சாப்பாட்டுக்கடை -SKM Foods- Vadapalani
50 ரூபாய்க்கு அன்லிமிடெட் வெஜ் அண்ட் நான் வெஜ் சாப்பாடு என. நண்பருடன் அந்த ஏரியாவுக்கு போன போது ரொம்பவே சின்னக் கடை தான். ஒரே ஒரு இளைஞர் ஒரு சின்ன இடத்தில் சுற்றிலும், முட்டை தொக்கு, சிக்கன் 65, பெப்பர் சிக்கன், சாதம், சிப்ஸ், சிக்கன், மீன் குழம்பு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, நெய் சோறு, வெஜ் பிரியாணி, சோறு என சுற்றிலும் ஜலதரங்க வித்வான் போல சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார். முதலில் சாப்பாடு ஆர்டர் செய்தோம். தட்டு நிறைய நல்ல சாப்பாடு, கீரை, சிக்கன் குழம்பு ஊற்றிக் கொடுத்தார்கள். கூடவே தொட்டுக் கொள்ள சிக்கன் 65யும் பெப்பர் சிக்கனும் ஆர்டர் செய்திருந்தோம்.அதிக காரமில்லாத அருமையான குழம்பு. அடுத்த ரவுண்டுக்கு மீன் குழம்பு இருக்கிறது என்றார். சரி அதையும் ஒரு டிரை செய்து விடுவோம் என்று குழம்பு ஊற்றச் சொல்ல, சார் சாப்பாடு குறைவா இருக்குனு சொல்லிட்டே இன்னும் கொஞ்சம் சோறு வைத்து குழம்பை ஊற்றினார். அதிக காரம் இல்லாத மீன் குழம்பு. வீட்டு முறைப்படி டேஸ்டில் உடன் தொட்டுக் கொள்ள வைத்த பெப்பர் சிக்கனின் கிரேவியும் சரி, சிக்கனும் சரியாய் வெந்து பெப்பர் மசாலாவுடன் கலந்தி...