Posts

Showing posts with the label கொத்து பரோட்ட

கொத்து பரோட்டா - 08/09/14 -தொட்டால் தொடரும் - அமரகாவியம் - அடல்ட் கார்னர் - பட்டைய கிளப்பணும் பாண்டியா- Mary Kom

Image
கல்யாண மாலை நிகழ்ச்சியை என் அம்மா வாரா வாரம் விடாமல் பார்ப்பார்கள். ஞாயிறு காலை என்பதால் பல சமயங்களில் பட்டிமன்றங்களுக்கு நடுவே கல்யாணத்திற்காக காட்டப்படும் வரன்களின் போட்டோக்களைப் பற்றிய கமெண்டுகளை உதிர்த்துக் கொண்டும் பேப்பர் படித்துக் கொண்டும் அசுவாரஸ்யமாய் பார்ப்பேன். இந்நிகழ்ச்சியை பார்த்தன் விளைவாய் எனக்கு புரிந்த ஒன்று நல்ல வேலையில், உயர்ந்த பதவியில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு கிட்டத்தட்ட முதிர் கன்னி வயது வந்தும் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட சொச்ச முடிகளை முன் பக்கம் வழித்தெடுத்த முதிர்கண்ணன்கள் நிலையில்தான் ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெரிய வேலைகளில் இருப்பவர்கள் அல்ல. சாதாரன பி.பி.ஓ, அக்கவுண்ட்ஸ், மார்கெட்டிங் என இருப்பவர்கள் தான் அதிகம். இன்னமும் திருமணமாகாமல் இருக்கும் என்னுடய நண்பர்கள் சிலரிடம் கேட்ட போது, இப்பல்லாம் ஒண்ணு பொண்ணு நம்மளை விட அதிகமா சம்பாதிக்குது. இல்லை நிறைய சம்பாதிக்கிறவனா இருக்கிறவன் புருஷனா வரணும்னு ஆசை படுறாங்க. அதான் ப்ரச்சனை என்கிறார்கள். நீயேன் உன் மனசுக்கு புடிச்ச பொண்ணா பார்த்து லவ் பண...

கொத்து பரோட்டா 22/10/12

Image
கேட்டால் கிடைக்கும் வாகனங்கள் வெளியீடும் நச்சுப் புகை நம் சுற்றுப் புற சூழலை எப்படியெல்லாம் மாசுபடுத்துகிறது என்று கவலைப் பட்டு, மீண்டும் சைக்கிளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சைக்கிள் எடுத்துச் சென்றதால் கிட்டத்தட்ட அடிவாங்கி அவமானப்பட்டிருக்கிறார் நண்பர் ஒருவர். ஐடி துறையில் பணி புரியும் நண்பர் அரவிந்துக்கு எப்போது அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளைத்தான் பயன்படுத்துவார். நேற்று முன் தினம் “பீட்சா” படம் பார்க்க ஃபேம் தியேட்டரில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துவிட்டு சைக்கிளில் சென்றிருக்கிறார். ஃபேம் மால் வளாகத்தில் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. காரணம் சைக்கிள் பார்க் செய்ய அனுமதி கிடையாது என்பதால். இவர் ஏன் சைக்கிளை பார்க் செய்யக்கூடாது? வேண்டுமானால் பைக்குக்கு என்ன பணம் வாங்குகிறீர்களோ அதே தொகையை நான் தருகிறேன், படம் பார்க்க டிக்கெட் எடுத்துவிட்டிருக்கிறேன் நான் எப்படி சைக்கிளை வெளியே வைத்து விட்டு போவது என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த செக்யூரிட்டி “மாசம் எட்டாயிரம் சம்பளம் வாங்குறேன். உன் சைக்கிளை உள்ளே விட்டா என் வேலை போயிரும் நீ கொடுப்பியா?” ...