Posts

Showing posts with the label நன்றி

நெகிழ்வின் உச்சத்திலிருந்து….

போன ஜென்மத்தில்  நான் கடும் தவமோ, அல்லது ஏதோ ஒரு பெரிய புண்ணிய காரியமோ செய்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் இப்படியொரு நட்புகள் கிடைத்திருக்குமா.? உன் சந்தோஷம், என் சந்தோஷம் என்பது மட்டுமில்லாமல் உன் துக்கம், என் துக்கம் என  இரண்டு நாட்கள், எடுப்பதிலிருந்து, கரைப்பது வரை  கூடவே இருந்து, என் தந்தையை நல்லபடியாய் வழியனுப்பி வைத்த  பதிவுலக நண்பர்களுக்கு  நான் எப்படி நன்றி கூறுவது என்றே  தெரியவில்லை.  அப்படி நன்றி என்று ஒரு வார்த்தையில் முடிந்துவிடுகிற  விஷயமா அவர்கள் காட்டிய ஆறுதலும், அரவணைப்பும்.? உலகெங்குமிருந்து தொலைபேசியிலும், எஸ்.எம்.எஸ் மூலமாய்  ஆறுதல் கூறிய முகமறியா நெஞ்சங்களுக்கு என்ன நான் என்ன செய்துவிட்டேன். என் மீது இவ்வளவு அன்பு பாராட்டுவதற்கு? உங்கள் ஆறுதலும், அரவணைப்பும் என்னை மேலும் நெகிழ செய்கிறது. நிச்சயம் என் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார்,  நிம்மதியாய் இறைவனடி சேர்ந்திருப்பார் என்னை  தனியாய் விட்டு போகவில்லை என்ற  திருப்தியுடன்.  என்ன செல்வது என்று தெரியாத, புரியாத உணர்ச்சி பெருக்கில்,  நெகிழ்ச்சியின் உச்...