கொத்து பரோட்டா 2.0-62
கொத்து பரோட்டா 2.0-62 கல்வியின் பெயரில் கொள்ளையடிக்கும் இன்ஞினியரிங் கல்லூரி என் மகனை பி.டெக் சேர்க்க பணம் கட்டிய போது கல்லூரி பஸ் வேண்டுமென்றால் 26-30 ஆயிரம் வரை சொன்னார்கள். கிலோமீட்டர் கணக்கிட்டு. அதுவும் ஆப்ஷன் தான் என்ன இப்போதே பணம் கட்டவில்லையென்றால் பின்பு பஸ் வசதியை பெற முடியாது என்ற லேசான பயமுறுத்தல் மட்டுமே இருந்தது. என் மகனின் நண்பன் எஸ்.எஸ்.என் கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு கல்லூரி பஸ் பீஸ் 46 ஆயிரம் ரூபாய். நீ பஸ்ஸில் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி.. 46ஆயிரம் பீஸ் கட்டியே தீர வேண்டும். அவனுடன் படிக்கும் பெண் கல்லூரியிலிருந்து நடக்கும் தூரத்தில் தான் வீடு. ஆனாலும் அவள் கல்லூரி பஸ்ஸுக்கு பீஸ் கட்டியாக வேண்டும் என்று வசூலிக்கிறார்கள். கல்லூரி பீஸுடம் இந்த தொகையையும் கட்டாயமாய் கட்டியே ஆக வேண்டும். கல்விக்கான தொகையே பெரும் பாராமாய் பெற்றோர்களுக்கு இருக்க, இம்மாதிரியான கட்டாய கொள்ளைகளை யார் தட்டிக் கேட்பது?. பெற்றோர்களும் நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தால் போதுமென்று கேள்வி கேட்க வழியில்லாமல் பணம் கட்டி விடுகிறார்கள். இது முதல் வருடம் மட்டுமல்ல நான்கு வருடங்களுக்கும் இத...