Posts

Showing posts with the label Hangover

Hangover

Image
மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நான்கு நண்பர்களில் ஒருவனது திருமணத்துக்கு ரெண்டு நாளுக்கு முன் லாஸ்வேகாஸுக்கு டிரிப் போக, ஓட்டலில் ஒரு பெரிய சூட்டை போட்டு தங்குகிறார்கள். ராத்திரி ஹோட்டலின் மொட்டை மாடியில் பார்ட்டியை ஆரமிபிக்க, விடிந்தால் ஹோட்டல் ரூமே கந்தர்கோளமாகியிருக்க, பாத்ரூமில் போனால் உச்சா போகுமிடத்தில் பச்சாவாக ஒரு புலி உட்கார்ந்திருக்க, வெளியே ஒரு சேவலும், கப்போர்டில் ஒரு குழந்தையும், ரூமில் உள்ள ஒருவனது பல் மொத்தமாய் போயிருக்க,  கல்யாண பையனை காணோம்.  சரி காரை கொண்டு போய் தேடலாம் என்றால் ஒரு போலீஸ் காரை ஓட்டல் நிர்வாகம் கொடுக்கிறது. இதைத்தான் நீங்கள் ராத்திரி ஓட்டி வந்தீர்கள் என்று. முதல் நாள் இரவு நடந்தது எதுவும் யாருக்கும் ஞாபகமில்லை அவ்வளவு மப்பு. சரி என்ன நடந்த்து என்று தேடிப்போனால் திடீர், திடீர் என ஒரு சைனீஸ் மாப்பியா கும்பல் ஒன்று துரத்துகிறது. இதற்கு நடுவில் மூவரில் ஒருவர் ஸ்டிரிப்பர் க்ளப்பில் உள்ள ஒரு பெண்ணை ராவோடு ராவாக திருமணம் செய்திருக்க, அ...