Posts

Showing posts with the label Villagelo Vinayakudu

Villagelo Vinayakudu – Telugu Film Review

Image
ஐந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி.. நன்றிங்கோ... சென்ற வருடம் விநாயகுடு என்று வெளியாகி ஆந்திராவில் மிகப்பெரிய ஹிட்டான படம்.. நந்தி அவார்ட் கூட வாங்கியது.. மிக இயல்பான திரைக்கதையினால் வெற்றி பெற்ற ஒரு ஃபீல் குட் திரைப்படம்.. ஒரு அதி குண்டான வாலிபனுக்கும், சிக்கென்ற ஒரு ஆட் கம்பெனி பெண்ணிற்கும் இடையே ஏற்படும் காதலை மிக அழகாய் காமெடியாய் சொல்லியிருந்தார்கள். இப்போது அதே குருப் அந்த குண்டு வாலிபனை மட்டும் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்திருக்கிறார்கள். இந்த முறை கார்த்திக் என்ற குண்டு பையன் மட்டுமே.. கார்த்திக்கும், சரண்யா மோகனும் ஏற்கனவே காதலர்கள். கோதாவரியின் கரையில் ஒரு நல்ல பார்ம் ஹவுஸ் வைத்து கொண்டு ஸ்ட்ரிக்ட் அண்ட் டிஸிப்ளெயிண்ட் ரிட்டயர்ட் ஆபீசரான அவளுடய அப்பாவிடம் எப்படி தன் காதலை சொல்வது என்று குழப்பத்தில் இருக்க, அப்போது அவருடய சித்தப்பா பெண் திருமணம் வர, தன் அப்பாவிடம் சொல்ல பயந்து, கொஞச்ம் கொஞ்சமாய் தன் அத்தை, சித்தப்பா, பெரியப்பாவிடம் சொல்லி ஆதரவை திரட்ட, ஒரு வழியாய் எல்லோரும் சமாதானமாகும் நேரத்தில் கார...