Posts

Showing posts with the label அச்சமுண்டு

அச்சமுண்டு..அச்சமுண்டு – திரைவிமர்ச்னம்

Image
  அருண் வைத்யநாதன் என்கிற அமெரிக்க வாழ் தமிழர் இயக்கத்தில் முழுவதும் அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்டு வ்ந்திருக்கும் படம். ப்ரசன்னாவும், சிநேகாவும் தங்கள் ஒரே பெண் குழந்தையுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். புதிதாய் குடியேறிய வீட்டில் பெயிண்ட் அடிக்க வரும் வெள்ளைக்காரனால்  அவர்களின் பெண் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தான் படம் சொல்கிறது. ப்ரசன்னாவும், சிநேகாவும் அந்நியோன்யன் என்றால் அவ்வள்வு அந்நியோன்யம் அவர்களூக்குள் ஏற்படும், காதலாகட்டும், ஸ்மூச்சிங்காகட்டும்,  கோபமாகட்டும், ஊடலாகட்டும்.. வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். வில்லனாக வரும் ஜான் சீ யின் நடிப்பு கச்சிதம். படத்திற்கு முக்கிய பலமே ஒளிப்பதிவாளரும், இசையமைபபாள்ர் கார்த்திக் ராவும் தான். பிண்ணனி இசையில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார்.  செளம்யாவின் குரலில் வரும் நித்ரா பாடல் நெகிழ்வு. இயக்குனர் மிக குறைந்த ஆர்டிஸ்டுகளை வைத்து கோடு போட்டது போன்ற் ஒரு திரைக்கதையுடன் படத்தை எடுத்துள்ளார். ஆனால் படு ஸ்லோ..  என்னதான் காட்சிகளில் நடிகர்கள் நன்றாக நடித்தாலும், எவ்வளவு நேரம் தான் ...