என் ஆதர்ச இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு, உங்களது முதல் படத்திலிருந்து உங்களை ரசித்து வரும் ரசிகன் என்கிற முறையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். உங்களது முதல் படமான பகல்நிலவுக்கு முன் நீங்கள் எடுத்த பல்லவி அனுபல்லவியை பெங்களூருக்கு சென்று பார்த்தவன் நான். அடுத்து வெளியான பகல் நிலவைப் பார்த்துவிட்டு அட தமிழ் சினிமாவில் இவ்வளவு சாத்வீகமாய் வயலன்ஸை சொல்ல முடியுமா? என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அடுத்தடுத்து மெளனராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, என்று வளர்ந்து, ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால்,தில்சே, இருவர், குரு, போன்ற படங்களில் சில படங்கள் ஓடாவிட்டாலும் இன்றைக்கும் திரும்பத் திரும்ப டிவிடியில் பார்த்து ரசிக்கும் ரசிகனின் புலம்பல்தான் இது.உங்களை துரோணராக ஏற்றுக் கொண்டு வளைய வரும் பல ஏகலைவன்களில் நானும் ஒருவன்.