Posts

Showing posts with the label பஞ்சாபி தாபா

சாப்பாட்டுக்கடை

Image
பல நேரங்களில் பசிக்கு நாம் சாப்பிடும் போது ருசி பார்ப்பதில்லை. அப்படி ஒரு அவசரத்தில் பசிக்காக சாப்பிடும் போது அவ்வுணவு ருசியாய் அமைந்துவிட்டால் அத்தருணம் அருமையானதாகிவிடும். மீண்டும் மீண்டும் அவ்வுணவகத்தை தேடிப் போக வைத்துவிடும். அப்படி ஒரு பசி வேளையில் போய் இம்பரஸ் ஆன உணவகம் தான் சென்னை செனடாப் ரோடில் உள்ள தாபா எக்ஸ்பிரஸ் என்கிற பஞ்சாபி உணவகம். இவர்கள் மதிய வேளையில் 80 ரூபாய்க்கு அன்லிமிட்டட் வெஜ் பப்பே.. அளிக்கிறார்கள். போனவுடன் நாக்கூறும் சூடான ஜிலேபி. ஜிலேபியை சூடாக சாப்பிட்டிருக்கிறீர்களா?  தேவாம்ரிதமாய் இருக்கும். அதன் பிறகு நான், பட்டர் நான், புல்கா, ரோட்டி என்று கலந்து கட்டி ரோட்டி அயிட்டங்கள், அதற்கு இரண்டு சைட்டிஷ்கள், ஒரு ட்ரை, ஒரு க்ரேவி, ஒரு டால், அது மட்டுமில்லாமல் ஒரு சைனீஷ் சைட்டிஷ், ஒரு பிரியாணி ரைஸ்,அல்லது புலாவ், நூடூல்ஸ், வெறும் சாதம், தயிர்சாதம், ஊறுகாய், Salad என்று வரிசை கட்டி நிற்கும் உணவுகள். ஒவ்வொன்றும் ஒரு சுவை. சாப்பிட்டு விட்டு ஒரு லஸ்ஸியும் ஸ்வீட் பீடாவும் போட்டால்.. ம்ம்ம்ம்ம். டிவைன். இவை ரெண்டும் பப்பேயில் வராது. என்பது ரூபாய்க்கு அருமையான லஞ்ச...