விகடனாரே.. இது ஞாயமா..?
விகடன் டாக்கீஸின் தயாரிப்பில் போன வாரம் வெளியான ”வால்மீகி” திரைப்படத்தை பார்த்தேன். படம் பார்த்து விட்டு நான் அதிர்ந்ததை விட கடைசியில் அவர்க்ள் போட்ட டைட்டில் கார்ட் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படி என்ன அதிர்ச்சி என்றால்.. படம் முடிந்தவுடன் ஸ்கோலிங் எண்ட் கார்டில் “A Film By Vikatan Talkies” என்று போட்டார்கள். என்னால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. a Film by என்று போட்டு கொள்வதற்கு அப்படத்தின் இயக்குனருக்கே உரிமை உண்டு. தயாரிப்பாளர்களுக்கு Vikatan Talkies Production, Vikatan Talkies Presentatiion. என்பது போல் வேண்டுமானால் போட்டு கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் எக்காரணத்தை கொண்டும் a Film By என்கிற இந்த கார்டை இயக்குனர் மட்டுமே போட முடியும். அந்த படம் நல்ல படமோ.. பெயிலியர் படமோ.. அதற்கு அப்பாற்பட்டது இந்த டைட்டில் கார்டு விஷயம். ஒரு இயக்குனர் தன் வாழ்நாளின் முக்கியமான காலத்தை, தன்னுடய உழைப்பை கொண்டு உருவாக்கிய கதையை.. தயாரிப்பாளரான இவர்கள் கேட்டு பிடித்த பட்சத்தில் அதை தயாரிக்க முடிவு ச...