Posts

Showing posts with the label சூது கவ்வும்

சூது கவ்வும்

Image
மொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் வலம் வந்து கொண்டிருக்கும் சி.வி.குமாரின் மூன்றாவது படைப்பு.  பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற ஹிட் படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவரும் படம். நாளைய இயக்குனர் வெற்றியாளர் நலன் குமரசாமியின் இயக்கத்தில் வெளிவரும் படம். ஸ்டூடியோ க்ரீனின் அபாரமான, பப்ளிசிட்டி வேறு எதிர்பார்புக்கு கேட்க வேண்டுமா? 

கொத்து பரோட்டா- 01/04/13

Image
மஹாராஷ்ட்ரிய எம்.எல்.ஏக்கள் இருவர் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் சரணடைந்து பின்பு ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்கள். ஓவர் ஸ்பீடில் போனதற்காக அந்த இன்ஸ்பெக்டர் தடுத்து கேஸ்போட்டு பைன் போட்டிருக்கிறார் அதனால் அவரை அடித்து துவைத்திருக்கிறார்கள் பட்டப் பகலில். இந்த ப்ரச்சனையை மீடியா கையிலெடுத்தப் பின் அவர்களிடம் பேட்டி எடுத்த டிவி நிருபர் கடுப்பாகிவிட்டார். “என்ன நீ அடிச்சியா? என்ற ரீதியில் நிருபர் கேட்ட கேள்வியையே மீண்டும் மீண்டும் பேசி குழப்பினார். அரசியல்வாதிகள் நினைத்தால் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை இம்மாதிரியான சமயங்களில் மீடியாக்கள் கையில் எடுத்துக் கொண்டு வெளிக் கொண்டு வருவதை நான் ஆதரிக்கிறேன். @@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா - 25/02/13

Image
தமிழ் இணைய உலகில் முதலாய் 65 லட்சம் ஹிட்ஸுகளுக்கு மேல் வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், வலையுலக நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். - கேபிள் சங்கர் இதோ இன்னொரு மரணம். ஆசிட் வீச்சினால் மரணமடைந்த பெண்களின் லிஸ்டில் விநோதினிக்கு பிறகு வித்யா. இருவரின் பிரச்சனையும் ஒரு தலை காதல் தான். விநோதினியின் பிரச்சனையில் ஒரு தலை காதல் என்றால் வித்யாவின் பிரச்சனை திருமணம் செய்ய மறுப்பு. இதுவும் ஒரு வகை காதல்தான். தான் விரும்பிய பெண்ணை அடைய முடியவில்லை என்றால் அவள் வாழக்கூடாது என்ற வெறி. பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது. பெண் ஒழுங்காக இருந்தாலும், அவளின் மீது ஒரு தலை காதல் வயப்பட்டவன் அவள் கிடைக்கவில்லையே என்ற வெறியில் ஆசிட் ஊற்றாமல் இருக்க வேண்டுமே என்று பயந்து நடுக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும் போல. ஆசிட் வீசியதால் சம்பந்தப்பட்ட ஆணின் வாழ்க்கையும் பாழாகிப் போகப் போகிறது. அதைப் பற்றி எதையும் யோசிக்காத அளவிற்கு காதல், வெறி வரக் காரணம் என்ன? நம் சமூதாயம் என்று தான் சொல்ல வேண்டும். சமூதாயத்தை நம்ம ஒருத்தரால மாத்த...