எது ஆபாசம்?
எது ஆபாசம்? சில மாதங்கள் முன்பு நண்பர் ஒருவர் தொலைபேசியிருந்தார். எடுத்த மாத்திரத்தில் “இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா?” என்றார். எனக்கு ஏதும் புரியவில்லை. என்ன என்று கேட்டதற்கு “நேற்றுதான் குடும்பத்தோடு வடசெனை படம் பார்த்தேன். மக்குகூதின்னு எல்லாம் வசனம் பேசுறாங்க. வயசு வந்த பொண்ணு பையன், பொண்டாட்டியோட போய் அசிங்கமா போச்சு. இதையெல்லாம் எழுத மாட்டீங்களா?” என்றவரின் குரலில் கோபம் கொப்பளித்தது. “ஏங்க அதான் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க இல்லை. நீங்களும் சினிமால இருந்திருக்கீங்க. உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த சர்டிபிகேட் கொடுத்த படத்துக்கு குழந்தைகளோட போகக்கூடாதுன்னு தெரியுமில்லை?” “என் பொண்ணு தனுஷ் பேன்.” “அதுக்காக அவர் எப்பவும் குடும்பத்தோட பார்குறா மாதிரியான படங்களில் தான் நடிக்கணுமா?” “ஒரு பெரிய ஆர்டிஸ்ட் படம்னா குடும்பத்தோட தான் சார். பார்பாங்க. லேடீஸ் எல்லாம் நெளியிறாங்க இல்லை” எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது. “லேடீஸுக்கு பிடிக்காதுன்னு நீங்க சொல்லாதீங்க. அவங்க அப்படி சொல்லைன்னா நீங்க அவங்கள தப்பா நினைப்பீங்கன்னு கூட அப்படி சொல்லி பழகியிருக்கலாம். முன்னய...