Posts

Showing posts with the label நாவல்

24 சலனங்களின் எண். விமர்சனம் -9

Image
 24 சலனங்களின் எண் நாவல் குறித்து இயக்குனர் வசந்தபாலனின் பேச்சு.

பெர்முடா - விமர்சனம் -5

Image
  #பெர்முடா விமர்சனம்#5 ரமணா படத்துக்கு ஏன் விஜய்காந்தை தேர்ந்தெடுத்திங்கங்கன்னு முருகதாசை கேட்டப்ப "கிளைமாக்ஸ்ல எல்லா ஸ்டூடன்ட்ஸயும் பாத்து மெசேஜ் சொல்ற மாதிரி ஒரு சீன், அதை சொல்ல சில நடிகர்களுக்கு மட்டும்தான் மாஸ் இருக்கு, கேப்டன் அதுல முக்கியமானவர். அந்த சீனுக்காகத்தான் அவரை முடிவு பன்னேன்" னு சொல்லிருப்பார். ஒரு வசனத்தை யார் சொன்னா நல்லாருக்கும்ங்கற மாதிரிதான், சில கதைகளையும் சிலர் சொன்னாதான் நல்லாருக்கும். சிலரால மட்டும்தான் அந்த கதைகளை சொல்லவே முடியும். பெர்முடா முக்கோணத்தை பத்தி கேள்விப்பட்டுருப்போம். பக்கத்துல போன எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்துரும். காரணமே புரியாம காணாம போனவங்க அதிகம். அதே மாதிரி ஆம்பளைங்க தொலைஞ்சு போற இன்னொரு முக்கோணம் இருக்கு. அதுக்கும் பெர்முடாவுக்கும் கூட சம்பந்தமிருக்கு. சரி கதைக்கு வருவோம். களம்னு பார்த்தா பொருந்தா காமம். அறுபது வயசு வரைக்கும் பொண்டாட்டி தமயந்தி பேச்சை தட்டாம காதலையோ காமத்தையோ வகையா அனுபவிக்காத சாம்பசிவராவ் வாழ்க்கைல எதிர்பாராத விதமாக அவர் இத்தனை நாள் தவறவிட்டதெல்லாம் கிடைக்க ஆரம்பிக்குது பொண்டாட்டிக்கு உடம்பு சரியல்லாம...

பெர்முடா - விமர்சனம்-4

Image
  Sumana 5.0 out of 5 stars   A must-read writer. Reviewed in India on 10 November 2019 Cable Shankar is a gripping writer with so much passion that reflects in his writing. A very easy language employed to make The readers experience the writing with more images of their own. He is a "go-to" and a very important writer of the present generation. Bermuda   Kindle link https://amzn.to/3mQCgxA Bermuda Book Link: https://amzn.to/3lRilx0

24 சலனங்களின் எண்- விமர்சனம் -9

Image
  நன்றி கமலக்கண்ணன். 24 salanangalin enn kindle link: https://amzn.to/3gpEOAj 24 Salanangalin Enn Book Link: https://amzn.to/36MqX3Y

24 சலனங்களின் எண். விமர்சனம்-8

Image
  சினிமா உலகின் பிண்ணனியில் நடக்கும் நாவல். சமகால சினிமாவைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம் என சொல்லலாம். சினிமா உலகில் இருக்கும் போட்டிகள், துரோகங்கள், வன்மம், வெற்றிக்காக படும் அவமானங்கள், இழப்புக்கள் எல்லாவற்றையும் ரத்தமும் சதையுமாக, ஆழமாக எழுதியிருக்கிறார் கேபிள் அண்ணன். அவருடைய பரந்த அனுபவமும் இதற்கு முக்கிய காரணம். அதே நேரம் - இவை அனைத்தையும் மீறி இங்கிருக்கும் நட்பு, உழைப்பு, நல்ல மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். சினிமாவில் புதிதாக நுழையும் உதவி இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். நிறைய புரிதல்களை கொடுக்கும். நன்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

நான் ஷர்மி வைரம்-விமர்சனம் -4

Image
  நான் ஷர்மி வைரம். விமர்சனம் #4 எனது பார்வை புதினம்: நான் ஷார்மி வைரம் (A) எழுத்தாளர்: கேபிள் சங்கர் ( எ) Cable Sankar விலை: ரூபாய். 200/- Kindle: https://www.amazon.in/dp/B07WNCTQF6 டிஸ்கி:. எழுத்தாளரே கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு என்பதை உணர்த்த தலைப்பை விட பெரிய (A) சான்றிதழ் தந்துள்ளார். அதனால் கலாச்சார போராளிகள் வேறு இடம் பார்க்கவும். நண்பர் கேபிள் சங்கர் - வியாபாரம், எழுத்தாளர், விநியோகிஸ்தர், விமர்சகர், இயக்குனர் என்ற பன்முகம் உள்ளவர். வலைதளத்தின் (blog) தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான நபர். இவரின் எழுத்துப்பாணியை அவர் மானசீக குருவாக மதிக்கும் எழுத்தாளர் சுஜாதாவைப் போல ஒரு பாணியில் வகைப்படுத்த முடியாது. இவரின் இந்த கதை - இலக்கிய வகையை சார்ந்ததா என்ற கேள்விக்கு நமது பதில் - ஆம், இது வெகுஜன இலக்கியம். இந்த கதை, பாலியல் களத்தை பின்புலமாகக் கொண்டது. சந்தர்ப்ப சூழ்நிலையால் விலைமகனாகும் ஒருவன் - ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தினால் விலைமகளாகும் ஒருத்தியின் மேல் காதல் கொள்ள , அதை வைரம் என்ற சூது கவ்வ - துரோகம், குரோதம், கொள்ளை , விளைவு - என ஒரு அசத்தல் புதினம். முதலில் எழுத்தாளருக...

24 சலனங்களின் எண். விமர்சனம் -6

Image
  24 சலனங்களின் எண் விமர்சனம் #6 நண்பர் கேபிள் ஷங்கர் எழுதிய 24 சலனத்தின் எண் என்ற திரைத்துறை சார்ந்த நாவல். திரைக்கடலில் நீச்சல் அடிக்க துடிக்கும் அனைவரும் படிக்க வேண்டும். இரு தயாரிப்பாளர் இரு நாயகர் இரு நாயகியர் ஒரே ஒரு ஆபீஸ் பாய் என அனைவரும் இந்த தேரை இழுத்துச் செல்கின்றனர். திரை துறை சார்ந்த நண்பர்கள் படித்தால் அவர்கள் சந்தித்த நபர்கள் போலவே இருக்கும். எனக்கும் அப்படியே... சில இடங்களில் அசைவ வரிகள் தவிர்த்து இருக்கலாம் கேபிள் சங்கர். .கணவன் கனவை பூர்த்தி செய்ய நின்ற படத்தை முடிக்கும் திருமதி மணி அவரை மதிக்கிறேன்.அவ்வப்போது அபயக்குரல் தரும் ஆபிஸ் பாயை நேசிக்கிறேன்.சினிமாவைத்தேடுவோர்க்கு இது சிறந்த கூகுள் மேப்..இந்த நாவலை கம்பி மத்தாப்பு போல் ஜாக்கிரதையாக கொளுத்தி உள்ளார். அடுத்த நாவல் லஷ்மி வெடியாய் வெடிக்க வாழ்த்துக்கள். நன்றி இயக்குனர், எழுத்தாளர் நடிகர் E Ramdoss

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -3

Image
வெப் சீரிஸ் என்ற ஒரு வஸ்து அறிமுகமாவதற்கு முன்பே அதற்கான கண்டண்டாக பிரபல வார இதழ்களில் வெளியாகும் தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் கேபிள் சங்கர் வலைப்பதிவில் வந்து பாதியில் நின்ற 'நான் ஷர்மி வைரம்' நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே நீண்ட இடைவெளிக்குப் பின் தந்தாலும் அதன் சுவை குறையவே இல்லை. 'நான் ஷர்மி வைரம்'தலைவரின் வலைப்பூ வாசகர்களின் ஜாங்கிரி அதை அப்படியே சாப்பிட்டு விடுங்கள். கடலூர் ஜெயப்பிரகாஷ்.

பெர்முடா - விமர்சனம் -1

Image
  பெர்முடா. விமர்சனம்#1 மூன்று புள்ளிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணங்களை இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள். உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். நீந்தி கரை சேர்கிறார்கள். சிலர் தெளிகிறார்கள். சிலர் காணாமல் போகிறார். எல்லாமும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. கேபிளாருக்கு கதை சொல்ல வருகிறது. அதையும் பர பர என சொல்ல வருகிறது. மசாலா தூவி தூவி திகட்டாமல் சொல்லத்தெரிகிறது. படித்து முடிக்கும்போது அதுவரை படம் பார்த்துக்கொண்டிருந்த உணர்வு வருகிறது. உண்மையைச் சொன்னால் மூண்று நாவல்களுக்கான களங்கள் இதில் உண்டு. வெற்றிபெற வாழ்த்துக்கள். Mohan Balu Thx sir

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -2

Image
  பு(து)த்தகம் நான் ஷர்மி வைரம் (A) நாவலுக்கு A சர்டிஃபிகேட் கொடுத்தமைக்காகவே எழுத்தாளர் கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள் . சாதாரண வைர கொள்ளை கடத்தல் தான் நாவலின் கரு.ஆனால் அதை மிகவும் ரசிக்கும் படியாய் காமத்தோடு கதையையும் எழுதியிருப்பது தான் மிக சிறப்பு.1998 - 2000 வாக்கில் எப்பொழுதோ கேள்விபட்டிருக்கிறேன் கோவாவில் ஆண் ஐட்டங்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.வெளிநாட்டினரோடு செக்ஸ் வைத்துக் கொண்டு பணமும் மகிழ்ச்சியையும் பெறுவர் என்று. அவர்களின் பெயர் ஜிகிலோ என்று இன்றைக்குத் தான் அறிந்து கொண்டிருக்கிறேன்.சென்னையில் இதற்கென ஒரு கூட்டமே இயங்கி வருவதை கண்டு மனம் அதிசயமும் ஆச்சர்யமும் அடைகிறது.கேபிள் சங்கர் தன் வசீகர எழுத்தில் இவர்களின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக எழுதி இருப்பதை பார்க்கும் போது கதை தானே என்று ஒதுக்கி வைக்க முடியவில்லை. மிகவும் டிடெய்ல்டு ஆன நாவல்.கதையும் விறுவிறுப்பாகவே செல்கிறது. நான் என்கிற ராஜன், ஷர்மி என்கிற பெண், வைரம் என்கிற ஆள் அல்லது வைரக் கடத்தலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.மூவரையும் தனித்தனியாய் விவரித்துக் கொண்டு ஒற்றைப் புள்ளியில் இணைத்து பின் கதையை ஆச்சர்யத்...

பொண்டாட்டி - ஒர் அலசல் (நீ எவண்டா பொண்டாட்டிகளை அலச)

Image
அராத்துவின் புதிய நாவல் வரப்போகிறது என்பதை பல விதமான மார்கெட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தி இந்த புத்தக திருவிழாவுக்கு வெளியிட்டார்கள். ஆன்லைன் ப்ரீ புக்கிங். டிஸ்கவுண்ட் புக்கிங். கிண்டில் என எல்லா இடத்தில் நல்ல விற்பனை என்றும் கேள்விப்பட்டேன். நான் இதை எழுதுவது   பொண்டாட்டியின் விற்பனையைப் பற்றி கூற அல்ல.   பொண்டாட்டி நாவலைக் குறித்து பேச. பொண்டாட்டி ஒரு செக்ஸ் நாவலா? என்றால் ஆமாம். பொண்டாட்டி ஒரு ஆணாதிக்க நாவலா? என்.. ஆமாம். பொண்டாட்டி எப்போதும் புதிராகவே இருக்கும் பெண்களைப் பற்றி, அவர்களின் பர்வர்ஷன் பற்றி, தடுமாற்றங்களைப் பற்றி, ஆசாபாசங்களைப் பற்றிய மனோதத்துவமான பதிவா? ஆமாம். யாரு யாருக்கு உறவுன்னு நானாறு பக்கத்தையும் மாத்தி, மாத்தி புரட்டியே தாவூ தீர்ந்து போச்சு. வடசென்னை கேரக்டர் மேப்பை விட மோசம். இது மயிரு நாவல். ஃபேக் நாவலில்லை ஃபோர்ன் நாவல். அபீஷியலான மஞ்சள் பத்திரிக்கைத்தர நாவலா? புத்தகம் படித்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் வழக்கொழிந்து விட்டநிலையில் அதற்காக நானூறு பக்க புத்தகம் தேவையா?  இது இலக்கியமா? இல்லை. அராத்துவின் பர்வர்ஷன். அவர் பார்த்த, ஒழுத்த ...

நீர் - நாவல் விமர்சனம்

நீர் – நாவல் விநாயக முருகன் சென்ற வருட டிசம்பர் வெள்ளத்தை சென்னை வாசிகள் யாரும் மறந்திருக்க முடியாது. மறக்கக்கூடிய விஷயமா அது?. அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பல பேர் தங்களுடய அனுபவங்களை முகநூலிலும், இணைய தளங்களிலும் எழுதி வந்தார்கள். செயற்கையாய் ஏற்படுத்தப்பட்ட இயற்கை  பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அச்சமயத்தில் உயிர்மையில் ஒரு கட்டுரை கூட எழுதினேன்.  இந்த வெள்ளம் பல பேரின் உள்ளக் குமுறலை, ஆதங்கத்தை, தவிப்பை, பல வழிகளில் வெளிக் கொண்டு வந்திருக்க, இதோ இப்போது எழுத்தாளர் விநாயக முருகன் ‘நீர்” என்கிற நாவல் மூலமாய் தன் எண்ணங்களை வடித்திருக்கிறார். மழை ஆரம்பித்ததிலிருந்து, சின்னச் சின்ன விஷயங்களாய் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதில் ஆரம்பித்து, மெயின் ரோட்டின் வழியாய் சாக்கடை தண்ணீரில் போக முடியாமல் பின் பக்கத்து வீட்டு சந்திராவின் வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாய் எகிறி குதித்து போவதும், சந்திரா, ஜே.கே, ஆர்.வி, குயில், போன்ற கேரக்டர்கள். தனிமை கொடுக்கும் காமம்.  வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிர் பயம். அதனால் ஏற்படும் மனக்குழப்பங்க...