Hurt Locker -2008
வாழ்வின் உன்னதமே வாழ்வதில் தான். ஆனால் தன் உயிரை பணயம் வைத்துத்தான் வாழ்க்கையே வாழந்து கொண்டிருப்பவர்களை பற்றிய படம். ஆறு ஆஸ்காரையும், 73 மற்ற விருதுகளையும், 46க்கும் மேற்பட்ட விழாவில் பரிந்துரைக்கப்பட்ட படம். ஜேம்ஸ்கேமரூனின் அவதாரை ஆஸ்காரில் ஓவர் டேக் செய்த படம் என்று பல பெருமைகள் உண்டு. ஜான் இராக்கில் நடக்கும் போரில் பாம் ஸ்குவாடில் சேருகிறான். அவனுடய டீமில் இன்னும் இரண்டு பேர். பாம்களை செயலிழக்க செய்வதில் விற்பனன். பயமில்லாதவன். ரிஸ்கெடுக்க தயங்காதவன். அரகண்ட் என்று பெயரெடுத்தவன். இன்னும் இருக்கும் 30 சொச்ச நாட்களுக்காக இந்த பட்டாலியனோடு சேர்ந்திருக்கும் ஜான் சந்திக்கும் பிரச்சனைகள், பாம்கள், அதன் பாதிப்புகள் என்று படம் நெடுக நம் இதயத் துடிப்பை நமக்கே கேட்கவைக்கிறார்கள். படத்தின் ஆர்ம்ப காட்சியில் ரிமோட் பாம் டி ஆக்டிவேட்ட்ர் வண்டி ஒடைந்து விழுந்ததால், ஒரு பாம் ஸ்குவாட் ஆள் உடைகளை மாட்டிக் கொண்டு அதை சரி செய்ய கிளம்ப, அவர் நடக்கும் ஒவ்வொரு அடியையும் பற்றி பேசியபடி அவர் பாமுக்கு அருகில் போய் நின்று அந்த வண்டியை சரி செய்து பாமை செயலிழக்க செய்யும் இடத்தில் வைத்துவிட்டு திரும்ப...