கொத்து பரோட்டா -1/12/12
காவியத்தலைவன் மின்சார வாரியத்தில் வேலை செய்து கொண்டே நாடகம், நடிப்பு, சினிமா என ஆர்வம் கொண்ட இரு இளைஞர்கள். இருவரில் ஒருவருக்கு எழுதுவதோடு, நடிப்பும், கொஞ்சம் வியாபாரமும் வரும். எனவே ஒரு அமெச்சூர் நாடக அமைப்பை உருவாக்கி, அதை மார்கெட் செய்ய ஒரு சபாவை நடத்த ஆரம்பித்து, அதில் தானும், நண்பரும் எழுதிய நாடகங்களை கதாநாயகனாய் நடித்து, அரகேற்றி தன்னையும், தன் நண்பனின் எழுத்தையும் மேடையேற்றி அழகு பார்த்தவர். நடிகராய் அவருக்கு அந்நாளில் கிடைத்த வெற்றியும், அதை சந்தைப் படுத்தியதால் அவர் நஷ்டம் அடைந்தாலும் கிடைத்த புகழ் வெறும் எழுத்தாளராய் இருந்த நண்பருக்கு கிடைக்கவில்லை என்று ஃபீல் செய்ய அரம்பித்தார். இதனால் பொறாமை ஏற ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களில் நடிக, இயக்குனர் சினிமா எடுக்கும் அளவிற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர, எழுத்தாள நண்பருக்கு பொறாமை காரணமாய் பிரிவு ஏற்பட்டு பின்னடைவு.