Posts

Showing posts with the label Blue

Blue – Hindi Film Review

Image
நான்கரை லட்சம் ஹிட்ஸ் தந்த பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி..நன்றி..நன்றி...   ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு நம்மூர்ல சொல்வாங்க. ஆனா இவங்க அளக்காம கடல்ல 95 கோடிய போட்டுருக்காங்க. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், அக்‌ஷய்குமார், சஞ்செய்தத், லாராதத்தா, காத்ரீனா கைஃப், என்ற நட்சத்திர பட்டாளம், ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி என்ற டெக்னீஷியன்கள் பட்டாளம், என்று எதிர்பார்ப்பு எகிற வைத்த படம். 1949ல் Lady of Blue என்கிற கப்பல் இந்தியாவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷஙக்ளை ஏற்றி கொண்டுவந்த கப்பல் பஹாமாஸ் தீவில் மூழ்கிவிட,  அதை எடுக்க போகும் மூவர் பற்றிய கதை. சஞ்செய், அக்‌ஷ்யின் கப்பல் கம்பெனியில் வேலை செய்பவன், நேர்மையானவன், ஆழ்கடல் நீச்சலில் ஜித்தன், தன் முந்தய அனுபவத்தினால் அந்த பொக்கிஷத்தை அடைய ஆசைபடாதவன் அக்‌ஷய் பணக்காரன், எப்போதும் வெற்றியை மட்டுமே பேசுபவன், ஸ்திரிலோலன், என்றாவது ஒரு நாள் அந்த பொக்கிஷத்தை அடைய சஞ்செய்யை உசுப்பேற்றி கொண்டே இருப்பவன். சாம் அவனுடய வீக்னெஸ் பைக், மற்றும் பைக் ரேஸ்.. ஒரு பிரச்சனையில் தாதா ராகுலி...