சாப்பாட்டுக்கடை - நாட்டாமை பிரியாணி

பாப்தாவில் பணியாற்றும் நம்ம பையன் ரகோ ஒரு நாள் மதியம் எல்லாருக்கும் சாப்பாட்டுக்கடை காட்டூறீங்க இல்லை உங்களுக்கு ஒரு கடை காட்டுறேன்னு அழைத்தான். “இல்லடா தம்பி நான் டயட்டுல இருக்கேன் அதனால சாப்பாடு எல்லாம் சாப்பிடலை ஆனா கடைய பாத்துக்கறேன்”னு சொல்லி அவனோட போனேன். ஆற்காட் ரோடுல பழைய ராம் தியேட்டர் தாண்டி, வடபழனி நோக்கி போற வழியில இடது பக்கம் இருந்திச்சு இந்த “நாட்டாமை பிரியாணி”. உள்ளே போன அடுத்த நிமிஷம் “அண்ணே வாங்கண்ணே’ என்ற ஆர்பாட்டமான வரவேற்பு. யாருடா என்ற யோசனையுடன் பார்த்தால் கடையின் ஓனர். அவர் நம்ம வாசகராம்.



அவர்களுடய ஸ்பெஷல் பிரியாணியை ஆர்டர் செய்தான் ரகோ. நான் டயட்டிலிருப்பதால் கொஞ்சூண்டு டேஸ்டுக்கு மட்டும் கொடுங்கள் என்றேன். அருமையான வாசத்துடன் சீரக சம்பா பிரியாணி வந்தது. எனக்கு வந்த கைப்பிடி பிரியாணியில் ரெண்டு பீஸ் மட்டன். வாசகரின் அன்பு தெரிந்தது. கைகளில் ஒட்டாத, பட்டை லவங்கம் வாசமும், மசாலாவும் நாசியிலும், நாக்கிலும் ஏறி தாண்டவமாடாத, அருமையான பிரியாணி. கறி நன்கு வெந்திருந்தது. சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்டு பிரபலமாய் இருக்கும் பிரியாணிக்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அம்பூட்டு சிறந்த சுவை. மட்டன் சுக்கா ஆர்டர் செய்திருந்தோம். நன்கு சிறு சிறு துண்டுகளய வெட்டப்பட்ட கறியை நன்கு வேகவைத்து, நல்லெண்ணெயில் வதக்கி, சின்ன வெங்காயம் என்று நினைக்கிறேன் அதை போட்டு வதக்கி கொடுத்தார்கள். வாவ்.. வாவ்.. டிவைன்.

நாட்டுக்கோழியை கொஞ்சம் டேஸ்ட் பார்க்க கேட்டேன். செம்ம. எனக்கு பிடித்திருந்தது. நன்கு வெந்த கோழியும், கொஞ்சம் தொக்காய் லைட்டான கிரேவியுடன் தக்காளி, வெங்காய காம்பினேஷன் அருமையாய்  இருந்தது. இவர்களது ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட், நெஞ்செலும்பு சூப் எல்லாம் தனித்துவமாய் இருந்தது. ரசம். ஓகே. மீன் குழம்பும், சிக்கன் குழம்பும் கொஞ்சம் நீர்த்து இருந்தது. சுவையாய் மீன் குழம்புக்கும், மீனுடன் கிடைக்கும் குழம்புக்கும் வித்யாசம் இருக்கும் போல. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாய் இருந்தது. அதைச் சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாய் செட்டிலாகிவிடும் என்றார்கள். அடுத்த முறை சென்ற போது செட்டிலாகியிருந்தது அவர்களின் முயற்சியை காட்டியது.

சென்னையில் சமீபத்திய வரவான நாட்டாமை பிரியாணி. சீரக சம்பா பிரியாணியில் சிறப்பாக இருக்கிறது. முக்கியமாய் தால்சாவை கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கு. உடன் கிளம்பும் போது அவர்கள் கொடுக்கும் பீருணியும், வறுத்த ஸ்வீட் சீவலும் க்யூட்.  முக்கியமாய் விலையும் ஓரளவுக்கு நியாயமாய் இருப்பது சிறப்பு. ஒரு முறை ட்ரை பண்ணுங்க.
கேபிள் சங்கர்

Comments

Balamurugan said…
Dear Mr. Sankar

Really you enjoy and write all your postings

I AM LIVING IN BHRAIN AND doing my own business in the field of Electrical

We have our Own restaurant which is rated First Class in Bahrain

Since we do not have knowledge about food business

We are looking for a Partner or Chain to mange the restaurant in Profit Sharing basis.

Pls let me know if anybody or any restaurant chain is interested

Bala
Unknown said…
#சுட்டதும் தப்பு, திருடனதும் தப்பு.#
தமிழின துரோகியே தமிழ் காற்றை
சுவாசித்து தமிழனக்கு துரோகமா. அண்ணன் வீராமணி தாலி மாட்டுக்கரிண்னு அவர் பொழப்பு க்கு வழி பண்ணிண்டார் .. ஈழ
தமிழினா துரோகியே தமிழ் காற்றை
சுவாசித்து தமிழனாக்கு துரோகமா. அண்ணன் வீராமணி தாலி மாட்டுக்கரிண்னு அவர் பொழப்பு க்கு வழி பண்ணிண்டார் .. .. ஈழ தமிழர் புஶ் ஆகி கொண்டே போவதால், கடவுள் அனுப்பிய திருப்பதி தமிழர் பிரசினாயை ஊத விடமாட்டீர்களா தமிழன துரோகிகலே
ஐயா..நானும் பஹ்ரைன் தான். நீங்க எந்த ரெஸ்டாரெண்ட்ன்னு சொல்லியிருந்தீங்கன்னா உபயோகமாக இருந்திருக்கும்.

நிறைய சமயம், பிளாக்குல ரொம்ப நல்லா இருக்குன்னு போடறது நேர்ல சாப்பிடும்போது அந்த ஃபீலிங்க் வர்றதில்லை
Balamurugan. pl do call me @ 9840332666 reg ur business proposal

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்