Posts

Showing posts with the label நிதர்சன கதைகள்

நிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..?’

Image
“என்னை பிடிக்கலையா?.. நான் அழகாயில்லையா..?” என்று மோடாவில் என்னை சாய்த்து, தன் ’மெத்’ மார்பினால் அழுத்தி, என்னை ஆக்கிரமித்து, முகத்தை முட்டுகிற மூச்சு காற்றில் அவளின் மிண்ட் வாசனையுடன் கேட்பவளை பார்த்து என்ன பதில் சொல்வது? “இ...இ..இல்ல அப்படி ஓண்ணுமில்...” என்று முடிப்பதற்குள், “இல்லையில்லை..இல்லையில்ல..”என்றபடி அழுத்தமான முத்தங்களை உதட்டிலும், முகத்திலும் மாறி, மாறி கொடுத்தாள். ஓரு விதமான வெறியுடன் என்னை இன்னும் இறுக்கி அணைத்தாள், விலகுவதா? அணைப்பதா என்ற குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் அவளின் அணைப்பும், நெருக்கமும் என்னை மேலும் ஸ்டுமுலேட் செய்ய, அவளை அப்படியே திருப்பி அணைத்து, அவளின் மார்புகளின் இடையே முகத்தை வைத்து முத்த்மிட்டு, அவளை அலேக்காய் அவளுடய பெட்ரூமுக்குள் தூக்கி சென்றேன். அவள் கண்களில் ஓரு பளபளப்பு இருந்தது. ஐந்து வயதில் ஓரு பையன் இருக்கிறான் என்றால் நம்புகிற மாதிரியா இருக்கிறாள் இவள்?. நல்ல உருவி விட்டாற்ப் போல் உடல்.. நல்ல உயரம்.. நிற்கும்போது அவளை பார்ததைவிட, படுத்திருக்கும் போது அவள்து நீளமான கால்களும், தொடைகளும், என்னுள் அனலை மேலும் தகிக்க வைக்க, அவள் கலைந்த...

விளையும் பயிரை…

Image
சம்மந்தமேயில்லாமல் திடீரென அந்த ஒன்வே  ரோட்டின் திருப்பத்திலிருந்து வந்த டிவிஎஸ் ஸ்கூட்டி என் வண்டியின் மீது இடித்து கீழே விழுந்தது. வண்டியை ஓட்டியது ஒரு பத்து வயதுக்குள்ளான சிறுவன். பையன் கீழே விழுந்ததில் உடலெங்கும் சிராய்ப்பு. என் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கச் சொல்லி அசுவாசப்படுத்திவிட்டு, இரண்டு வண்டியையும் ஓரம் கட்டி நிறுத்தினேன். அழுது கொண்டேயிருந்தான். இதற்குள் கூட்டம் கூடிவிட, சம்மந்தமேயில்லாமல் கும்பலில் ஒருவன் ”பார்த்து வரக்கூடாது சார்.. ராஷ் டிரைவிங்” என்று என்னை குறை கூற, சட்டென நிமிர்ந்து முறைத்தேன்.

நிதர்சன கதைகள்-27-அழுக்கன்.

Image
தமிழகத்தின் பிரபலமான தொடர் ஓட்டலின் ஃபாஸ்ட் புட்டில் பதினான்கு இட்லியும், ஒரு செட் பூரியும் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். வெளியே ஆக்ரோஷமாய் மழை பெய்து கொண்டிருந்த்து. மழைக்கு சூடான இட்லியை சாம்பாரில் முக்கி அதில் இரண்டு கரண்டி நெய் மிதக்க, இட்லியை ஸ்பூனால் உதிர்த்து, சாமபாரும் நெய்யும் கலந்து பேஸ்டாக ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டது மழைக்கு தேவாமிர்தமாய் இருந்தது. கடை மூடும் ராத்திரி நேரத்திலும் ஐம்பது பேர் நின்றிருந்தார்கள். சுவாரஸ்யமாய் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்த போது, ஷேவ் செய்யாத தாடியுடன், கொஞ்சம் அலங்கோலமாய், லுங்கி சட்டையுடன் அழுக்காய் ஒருவன் நின்றிருந்தான். அருகிலும் இல்லாமல் தூரமாகவும் இல்லாமல் அவன் நின்றிருந்த்தில் ஒரு ஜாக்கிரதைத்தனம் இருந்தது.

நிதர்சன கதைகள்-25-கருணை

Image
மாதவனுக்கு கசகசப்பாய் இருந்தது. கர்சீப்பை எடுத்து கழுத்து வியர்வையை துடைத்துக் கொண்டார். நிழலான இடமாய்ப் பார்த்து நின்றிருந்தாலும், நடு ரோட்டிற்கு ஓடி வண்டியை மடக்குவது என்பது ஒரு கொடுமையான வேலை. இப்படி ஓடிச் சென்று வழிமறித்து வண்டிகளைப் பிடிப்பது ஒன்றும் சுலபம் கிடையாது. சமயங்களில் வண்டிக்காரர்கள் கட் அடித்து இடித்துவிட்டுப் போய்விடுவதும் உண்டு. என்ன தான் நம்பர் நோட் செய்தாலும் ஒன்றும் வேலைக்காகாது. மாதவன் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள்.

நிதர்சன கதைகள்-24- தனுகு கொண்டாலம்மா..

Image
“உங்கள் கதையை படித்துவிட்டு என் மனைவி உங்களை பற்றி திட்டியதை சொன்னால் தூக்கு போட்டுக் கொண்டு விடுவீர்கள்.” என்ற ராஜாராமனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை பார்த்து எனக்கு ஆச்சர்யமாகிவிட்டது. ராஜாராமன் என் நண்பனுடய நண்பன். பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர். அவருடய கெஸ்ட் அவுஸில் தான் அன்றைய சாராய, சைட் டிஷ்ஷுகளுடனான இந்த பிரதான சந்திப்பு நிகழ்ந்தது. எடுத்து அடித்த முதல் ரவுண்டிலேயே இப்படி ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது. சில சமயங்களில் போதையின் போது பாராட்டுதலை விட இம்மாதிரியான கிரிடிஸிசம் நிறைய போதை தரும். ஒரு மிடில் ஏஜ் மாது அவனை விட குறைந்த வயதுடையவனுடன் ஏற்பட்ட உறவிற்கு காதலா? காமமா? என்று குழம்பி, காமத்தில் முடிக்கலாமா? என்று முடித்த கதையை பற்றித்தான் திட்டிக் கொண்டிருந்தார். “ஒரு விஷயத்தை படித்தால் அதனால் பல நல்ல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது நம் வாழ்க்கைக்கு வழி காட்ட வேண்டும். ஆனால் உங்கள் கதை என்ன செய்கிறது தெரியுமா? நாம் ஏன் அம்மாதிரி தவறை செய்யக்கூடாது என்று தூண்டுகிறது? இது சமுதாயத்தை கெடுக்காதா..? ”புத்தகம் படித்து ...

நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி

Image
என் முழு உடலையும் எதிரில் தெரியும் கண்ணாடியில் உற்று பார்த்தேன். புதிய சிகப்பு புடவையில் உடலின் வளைவுளும், செழுமைகள்  எல்லாம் கச்சிதமாய் தெரிய, “முப்பத்தி அஞ்சிலேயும் நீ அழகுதாண்டி” என்று மனதுக்குள் ஒரு சந்தோஷ மின்னல் வெளிச்சமாய் தெரிய, உடன் இந்த புடவையில சந்தோஷ் பார்த்தான்னா என்ன சொல்வான்? என்று மனதுள் ஓடிய அடுத்த வினாடி, மின்னல் ஆஃப் ஆகி அமைதியானேன். ”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.” “எனக்கும் தான் ” டபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது.  ’நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். பன்னிரெண்டு வயதில் ஒரு பையனை வைத்துக் கொண்டு… சே.. என்று தலையாட்டிக் கொண்டேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறேன். ஏன் இப்படி உடலெல்லாம் சுடுகிறது?. இந்த உணர்வை என்ன்வென்று சொல்வது? காதல் என்றா?. காதலிக்கும் வயசா இது..? ஏன் முப்பத்தைந்து வயதில் காதல் வரக்கூடாதா..? இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போனால் பையன் கேர்ள் ப்ரெண்டோடு வருவான்.  என்ன எதிர்பார்க்கிறேன்? எதை தேடுகிறேன்? இன்று நான் எடுத்த முடிவு சரியா? என்று பல குழப்பங்கள் ஓடினாலும், சிகப்பு நிற ஷிபான் உடலில்...

நிதர்சன கதைகள்–19- நாளைய இயக்குனர்.

Image
சினிமா கனவுகளின் ஆயிரம் வாயில்கள் நிறைந்த ஏரியாவில் கிட்டத்தட்ட வெளிக்கதவு உள்ள இடத்தில் அந்த அலுவலகம் அமைந்திருந்தது. ஒரு குட்டி ப்ளாட். அது ஒரு சினிமா சம்பந்தபட்ட கம்பெனி என்று வாசலில் விட்டிருந்த ஷூக்களையும், செருப்புகளையும் பார்த்தே தெரிந்து கொண்டேன். வாசலில் ஒரு மிக இளைஞன் ஓரமாய் நின்று தம்மடித்துக் கொண்டிருந்தான். பைக்கை வைத்து விட்டு உள்ளே யார் என்று பார்வையால் தேடிக் கொண்டிருந்த போது, அவன் சிகரெட்டை காலால் நசுக்கிவிட்டு “யார் சார்.. யாரை பாக்கணும்?” என்றான். “….. வரச்சொல்லியிருந்தாங்க..” ”அப்படியா.. வாங்க உள்ளே உட்காருங்க.. “ என்று சொல்லி ஒரு சேரை காண்பித்துவிட்டு, ஒரு கதவை திறந்து உள்ளே போனான். அது ஒரு சின்ன ஹால், இரண்டு சோபாக்களூம், சேர்களுமாய் இடத்தை அடைத்துக் கொள்ள, அங்கேயிருந்த டீவியில் டிவிடி முலமாய் அவர்களுடய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. சுவர் முழுவதும், நிகழ்ச்சி தொகுப்பாளர் படமும், சில போஸ்டர்களும் தெரிய, அறையிலிருந்து வெளிவ்ந்து வெகு இளைஞன், “உள்ளே போங்க” என்றான். நான் என் உடைகளை ஒரு முறை நீவி விட்டுக் கொண்டு, லேப்டாப்பை ஒரு முறை சரியாய் மாட்...

காளிதாஸ்

Image
காளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார். காளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர்.  நானும்  ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற  பெயரில் நடத்துகிறேன்.  இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள்  நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர்  மட்டும்தான்  மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும்  கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும்.  வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை  வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிரு...

நிதர்சன கதைகள்-12- நேற்று வரை

Image
எல்லோரும் இப்படித்தான் பார்ப்பார்களா..? என்ற கேள்வி என்னுள் எழுந்து கொண்டேயிருந்தது. அப்படி எழுந்தாலும் ரோட்டில் இறங்கியவுடன், கண்களும் மனதும் அதை தேடி அலையத்தான் செய்தது நேற்றுவரை. நான் செய்யும் காரியஙக்ள் எனக்கு கேவலமானதாகவோ, அவமானகரமானதாகவோ தெரிந்ததில்லை நேற்றுவரை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாய், இறுக்கமாய், உள்ளங்கை அளவாய், அளவுக்கதிகமாய், அபரிமிதமாய், டென்னிஸ்பந்தாய், தளர்வாய், சரிந்து சாய்ந்தாய், இருக்கா இல்லையா என்று கண்ணாமூச்சி காட்டு சிலதுமாய், டென்னிஸ் கோர்ட்டாய், அவைகளை பார்த்ததும் கிடைக்கும் போதையின் கிறக்கத்தை வேறு ஏதாவது தந்திருக்குமா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லியிருப்பேன் நேற்று வரை. பல சமயங்களில் என்னுள் ஏற்படும் கிளர்ச்சிகளுக்கு வடிகாலாய் அவைகள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒன்று.. என்று பார்தவைகளை வரிசை படுத்தியிருக்கிறேன்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிளர்ச்சியின் உ தரும் வித்யாச உச்சம். இவைகள் எல்லாமே எனக்கு அஃறிணைகளாகவே தேன்றியது  நேற்று வரை. இரவுகளின் ஓட்டத்தில், அங்கும் இங்கும் அலையும் வெளிச்சத்தின் ஊடே தெரியும், அந்த வெளிச்சத்திலிருந்து ...

நிதர்சன கதைகள்-10- ஆண்மனம்

Image
என்னுடய ஆபீஸுக்கு அருகில் ஆண், பெண், இருபாலர் படிக்கும் கல்லூரி ஒன்று இருக்கிறது.. கல்லூரிக்கு  இரண்டு கட்டிடங்களுக்கு முன் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. அந்த கல்லூரி வருவதற்கு முன் அங்கிருந்த ஆஞ்சநேயர் கோயிலில் கும்பலே இருக்காது. ஆனால் இப்போது அப்படியில்லை,  ஜகத்ஜோதியாய் கும்பல். கோயிலுக்கு காலேஜ் போகும் முன் பெண்கள் தினமும் வர, அதனால் அவர்களை தொடரும் பையன்களும் வர, இதற்கு நடுவில் காதலர்களுக்கு உதவும் ஆஞ்சநேயர் என்று புரளி கிளம்பிவிட, ஆஞ்சநேயருக்கு கொண்ட்டாட்டம் தான். தினமும், காலையிலும், மாலையிலும் கொத்து, கொத்தாக ஐஸ்கேண்டி பெண்கள் வருவதை, அவர்கள் என் ஆபீஸை கிராஸ் செய்வதை ஆபீஸ் ஜன்னலிலிருந்து பார்க்க, அக்னி நட்சத்திரத்திலும், இமாலய குளிர்ச்சியாயிருக்கும். அப்படி என்னதான் பேசுவார்கள், அவ்வளவு சிரிக்க, சிரிக்க, பின் தொடரும் பைன்களுக்கு லேசாய் சிக்னல் காட்டும் பெண், அதை பெருமையாய் தன் தோழிகளிடம் கிசுகிசுக்கும் பெண், போகிற போக்கில துரிதமாய் கட்டைவிரலில் புயல் வேக SMS அனுப்பும் பெண், எதை பற்றியும் கவலை படாமல் புத்தகத்தை தன் மார்போடு அணைத்து கொண்டு, நடக்கும் பெண், கும்பல...