பின்னணியில் நடமாடும் மனிதர்கள், அந்த டோபிகானா, கார்கள், என்று ஒவ்வொன்றிலும் பார்த்து, பார்த்து செய்திருக்கிற இவர்களின் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும்//

சமீபத்தில், நிறைய உழைப்பை தொழில்நுட்ப கலைஞர்களிடம் கோரியிருக்கும் படம்..

பகிர்வுக்கு நன்றி!
Ashok D said…
நிறைவான...
திரு.சங்கர் ,

நான் மிகக் குறைவாக சினிமா பார்ப்பவன் , உங்கள் விமர்சனம் பார்த்து முடிவு செய்வதே அதிகம் ,அது சரியாகவும் இருப்பதும் வழக்கம்.

ஆனால் களவாணி விமர்சனமாக நீங்கள் எழுதியது சர்ச்சைக்குறியதானதான் அதை பார்த்தேன் , உங்கள் மேல் முதல் முறையாக ஏமாற்றம் .

ஒன்று அந்த படம் பார்க்கும் நேரத்தில் உங்களுக்கிருந்த மனநிலை அல்லது அந்த பட குழுவினர் மீது உங்களுக்கு ஏதோ கோபம் உங்கள் விமர்சனத்தை பாதித்ததாக தோன்றியது .

உங்கள் எழுத்தின் முக்கியதுவத்தை உணர வேண்டுகிறேன்
damildumil said…
பதிவர்கள் எல்லாம் நல்லா எஞ்சாய் பண்ணி படம் பாருங்கப்பா, எதோ நோட்ஸ் எடுக்க க்ளாஸ் ரூமுக்குள்ள போற மாதிரி போகாதிங்க.தியேட்டர்ல எத்தனை பேர் இருந்தாங்க பக்கத்துல உட்காந்திருந்தது ஃபிகரா இல்லை ஆயாவா, அந்த ஆயா கூடா யாரு வந்தான்னு இப்படியே யோசிச்சுட்டே இருந்தா, மண்டைக்குள்ள புதுசா கதை எப்படி வரும்? விமர்சணம் போய், தியேட்டர் பிட்ஸ் போய் இப்போ ரேட்டிங்கா?? அடுத்து கேபிள் டாப் டென் ஆரம்பிச்சிடுங்க. எப்படியோ மனசை வெறுத்து ஒரு படம் நல்லா இருக்குன்னு சொல்லீட்டீங்க, ரொம்ப ஆச்சிரியமா இருக்கு
Unknown said…
விமர்சனத்திற்கு நன்றி.. ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்த நிறைவான படம்.
Ŝ₤Ω..™ said…
அண்ணே.. நேற்று நீங்க படம் பார்த்துட்டு கமெண்ட் சொன்னவுடனே முடிவு செஞ்சிட்டேன்.. இன்னைக்கு பார்த்துட்டேன்.. நீங்க சொன்னதை அப்படியே நானும் உணர்ந்தேன்..

நம்மை அப்படியே 1947க்கே அழைச்சிட்டு போய் மதராசப் பட்டிணத்தைச் சுத்தி காட்டினது போல இருந்தது..

ரொம்ப நாளைக்குப் பிறகு, படம் முடிந்து பெயர் போடும் போது மக்கள் வெளியே செல்லாமல் திரை அடங்கும் வரை நின்று பார்த்தது இப்போது தான்..

சத்யம் தியேட்டரில் படம் முடிந்து வெளியே வந்து ஜி.பி.ரோடு வழியாக அண்ணா சாலையில் வரும் போது, மதராஸ் தான் நினைவில் நிற்கிறது..

விமர்சனத்திற்கு “டிங்குயூ” “மங்குயூ”
@thoozhi
நிச்சயம்

@இராமசாமி கண்ணன்
ம்

@ரோமியோ
நிச்சயம் பார்க்கலாம்

@ஹாலிவுட் பாலா
என்னது சிங்கம் ரிலீஸாகப் போவுதா..?
காந்தி செத்துட்டாரா..?

@பா.ராஜாராம்
நிச்சயம் பாருங்க தலைவரே
@திருவாரூரிலிருந்து சரவணன்
நன்றி

@ரவிச்சந்திரன்
பார்த்துட்டு சொல்லுங்க..

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி
@டம்பிமேவி
நானும் உன் விமர்சனத்தை பார்த்துட்டேன்

@விஜயன்
நிச்சயம் தகவல் பிழைகள் இருந்திருக்கலாம்.. இது சுதந்திரத்தை பற்றிய படமாய் இருந்தால் அது கவனிக்கப்பட்டிருக்கும் இருந்தால் தகவல் பிழை குறிப்பிட்டு சொல்லக்கூடியதே.

@கே.ஆர்.பி.செந்தில்
ஆமாம்
@shankar
ஆமா.. அவரு ஊரு மாமண்டூர் பக்கத்தில இருக்கு..
@sukumar swaminathan
அப்படியா இருக்கு?

!@விசா
ம் பார்த்துட்டு சொல்லுங்க

@சிவகாசி மாப்பிள்ளை
ம்

@கண்ணா..
இருங்க தலைவரே..
@ஆறுமுகன் முருகேசன்
நன்றி

@மோகன்
அஹா...

@நாஞ்சில் பிரதாப்
நல்லாயிருந்த நல்லாருக்குனுதா சொல்லுவேன்.:)
@மணீ
இரண்டொரு நாளாகும் ..

நிச்சயம் பாக்குறேன்

@அக்பர்
நன்றி

@கார்த்திகேயன்
நன்றி..நாளைக்கு பாக்குறேன்

@ராகின்
நன்றி

@அசோக்
நன்றி
@மதி இண்டியா
தலைவரே எனக்கு அப்படம் பெரியதாய் இம்ப்ரஸ் செய்யவில்லை. ஒரு வேளை நான் தற்போதைய மக்களின் மனநிலைக்கு மாற்றாக யோசித்திருக்கலாம் ஆனால் நான் சினிமாவை நேசிப்பவன் என்பதை விட வெறியன். அதனால் எனக்குள் குழுவினருக்கு எந்த்விதமான கோபம். இல்லை..
ஆகா நான் போட்ட பின்னூட்டத்தினால் ஒரு கலவரமே நடந்திருக்கு...
நான்தான் லேட்டா?

.......................................................................

மன்னிக்கணும் சங்கர் ....

நான் உங்களை குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தப் பின்னூட்டம் இடவிடவில்லை .
உங்கள் நிலை இன்னும் புரியவில்லை. இவ்வளவு காலமும் நீங்கள் சாதாரண ஒரு பிளாக்கர்.
ஆனால் இப்போ ஒரு புரபசனல் எழுத்தாளர் ஆகி விட்டீர்கள்.இந்த எழுத்தின் மூலம் சம்பாதிக்கவும் தொடங்கி விட்டீர்கள்.
ஆகவே உங்களுக்கான பொறுப்புக் கூடிவிட்டது.அதை உணர்ந்து நடக்கவேண்டியது உங்கள் முன்னேற்றத்திற்கு அவசியம்.

உங்கள் நண்பர்கள் பலபேர் நீங்கள் பாலான ஜோக் எழுதுவதெல்லாம் என்ன தப்பு என்று கேட்கிறார்கள். அவர்கள் உங்களையும் அவர்கள் போல சாதாரண பிளாக்கர் என்றுதான் எண்ணுகிறார்கள் , ஆனால் உங்கள் பிளாக் இப்போது ஒரு பொழுது போக்கு ஊடகமாக மாறி விட்டது.

ஊடகமான பிறகு அது சமூகத்தில் உள்ள அனைத்து விதமான மக்களாலும் படிக்கப் படுகிறது என்ற அர்த்தம்?
அதை கருத்தில் கொண்டு எழுதினால்தான் அந்த ஊடகத்தை மற்றவர்களுக்கும் வாசிப்பவர்கள் பரிந்துரைக்க முடியும், இல்லா விட்டால் எதோ செக்ஸ் தளம் பார்த்து விட்டு செல்லுவது போலதான் உங்கள் பிளாக்கையும் வாசித்து விட்டு போக வேண்டி வரும்.

உங்கள் எழுத்து மெருகேறி விட்டது ஏ ஜோக் இல்லாமலேயே உங்கள் கொத்து பரோட்டா பிரபல்யம் ஆகும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது நண்பரே!

இறுதியாக நான் யாரோ முகவரி அற்றவன் அல்ல என் தளம் முடக்கப் பட்டு விட்டது ( இப்படி வெளிப்படையாக எழுதிய காரணத்தால்)
உங்களுக்கு சூப்பர் பிளாக்கர் பட்டம் கொடுத்ததும் நான்தான்.

இனி முடிவெடுப்பது உங்கள் கையில் ...
அதை தனிக்காட்டு ராஜ போன்ற ஏதாவது எழுதி கிட்ஸ் வாங்க வேண்டும் என்று என்னும் நண்பர்கள் கையில் கொடுக்காதீர்கள்.அவர் தங்கை இருக்கும் வீட்டில் அண்ணன் மனைவியோடு உடலுறவு கொள்ளுவது பற்றி கேட்கிறார்...

அண்ணன் உடலுறவு கொள்வதும் உண்மை அது தங்கச்சிக்கும் தெரிந்திருந்தாலும் கதவை மூடி ரகசியமாக செய்வதுதான் நியாயம்.உங்கள் தளமும் எல்லோரும் வாசிக்கும் வீடு போல ......அதனால்தான் இந்தக் கருத்துக்களை இங்கே சொல்லுகிறேன் !
நான் இவற்றை வேறு செக்ஸ் தளங்களுக்கு சொல்வதில்லை

இதனால் ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டால் மன்னிக்கவும்.

இப்படிக்கு உங்கள் வாசகன்.
மன்னிக்கனும் அந்த இடுகையில் பின்னூட்டம் ஏற மாட்டேன் என்கிறது
மன்னிக்கனும் அந்த இடுகையில் பின்னூட்டம் ஏற மாட்டேன் என்கிறது
@வசுந்திரன்
எனக்கு உங்கள் மீது எந்தவிதமான வருத்தமோ,மனக்கசப்போ கிடையாது.நீங்கள் என் மீது காட்டும் அன்பினால் சொன்னதுதான். உங்களுடய பின்னூட்டம். மிக்க நன்றி.. நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு..
Anonymous said…
நல்லா எழுதி இருக்கீங்க...
தல‌
எ.வ.இ.த. என்று அங்கலாய்ப்பீங்களே!!!
அப்படி ஒரு படம் இது... சூப்பர் என்பது சதாரண வார்த்தை
என் முகப்புத்தகத் தோழி தமிழின் கணவர் நி்க்கோலஸ் நடித்து இருக்கிறார்.. வெற்றீயடையட்டும்..
Kite said…
அருமையான படம். எனக்கு உங்கள் அளவுக்கு விரிவாக எழுத வரவில்லை. என் விமர்சனத்தைப் படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.

http://jagannathchennai.blogspot.com/2010/07/blog-post.html
Ramesh said…
தமிழில் பல நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல அனுபவம் கொடுத்த படம்..உங்கள் அளவுக்கு டெக்னிக்கலாக எனக்கு எதுவும் தெரியாது...ஒரு பாமர ரசிகனாக நான் எழுதிய எனது விமர்சனத்தையும் பாருங்கள்..

http://rameshspot.blogspot.com/2010/07/2010-madharasapattinam.html
நல்ல பார்வை. பதிவுக்கு நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்
அருமையான படம்! ஆனால் டைட்டானிக் படத்தை அப்படியே தமிழில் எடுத்த மாதிரி இருக்கிறது. ஆனாலும் காட்சியமைப்பும் இசையும் அருமை!!!