பூ - திரைவிமர்சனம்
மனிதனின் வாழ்கையில் ஓவ்வொருவருக்கும் ஓரு கனவுகள், கற்பனைகள், நிஜ வாழ்கையில் ஓவ்வொருவரும் அவர்தம் கனவுகளை, கற்பனைகளை விட்டு கொடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மற்றவருக்காக விட்டு கொடுத்து அதனால் அவர் நன்றாய் இருப்பார் என்று நம்பி செய்த தியாகம் வீணாகும் போது வரும் துக்கம் மிகப் பெரிய சோகம். அந்த சோகம் காதலாய் இருந்தால்..? அந்த சோகத்தை இவ்வளவு எளிமையாய், ஒரு கிராமத்து காதல் கதையை வில்லன் இல்லாமல்,குத்துபாட்டு இல்லாமல்,இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், கவிதையாய் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் சசி. தமிழ்செல்வனின் “வெயிலோடு போய்” என்கிற சிறுகதையை திரைகதையாக்கி இருக்கிறார். முழுக்க, முழுக்க, கதாநாயகியை சுற்றியே வரும் கதை. அறிமுக நாயகி பார்வதிக்கு முதல் படமே பேர் சொல்லும் படமாய் அமைந்திருக்கிறது. மாரியம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். சந்தோஷம், கோபம், துக்கம், காதல், ஏக்கம், பிரிவு, என்று உணர்வுகளின் களஞ்சியமாய் மின்னுகிறார். புதியவர் என்று சொன்னால் நம்பமுடியாது. கதையின் நாயகன் தங்கராசுவாய் ஸ்ரீகாந்த். ஆம் கதையின் நாயகன் தான். முதலில் இந்த மாதிரியான ஹீரோயின் ஓரியண்டட் படத்தில் நடித்...