பண்ணையாரும் பத்மினியும்
80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றி கேபிள் சங்கர் குறும்படமாய் பார்த்த போது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்த படம். இவ்வளவு அருமையாய் மெல்லிய உணர்வுகளை குறும்படமாய் ஆக்கியிருக்கிறாரே.. இவர் நிச்சயம் நல்ல இயக்குனராய் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம். அதையே பெரிய படமாய் எடுக்க இருக்கிறார் எனும் போது கொஞ்சம் அச்சமாகவே இருந்தது. இதை ஒரு முறை விஜய் சேதுபதியிடம் கூட கூறினேன். இல்ல பாஸு.. ஸ்கிரிப்டை ரொம்ப மெச்சூர்டா பண்ணியிருக்காரு என்றார் நம்பிக்கையுடன். படம் பார்த்த போது நான் இயக்குனர் மீது வைத்த நம்பிக்கையும், விஜய் சேதுபதி வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை என்பது சந்தோஷமாய் இருந்தது. குறும்படம் பார்க்காதவர்களுக்கு இந்த டைட்டிலே ஆர்வத்தை ஏற்படுத்தும். வயதான பண்ணையாருக்கும், அவரது மனைவிக்குமிடையே ஆன காதல். பண்ணையாரின் பத்மினி கார் மீதான அப்சஷன் தான் படமே. ரத்தமும் சதையுமாய் உடனிருக்கும் மனைவியிடம் கொண்ட காதலை நம்முள் எவ்வளவு இயல்பாக கடத்த முடிகிறதோ அதே இயல்புடன் காரின் மீதான காதலையும் கடத்தியிருப்பது அப...