VINAYAKUDU - REVIEW
ரொம்ப நாளாகிவிட்டது இவ்வளவு இயல்பான ஒரு காதல் கதை பார்த்து. ஒரு குண்டான இளைஞனுக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை பற்றி தான் படம். கார்திக் ஹைதராபாத்துக்கு ஹைடெக் என்னும் விளம்பர நிறுவனத்தில் சேர வருகிறான். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் கல்பனாவை பார்த்ததுமே விரும்ப ஆரம்பிக்கிறான். இயல்பாகவே ரொம்பவும் சாப்ட் ஸ்போகன் பேர்வழி கார்த்திக். கல்பனாவோ..மிகவும் கோபக்காரி, குண்டான கார்திக்கை பார்த்த முதலே அவளுக்கு பிடிக்கவில்லை. கல்பனாவின் குடும்பம் தங்களுடய தம்பியின் வீட்டு விஷேசத்துக்கு வெளிநாடு செல்ல, கல்பனா தன் தோழியுடன் அவளுடய வீட்டில் தங்குகிறாள்.. கல்பனா,கார்திக்கை முகத்திலடித்தார் போல் எவ்வளவுதான் பேசினாலும், அவன் அதை பற்றி கவலை படுவதில்லை. கல்பனாவின் பெற்றோர் ஊருக்கு போவதற்கு முன் அவளுக்காக ஓரு பையனை பார்த்து, அவ்னுடன் பேசி பார்த்து பிடித்திருந்தால் கல்யாணம் செய்வதாய் ஏற்பாடு செய்துவிட்டு போயிருக்க, கல்பனாவுக்கும், அவளுடய வருங்கால கணவன் ராஜிவுக்கு இடையே காமனான விஷயங்கள் நிறைய இருக்க, கார்திக் தன்னுடய காதலை சொல்ல நினைக்கிறான். இதற்கிடையில் கார்திக்கின் நண்பன் அல்டாபு...