Posts

Showing posts with the label கோடம்பாக்கம்.

சாப்பாட்டுக்கடை- கறிசோறும் கல்தோசையும்

Image
சினிமா பட டைட்டில் போன்ற பெயருடன் ஒர் உணவகம். ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு எதிரே ஒரு காபி ஷாப்பின் அமைப்பில் இருந்தது.  கறிசோறுக்கும் இந்த டெக்காருக்கும் சம்பந்தமேயில்லை என்று யோசனை வந்தாலும் கறிசோறு என்றதும் நாவில் எச்சிலூற ஆரம்பித்துவிட்டது.   சிக்கன் சாதம் பெப்பருடன் வாசனை தூக்கியது. டிபிக்கல் ஹோம் மேட் டேஸ்ட்டுடன். மட்டன் சோறும் குட். மீன் சோறு, மாங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காய் எல்லாம் போட்டு அரைத்த குழம்பை கலந்த சோறு. அட்டகாசம். ரசத்தில் கொஞ்சம் பெப்பர் தூக்கல். தயிர் சாதம் மட்டும் மோர் சாதம் போல இருந்தது.  ரொம்ப நாளாய் ஊரை விட்டு வந்து நாக்கு செத்துப் போன பயலுவளுக்கு எல்லாம் இனி வேட்டை தான். ஏனென்றால் விலை வெறும் 100 தான். சைட்டிஷ்ஷாய் மட்டன் சுக்கா, நல்லி, மீன், நாட்டுகோழி, போட்டி என வகை வகையாய் வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கோழி அளவான மசாலாவோடு, செக்கு எண்ணைய் மணத்துடன், கார சாரத்தோடு அட்டகாசம். மட்டன் சூப், மற்றும் நாட்டுக்கோழி சூப் செம்ம.. காரம் மணத்தோடு.  மாலையில் கல் தோசை, கறி தோசை, இட்லி, மூளை பணியாரம் என...

சாப்பாட்டுக்கடை - EGGIES

Image
90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர் பேலியோ ஆரம்பித்ததிலிருந்து பெரும்பாலும் மதிய உணவு ஆம்லெட்டாகத்தான் இருக்கிறது. சமயங்களில் இரவு நேரத்தில் முட்டை பொடிமாஸ், அல்லது நான்கைந்து கலக்கி என டின்னர் முடிப்பது வழக்கம். அப்போதுதான் இந்த கடையை பார்த்தேன். வள்ளுவர் கோட்டத்திலிருந்து வடபழனி நோக்கி போகும் திசையில் கோடம்பாக்கம் பிரிட்ஜுக்கு முன் இடது புறம் இந்த கடை அமைந்திருக்கிறாது. எக்கீஸ் என்றதும் அட முட்டையை மட்டுமே வைத்து அயிட்டங்கள் செய்கிறார்கள் என்றதும் ஒரு நாள் போய் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.

சாப்பாட்டுக்கடை - நாட்டாமை பிரியாணி

Image
பாப்தாவில் பணியாற்றும் நம்ம பையன் ரகோ ஒரு நாள் மதியம் எல்லாருக்கும் சாப்பாட்டுக்கடை காட்டூறீங்க இல்லை உங்களுக்கு ஒரு கடை காட்டுறேன்னு அழைத்தான். “இல்லடா தம்பி நான் டயட்டுல இருக்கேன் அதனால சாப்பாடு எல்லாம் சாப்பிடலை ஆனா கடைய பாத்துக்கறேன்”னு சொல்லி அவனோட போனேன். ஆற்காட் ரோடுல பழைய ராம் தியேட்டர் தாண்டி, வடபழனி நோக்கி போற வழியில இடது பக்கம் இருந்திச்சு இந்த “நாட்டாமை பிரியாணி”. உள்ளே போன அடுத்த நிமிஷம் “அண்ணே வாங்கண்ணே’ என்ற ஆர்பாட்டமான வரவேற்பு. யாருடா என்ற யோசனையுடன் பார்த்தால் கடையின் ஓனர். அவர் நம்ம வாசகராம்.